Digana News

Digana News

Tamil News Services Kandy

29/12/2023

இது ஒன்றும் பாடசாலை மாணவர்கள் அல்ல. 1980 க்கு முற்பட்ட காலங்களில் இலங்கை மக்கள் அவர்கள் ஆடைகளை வெண்ணிற ஆடைகளாகவே தேர்ந்தெடுத்து அணிந்தார்கள். அன்று வாழ்ந்து மக்களின் ஆடைகளை போலவே அவர்கள் உள்ளமும், மனசும் வெண்மையாக இருந்து. நாங்கள் சிலோனியர்கள் (ceylon) நாட்டை சேர்ந்தவர்கள் என்று பெருமையாக பேசிக்கொல்வார்கள். வீடுகளில், பிராயானங்களில், வைபோகங்களுக்கு எல்லாம் வெண்ணிற ஆடைகளைத்தான் அணிவார்கள். தந்தையர்கள் திருமண வைபோகங்கள், உறவினர்கள் தூரத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் போதும், நகரங்களுக்கு முக்கிய காரணங்கள் அதிகாரிகள் சந்திக்க செல்லும் போதும் தந்தையர்கள் வயதான பாட்டனார்கள் வெள்ளை சாரம் (லுங்கி) அணிந்து அதுக்கு பெரிய மணிப்பேஸ் உள்ள பெல்ட் பட்டி அணிந்து கருப்பு நிற கோட்டு போட்டு கம்பீரமாக செல்வார்கள். இந்த காட்சியை நீங்கள் கண்டு இருக்கலாம் காணாதவர்கள் உங்கள் தாய் தந்தையிடம் கேட்டுப்பாருங்கள்.
இன்று உங்கள் தந்தை அப்படி உடுத்து இருக்க மாட்டார்கள் ஆனாலும் அவர்களின் தந்தை இப்படித்தான் உடுத்து செல்வார்கள் என்று உங்கள் பெற்றோர்கள் நிச்சயம் சொல்வார்கள். இந்த காட்சிகள் நேரில் கண்டவர்களுக்கு அந்த நினைவுகள் உங்கள் கண் முன் வந்து செல்லும்.

அன்று அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாடும் நாட்டு மக்களும் பொருளாதாரம் எல்லாம் செழிப்பாக இருந்து. இதனை உண்மை என்று நிரூப்பிக்க இந்த படத்தை zoom செய்து பாருங்கள். அன்று இந்த நகரத்தில் வந்து சேர்ந்த 95% விகிதமான மக்களும் வெள்ளை நிற ஆடைகள் அணிந்தே காணப்படுகின்றர்கள்.

Photos from Anas M Anees's post 31/08/2023
08/08/2023

எவரேனும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் photoshop தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உங்களது புகைப்படங்களை நிர்வாண படங்களோடு பொருத்தியிருப்பதாக அறிந்தால், https://www.stopncii.org/ என்ற லின்க் இற்கு பிரவேசித்து அதன் முதல் பிரதியை பதிவிடுங்கள்.

அவ்வாறு செய்யும் பட்சத்தில் நிர்வாண படத்துடன் பொருத்தப்பட்டு, உங்களுடைய படங்கள் பதிவிடப்பட்ட அனைத்து தளங்களிலிருந்தும் நீக்கப்படும். இது தொட்பில் எவரோடும் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய தனிப்பட்ட தரவுகள் பாதுகாக்கப்படும்.

எவரேனும் மேற்கூறியவாறு படங்களை பதிவிடுவதாக அறிந்திருந்தால் cyber crime பிரிவுக்கு அறிவித்து அவர்கள் ஊடாக வழக்கு தொடரவும் முடியும்.

இது South West Grid for Learning என்ற பிரித்தானிய நிறுவனம் வழங்கும் சேவையாகும்.

යමෙකු නිරුවත් ඡායාරූපයක් නිර්මාණය කිරීම සඳහා AI හෝ Photoshop සමඟ ඔබේ ඡායාරූපය සංස්කරණය කර ඇත්නම් ඔබ https://www.stopncii.org/ වෙත ගොස් මුල් ඡායාරූපය සහ සංස්කරණය කළ ඡායාරූපය ඉදිරිපත් කරන්න,

එවිට ඔවුන් සංස්කරණය කළ ඡායාරූපය සියලුම ස්ථානවලින් ඉවත් කරනු ඇත. මේ සඳහා ඔබ කිසිවෙකු සමඟ කෙලින්ම කතා කිරීමට අවශ්‍ය නැත. ඔබගේ අනන්‍යතාවය රහසිගතව පවතිනු ඇත.

කවුරුන් හෝ ඔබේ පින්තූරය මෙලෙස ප්‍රසිද්ධ කර ඇත්නම් වහාම සයිබර් ආරක්ෂක අංශයට දන්වා ඔවුන් සමඟ නඩු පවරා වහාම පියවර ගන්න.

- මෙය බ්‍රිතානයේ South West Grid for Learning ආයතනය විසින් පවත්වාගෙන යන සේවාවකි.

Copied from 👉 Vimukthi Dushantha.

Photos from Digana News's post 20/06/2023

இந்தியாவின் Vagir நீர்மூழ்கி கப்பல் இலங்கை வருகை..

இந்தியாவின் Vagir நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று வந்தடைந்தது. 22ம் திகதி வரை கொழும்பில் நிற்பதுடன் பொதுமக்கள் பார்வைக்கும் அனுமதி வழங்கியுள்ளது.

Photos from Dr Muhammad Salah's post 06/02/2023
25/01/2023

NORMAL PASSPORT பெறுவதற்கும் ONE DAY PASSPORT பெறுவதற்கும் முதலில் அங்கு TOKEN எடுக்க வேண்டும். TOKEN ஏற்கனவே ஆன்லைன் இல் பதிந்து தேதி எடுத்தவர்களுக்கு தான் வழங்கப்படுகிறது. தவிர எல்லோரும் அங்கு சென்று வரிசை வரிசையாக முட்டிக்கொள்ள கூடாது என்பதற்கு மட்டுமே அந்த ஆன்லைன் பதிவு கொண்டு வரப்பட்டுள்ளது.

TOKEN எடுத்தால் உடனே இரண்டாவது மாடியில் D அடையாளம் இடப்பட்டுள்ள அறைக்குள் சென்று வரிசையில் நின்று ஆவணங்களை (PASSPORT விண்ணப்பம்,NIC போட்டோ பிரதி, பாஸ்போர்ட் போட்டோ பிரதி, பிறப்பு பதிவு மற்றும் ஆன்லைன் இல் போட்டோ SUBMIT செய்த ஆவணம் மற்றும் பழைய PASSPORT ) என்பவற்றை கொடுத்தால் உங்களையும் உங்கள் புகைப்படத்தையும் பார்த்து VERIFY செய்துவிட்டு மீண்டும் ஒரு ஆவணத்தில் கையொப்பம் பெறுவார்கள்.

கையொப்பம் ஒருக்காலும் மாறிவிட கூடாது, விண்ணப்பத்தில் உள்ளதை போன்று சரியாக இட வேண்டும்.

அதன்பின் FINGER PRINT பதிவு செய்ய பக்கத்து அறைக்கு போக சொல்வார்கள். அங்கும் ஒரு நீண்ட வரிசை நிற்கும். அதில் ஒரு அரை மணிநேரம் நின்று தான் FINGER செய்துவிட்டு அடுத்த அறைக்கு வந்து 20,000/- பணம் செலுத்தி துண்டு ஒன்றை தருவார்கள். இவையெல்லாம் உங்களுக்கு தரப்பட்டுள்ள TOKEN ஐ அடிப்படையாக கொண்டே நடக்கும்.

எனவே TOKEN ஐ தொலைத்தோ அல்லது கிழித்தோ விடாமல் பாதுகாப்பாக வைத்து கொண்டு கட்டணம் செலுத்தி பணம் பெறும் வரைக்கும் வைத்து கொண்டால் போதும். கட்டணம் செலுத்திய துண்டில் நீங்கள் எந்த COUNTER இல் PASSPORT ஐ பெற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டிருக்கும். அங்கே சென்று நீங்கள் சுமார் 5 மணிநேரம் காத்திருக்க வேண்டும். பலரும் வெளியில் சென்றுவிட்டு தக்க நேரத்தில் வந்து பெற்றுக்கொள்ளலாம். தூர இடங்களில் இருந்து வருவோர் அங்கேயே இருக்கத்தான் வேண்டும்.

ONE DAY SERVICE என்றாலும் முழுநாள் ஒதுக்கியே ஆக வேண்டும். பலர் அங்கு நாள் கணக்கில் அலைந்து திரிவதை காண முடிந்தது.

உண்ண பருக PASSPORT ISSUING பகுதியில் நல்ல CANTEEN ஒன்றும் உள்ளது. ஆரோக்கியமான உணவுகளையே பொறித்த விலைக்கு விற்கின்றனர். அது உண்மையில் ஆறுதலாக இருந்தது.

TOKEN கிடைக்கப்பட்ட ஒழுங்கில் யாரும் விண்ணப்பம் கையளிப்பதில்லை. யார் TOKEN ஐ எடுத்துக்கொண்டு வரிசைக்கு சென்று விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பகுதிக்கு (2ND FLOOR- D பிரிவு) முதலில் நிற்கிறாரோ அதுவும் FINGER செய்துவிட்டு பணம் செலுத்தி ரெசிப்ட் எடுத்து கொள்கிறாரோ அதில் குறிக்கப்பட்டுள்ள நேரத்திலிருந்து தான் உங்களுடைய PASSPORT PROCESSING பணிகள் துவங்கும்.

எனவே அங்கு சென்று அங்குமிங்கும் அலைமோதி கொண்டு நேரத்தை வீணாக்கி கொள்ளாமல் எவ்வளவு நேரத்தோடு சென்று பணத்தை கட்டி ரெசிப்ட் எடுத்து கொள்ள முடியுமே அவ்வளவு நேரத்துடன் நீங்கள் பாஸ்போர்ட் உங்கள் கைக்கு கிடைக்கும்.

5 மணிநேரம் முடிவதற்கும் பாஸ்போர்ட் உங்கள் கைக்கு வரும் முன்னர் உங்கள் மொபைல்ற்கு மொத்தமாக நான்கு SMS கள் வரும் வரைக்கும் நீங்கள் காத்து நிற்க வேண்டும். இறுதி SMS வந்ததிலிருந்து 30 நிமிடம் கழித்து தான் PASSPORT ISSUING COUNTER ற்கு உங்கள் PASSPORT வந்ததும் ஒலிபெருக்கியில் ஒவ்வொரு பெயர்களாக அழைக்கும் போது நீங்கள் அவ்விடத்தில் இருக்க வேண்டும். இவையெல்லாம் நடந்து முடிய சுமார் குறைந்தது 6 மணிநேரம் தேவைப்படும்.

TOKEN வழங்கப்படுவது முதலாவது மாடியில்...
DOCUMENTS ACCEPT பண்ணுவது இரண்டாவது மாடியில்..
FINGER PRINT இரண்டாவது மாடியில்..
கட்டணம் செலுத்துவதும் இரண்டாவது மாடியில்..
PASSPORT பெறுவதும் இரண்டாவது மாடியில்..

சிலர் முதலாவது மாடியில் உள்ள NORMAL SERVICE வழங்கும் பகுதியில் தேவையில்லாமல் விவரம் தெரியாமல் வரிசையில் காத்து கிடக்கின்றார்கள். மிகவும் அவதானத்துடன் செயல்பட்டு நேர விரயத்தை குறையுங்கள்.

நீங்கள் ONE DAY SERVICE இல் PASSPORT எடுக்க விரும்பினால் ONLINE இல் விண்ணப்பித்து உங்கள் போட்டோ ஒன்றை SUBMIT செய்வதன் மூலம் தேதி ஒன்று கிடைக்கும். அது இன்றிலிருந்து ஒரு மாதத்தின் பின்னருள்ள திகதிக்கு தான் சென்று எடுப்பதற்கு வரும். உங்களுக்கு அவசரமாக இரண்டு மூன்று தினங்களில் வேண்டுமென்றால் நீங்கள் ONLINE இல் பதிவு செய்யும் போதே அந்த திகதியை பெற்று கொள்ள 20,000/- செலுத்த வேண்டியிருக்கும். பின்னர் அங்கு சென்றும் PASSPORT க்கும் கூட 20,000/- செலுத்த வேண்டும்.

அவசரமாக PASSPORT தேவைப்படுபவர்கள் எம்மில் அதிகமானோர் உள்ளனர் என்பதால் தான் ONLINE திட்டமொன்றே கொண்டு வரப்பட்டுள்ளது. மற்றபடி அதில் குறிக்கப்பட்டுள்ள நேரம் என்பதெல்லாம் பொய் தான். அங்கு ONLINE இல் பதிந்து பெறப்பட்ட தேதியை மட்டுமே பார்க்கின்றனர். நீங்கள் தேதியை முன்கூட்டி பெறவே 20,000/- மேலதிகமாக செலுத்த வேண்டியிருக்கிறது.

நீண்ட நேரம் காத்து நின்று தான் எடுக்க வேண்டும் என்பது இன்னும் அடுத்த முப்பது வருடங்களில் தான் மாறும். மற்றபடி உங்களுக்கு கையிலே உடன் கிடைப்பது போன்ற சேவையை வழங்க அந்த பெரிய பிரம்மாண்ட கட்டடத்தில் ஆயிரம் ஊழியர்கள் இருப்பது போல தெரியவில்லை. அங்கு போனது உங்களுக்கு இந்த விடயங்கள் எல்லாமே புரியும்.

இறுதியாக ஒன்று...

நீங்கள் குறிக்கப்பட்ட நேரத்திற்கு செல்ல வேண்டாம். அன்றைய திகதியில் காலையிலேயே சென்று பணிகளை துவங்கினால் மாலையில் நேரத்துடன் கிடைத்துவிடும். இல்லாவிட்டால் இரவு முழுக்க அங்கு தரையில் தூசு தட்டிவிட்டு தூங்கவேண்டி இருக்கும்.

அவசியம் மறக்காமல் மொபைல் சார்ஜ் செய்து கொண்டு செல்லுங்கள். நான்கு SMS களும் வருவதை அவதானிக்க வேண்டியிருக்கும். அது தவறினால் மிகவும் கஷ்டமாக போய்விடும்.

நன்றி
SLBI

24/01/2023

இலங்கை கால்பந்து சம்மேளனம் தடைசெய்யப்பட்டது.
விளையாட்டுத் துறை அமைச்சர் ஒப்புக்கொண்ட திட்டத்தில் இருந்து விலகி ஜனவரி 14 FFSL தேர்தல்களில் தலையிட்டதால் மூன்றாம் தரப்பு தலையீடு காரணமாக FIFA இலங்கையை தடை செய்கிறது.
உலகெங்கிலும் உள்ள 211 உறுப்பு நாடுகளுக்கும் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

FFSL இன் முன்னாள் செயலாளர் உபாலி ஹேவகேவுக்கு, முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமருக்கு ஒரு பிரதியுடன் கடுமையான வார்த்தைகள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகப் பணியாளர்களையும் தேர்தல்களையும் அங்கீகரிக்க முடியாது என்று ஃபிஃபா கூறியுள்ளது.

24/01/2023

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸ ஆகிய பகுதிகளுக்கு இடையிலான வாகன போக்குவரத்து இன்று (24) முதல் ஒரு வார காலத்திற்கு ஒரு #பாதையில்_மட்டுப்படுத்தப்பட்டுள்ளது #

இன்று காலை முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை குறித்த பகுதியில் காபட் இடப்படவுள்ள பணிகள் காரணத்தினால் இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி கொழும்பு மற்றும் கண்டி நோக்கி செல்லும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதற்கமைய, கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் மாவனெல்ல – ரம்புக்கனை வீதியின் குருணாகல் வரை பயணித்து, மீரிகம ஊடாக பஸ்யால சந்திக்கு பிரவேசித்து அல்லது கேகாலை வரை பயணித்து பொல்கஹவெல, அலவ்வ, மீரிகம, பஸ்யால ஊடாக பஸ்யால சந்திக்கு பிரவேசித்து கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் போது, பஸ்யால சந்தியிலிருந்து மீரிகம ஊடாக குருணாகல் வழியாக கண்டி நோய்யி பயணிக்க முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24/01/2023

பாடசாலை கல்விச்சுற்றுலாவுக்கு இனி புதிய நிபந்தனை

பாடசாலை கல்விச் சுற்றுலாக்களில் ஈடுபடும் மாணவர்களின் பாதுகாப்புக்காக புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

(கடந்த 20ஆம் திகதி நானுஓயாவில் இடம்பெற்ற விபத்தின் பின்னர் அமைச்சு இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.)

அதாவது, பயணத்தின் தூரத்தை அதிகபட்சமாக நூறு கிலோமீற்றராக மட்டுப்படுத்தி, மாலை ஆறு மணிக்குள் பாடசாலைகளுக்குத் திரும்புவதற்கான நிபந்தனைகள் கல்விப் பயணங்கள் தொடர்பான சுற்றறிக்கையில் உள்ளடக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, ஒரே நாளில் பயணிக்கக் கடினமான தூரத்தை கல்விப் பயணத்துக்கு பயன்படுத்துவது நடைமுறைச் சாத்தியமில்லை என்றும்

இனிமேல் பயணங்களுக்கு ஏற்ற இடங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மாணவர்களின் பாதுகாப்புக்காக தற்போது பின்பற்றப்படும் ஏனைய ஏற்பாடுகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும்,

பாடசாலை முதல் தவணை ஆரம்பிக்கும் போது திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும்,. தற்போதுள்ள ஏற்பாடுகளின்படி சுற்றுலா செல்ல வலயக் கல்வி அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். மாணவர்கள் பயணிக்கும் வாகனத்தின் பொருத்தம் குறித்து விஷேட கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் வாகனம் காப்புறுதி செய்யப்பட வேண்டும். பயணத்தின் பாதை விளக்கத்தையும் வலயக் கல்வி அலுவலகத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photos from Digana News's post 19/01/2023

🔴மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்ட லோட்டஸ் டவரின் தற்போதைய நிலைமை .
எல்லாம் இடங்களிலும் காதல் கவிதைகள்🙆

18/01/2023

பாவனையில் உள்ள பழைய NICSL (National Identity Card of Sri Lanka) பதிலாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள NICSL ஐ ஒரே நாள் சேவையில் பெறும் முறை!!!

அங்கீகாரம் பெற்ற ஒரு ஸ்டூடியோ ஐ நாடி புகைப்படம் எடுத்து அதன் ஒன்லைன் பதிவுப் பிரதியை பெற்றுக் கொள்ளுதல். (இது ஒரு நாளின் 30 நிமிடத்தில் முடியும் வேலை)

பழைய ஆள் அடையாள அட்டை, பிறப்புப் பதிவு,புகைப்பட ஒன்லைன் பதிவுப் பத்திரம், 250 ரூபாய் பணத்துடன் தமது கிராம சேவை உத்தியோகத்தரான-GS இடம் சென்று விடயத்தை தெரிவித்தல்.(இது GSஇன் பணி நாளில் 30 நிமிடத்தில் முடித்து தரப்படும் வேலை)

GS இனால் நிறப்பி தரப்படும் பத்திரங்களை பிரதேச செயலகத்தின் NIC பிரிவை நாடிச் சென்று சமர்ப்பித்தல். (இது பணியில் DS/ADS/CA இருந்தால் 30 நிமிடம் தொடக்கம் 60 நிமிடங்களில் முடித்து தரப்படம் வேலை)

அங்குள்ள உத்தியோகத்தர்களினால் இறுதியில் அத்தாட்சிப் படுத்தப்பட்டு தரப்படும் விண்ணப்ப படிவம் அடங்களான அனைத்து பத்திரங்களையும் எடுத்துகொண்டு கொழும்பு பத்திரமுல்லையில் அமைந்துள்ள தேசிய ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தை நாடிச் செல்லுதல்.

Department for Registrations of Persons
10th Floor
Suhurupaya
Sri Subhuthipura Road
Battaramulla.

DRP-NIC தலைமையகத்திற்கு காலை 9 மணிக்கு சென்றால் நலவு. அனேகமானோர் அதிகாலையில் வந்து காத்திருந்து போலினில் நின்று சீக்கிரம் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதில் அவதிப்படுவதால் நேர காலத்துடன் செல்பவர்கள் காத்திருப்புக்கு என்றே பெரும் நேர காலத்தை செலவிடும் சிரமம் உண்டு.

ஆட்பதிவு திணைக்களம்,மற்றும் பாஸ்போட் அலுவலகம் இரண்டும் ஒன்றாக இணைந்து இருப்பதால் இரண்டிற்குமே செல்லும் வழி ஒன்றாகும்.

உள்ளே நுளைய முன்னர் அனைவரும் சோதனை இடப்படுகின்றனர். விண்ணப்பதாரி மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்ற நிபந்தனை கிடையாது. ஆகையால் ஆண்கள்,பெண்கள் என வேறு வேறாக சோதனை செய்யப்படும் வரிசைகளில் செல்லும் அனைவரும் நின்று சோதனையை முடித்து உள்ளே செல்ல முடியும்.

உள்ளே சென்றதும் வலது பக்கம் கெண்டின் உண்டு. இடது பக்கம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய இடம் செல்வதற்கான வழி முதலாவதாக வரும் மண்டபத்தை கடந்து சென்றதும் வலது பக்கத்தில் உண்டு.

உள்ளே சென்று இடப்பக்க மண்டபத்தை தாண்டி வலப்பக்கம் உள்ள அலுவலகம் சென்றால் வாயலின் அருகிலேயே இலக்கங்களை விநியோகம் செய்யும் இடத்தை காணலாம். எமது விண்ணப்பங்களை காட்டியதும் இலக்கம் ஒன்றை தருவார்கள்.

அந்த இலக்கம் அறிவித்தல் மூலமாக ஒலிக்கும் வரை, நாம் காத்திருக்க வேண்டும்.
அந்த நேரத்தில் அறிவிக்கப்படும் இலக்கத்தை செவிமடுத்தால் நமது இலக்க அறிவித்தல் வருவதற்கு எவ்வளவு நேரம் செல்லும் என்பதனை அனுமானிக்கலாம்.

காத்திருக்கும் நேரத்தில் அந்த அலுவலகத்தின் முன்னே உள்ள பிரதான கட்டிடத்தை நாடிச் சென்று அதன் ஏழாவது மாடி அல்லது தளத்தில் அமைந்துள்ள உணவகத்தில் சிற்றுண்டியும் டீயினையும் சுவைத்து விட்டு திரும்பி வந்திடலாம்.

வழங்கப்பட்ட அனைத்து இலக்கங்களும் 12மணிமுதல் 12.30 மணிக்கிடையில் பெற்றுக்கொள்ளப்படும். ஆகையினால் இலக்கம் கிடைத்தால் "அன்றைய நாளில் சேவை கிடைக்காதோ" என்ற அச்சம் தேவையற்றது.

நமது இலக்கம் அறிவிக்கப்பட்டதும், உரிய இடத்தில் உள்ள கவுண்டருக்கு சென்று; விண்ணப்பத்தை சமர்பித்தால், அவர்கள் அதன் ஒவ்வொரு பக்கத்திலும் உத்தியோக பூர்வ ஸ்டாம்பை அடித்து எங்களிடமே விண்ணப்பத்தை திருப்பி அளித்து, முன்னர் உள்ள பிரதான கட்டிடத்தின் 9ம் மாடிக்கு செல்லுமாறு பணிக்கின்றனர்.

விண்ணப்பங்களை தருகையில் சாதாரணமாக Pink கலர் அட்டையில் நமது விண்ணப்பங்களை வைத்து அளிப்பார்கள். கற்பவதிகள்,இயலாதவர்கள்,நோயாளிகள்,முதியவர்கள்,குழந்தைகள்,கைக்குழந்தைகளுடன் வந்துள்ள தம்பதிகளுக்கு yellow கலர் அட்டையில் வைத்து விண்ணப்பங்களை அளிப்பார்கள்.

முன்னே உள்ள கட்டிடத்திற்கு சென்று, லிப்ட் இருக்கும் இடத்தை அடைந்து, 9ம் தளத்திற்கு லிப்டிலே சென்றால் அங்கே உள்ள இடதுபுற அலுவலகத்திற்கு செல்லுமாறு வழியில் நிற்கும் உதவியாளர்களினால் பணிக்கப் படுவீர்கள். அல்லது நாமாகவே சென்றிடலாம்.

அங்கே சென்றதும் Pink அட்டையுடன் சென்றவர்கள் தமது இலக்கம் அழைக்கப்படும் வரை காத்திருத்தல் வேண்டும்.Yellow கலர் அட்டையுடன் வருபவர்கள் விஷேட தேவையுடையோருக்கான கவுண்டரை நாடிச் சென்று தமது விண்ணப்பத்தையும் 1000 ரூபாய் பணத்தையும் செலுத்தி பற்றுச் சீட்டை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

இனி NIC கிடைக்கும் வரை காத்திருத்தல் வேண்டும். அனேகமாக 5 மணியின் பின்னர் அனைத்து NICக்களும் வழங்கப்பட தயாராகிவிடும். ஆதலினால் காத்திருக்கும் நேரத்தில் உங்களது ஏனைய பணிகளை முடித்துவிட்டு திரும்பி வரலாம்.

அல்லது 7ம் தளத்திற்கு சென்று அங்குள்ள உணவகத்தில் அதி சிறப்பான சிங்கள உணவை வெறும் 100 ரூபாய்களுக்கு சுவைத்து பகல் உணவை முடித்து ஆருதலாக வந்திடலாம்.

மதியம் 2 மணியில் இருந்து.... பெயர் கூறி வினியோகம் செய்ய ஆரம்பிப்பார்கள்.Yellow கலர் அட்டையுடன் விண்ணப்பத்தை சமர்பித்தவர்களது NICக்கள் நேர காலத்துடன் அறிவிப்பு செய்யப்பட்டு வழங்கப்படும். Pink கலர் அட்டையுடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்தவர்களின் NICக்கள் அவர்கள் விண்ணப்பங்களை வழங்கிய நேர ஒழுங்கின் படி வரிசை கிரமமாக உரிய நபரின் முழுமையான பெயரை மூன்று மொழிகளிலும் அறிவிப்பு செய்து உரியவரை அழைத்து வழங்கப்படும்.

அனேகமாக பின்னேரம் 5 மணியின் பின்னர் அனைத்து NICக்களும் தயாராகிவிடும் ஆதலினால் மாலை 6-7 மணிக்கு முன்னதாக எங்களது NIC கிடைத்து விடுவது நிச்சயமானது.

குறிப்பு: ஆள் அடையாள அட்டையை தொலைத்தவர்கள் இதே ஓழுங்கை பின்பற்ற முன்னர் கீழ்வரும் செயற்பாடுகளை முன்னெடுத்தல் வேண்டும்.

தொலைந்த விபரத்தை கிராம சேவை உத்தியோகத்தரை விழித்து கடிதம் எழுதிச் சென்று, கிராம சேவை உத்தியோகத்தரின் அத்தாட்சியை பெற்றுக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய செல்ல வேண்டும்.

25 ரூபாய் பதிவுக் கட்டணத்தை செலுத்தி, பொலிஸ் நிலையைத்தில் உரிய முறைப்பாட்டை பதிவு செய்ய, GSஇடம் அத்தாட்சிப் படுத்தி எடுத்துச் சென்ற கடிதத்தினை சமர்பிக்கலாம்.

பொலிஸ் நிலையத்தில் எமது முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட அதிகாரி ,முறைப்பாட்டு பிரதியை பெற குறித்த ஒரு தினத்தில் வருமாறு பணிப்பார். (இது அனேகமாக முதலாம் நாள் பொலிஸ் நிலையம் சென்று ஒரு மணி நேரத்தில் முறைப்பாட்டை பதிந்து மறுநாள் ஓர் அரை மணி நேர பொலிஸ் நிலைய விஜயத்தினால் முறைப்பாட்டு பிரதியை பெற்றுக்கொள்ளும் காலமாகும்.

அத்தினதில் பொலிஸ் நிலையத்திற்கு மீண்டும் சென்று பெற்றுக்கொண்ட அந்த முறைப்பாட்டு பிரதியையும்,புகைப்பட ஒன்லைன் பதிவு பிரதியையும்,பிறப்பு பதிவு சான்றிதலையும் 500 ரூபாய் பணத்தையும் GSஇடம் சமர்பிப்பதன் மூலமாக மேலே உள்ள விடயங்களை தொடராக பெற்றுக்கொள்ளலாம்.

Photos from Digana News's post 30/07/2022

அதிகாரிகளின் அசட்டையீனத்தால் விமானச் சீட்டை பெறமுடியாமல் நிர்க்கதியாகிநிற்கும் இலங்கை கனிஷ்ட வீரர்கள்

பொருளாதார நெருக்கடியால் சிக்கித்தவிக்கின்றது #இலங்கை. இதனால் பலதரப்பட்டவர்களும் பாதிப்பிற்குள்ளாகிவருகின்றனர்.

நெருக்கடிக்கு முக்கிய காரணமான அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தாக்கத்தை உணர்கின்றார்களோ இல்லையோ ஒன்றுமறியாக சிறுவர்களும் குழந்தைகளும் இதில் சிக்கி தமது எதிர்காலத்தை இழந்துவரும் பரிதாபம் நம் கண்முன்னே நடந்துகொண்டிருக்கின்றது.

இம்முறை #உலககனிஷ்டமெய்வல்லுநர்போட்டிகள் #கொலம்பியா நாட்டின் கலி என்ற நகரில் ஓகஸ்ட் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இதற்கு இலங்கையில் இருந்து தெரிவான வீரர்கள் அதிகாரிகளின் அசமந்தமான போக்கினால் அங்கு போகமுடியாது நிர்க்கதியாக நிற்கின்றனர். அந்த வீரர்களுக்கான விமானச்சீட்டுக்களை அதிகாரிகள் உரிய நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறிவிட்டனர்.

இலங்கையில் இருந்து இம்முறை 7 கனிஷ்ட மெய்வல்லுநர்கள் உலக மெய்வல்லுநர் போட்டிகளில் பங்கேற்க இருந்தமை குறிப்பிடத்தக்கது

இலங்கை கனிஷ்ட மெய்வல்லுநர்களும் அவர்களது பெற்றோர்களும் நேற்றிரவு விளையாட்டுத்துறை திணைக்களம் அமைந்துள்ள டொரிங்டன் விளையாட்டரங்கில் தரித்து தமது எதிர்ப்பை பதிவுசெய்ததுடன் தமக்கு நியாயம் வேண்டி நின்றதாக அங்கு சென்றிருந்த ஊடகவியலாளரொருவர் குறிப்பிட்டார். இலங்கையில் சிறுவர்களது எதிர்காலம் நம் கண்முன்னே கேள்விக்குள்ளாகிவரும் பரிதாபம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.

14/07/2022

தனிப்பட்ட விஜயத்திற்காகவே கோத்தாபய ராஜபக்‌ஷ நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டார். அடைக்கலம் கொடுப்பதற்கல்ல.
-வெளிவிவகார அமைச்சு
சிங்கப்பூர்

NOTE: ஜனாதிபதி என்னும் வாசகமே இங்கு பயன்படுத்தப்படவில்லை.

14.07.2022

14/07/2022

#அரசியல்.!

#பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் 😯

Ok இங்கே கட்சித் தலைவர்களது கோரிக்கைகளின் பிரகாரம் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விலக வேண்டும் எனும் கோரிக்கை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது 👍

அரசியலமைப்பின் பிரகாரம் சனாதிபதி பதவிக்கு உரித்துடையவராகவும் , நிறைவேற்று அதிகாரமுடைய சனாதிபதியால் நியமிக்கப்பட்ட பதில் சனாதிபதியாகவும் ரணில் நியமிக்கப்பட்ட வர்த்தமானியும் வெளியாகிவிட்டது.

அடுத்தது என்ன ?

ரணிலின் காய் நகர்த்தலின்படி அடுத்த தேர்தல் வரும்வரை சர்வகட்சி அரசை அமைத்து புதிய பிரதமர் ஒருவரை நியமித்து அரச இயந்திரத்தை இயக்க ஆரம்பிப்பார்,

Gas வந்துவிட்டது, உரம் வந்துவிட்டது, IMF பேச்சுவார்த்தை வெற்றிபெறும் ,அடுத்து எரிபொருட்களும் வந்து விட்டால் என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை 😉

ஒரேயொரு National List ஐ வைத்துக்கொண்டு காணாமல் ஆக்கப்பட்டு காட்டுக்குள் ஒளிந்திருந்த யானை கொஞ்சம் கொஞ்சமாய் நாட்டுக்குள் வரும், கோட்டாவை மட்டுமல்ல , ராஜபக்சக்களின் சாம்ராஜ்யத்தையும், ஏன் மொட்டுக் கட்சியையும், சஜித் எதிர்காலத்தையுமே கேள்விக்கு உட்படுத்தும் வேலைகள் அத்தனையையும் கனகச்சிதமாக ரணில் தன் நரி மூளையால் அரங்கேற்றுவார்.

ரணிலின் பதிவியேற்பு என்பது ராஜபக்சக்களை இப்போது காப்பாற்றும் திரைமறைவு வேலைகளை தற்காலிகமாக செய்தாலும்கூட, நீண்டகால அடிப்படையில் அரசியலில் பூச்சியமாக்கும் நடவடிக்கைகளை நிச்சயமாக முன்னெடுப்பார்.

தேர்தல் வரும் நேரம் IMF ஆதரவுடனும் , பூகோள அரசியலை திட்டமிட்டு அரங்கேற்றும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாய் ரணில் மாறுவதோடு அவர்களது Agenda பிரகாரம் செயற்படுவார் / செயற்படுத்துவார்கள்.

அமெரிக்காவின் ஆசைப்படி சீனா ஓரங்கட்டப்படும், அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கையை தன் இஷ்டத்துக்கு இயக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாய் அப்பாவி மக்களின் அத்தனை பிரச்சனைகளுக்கும் தற்காலிக தீர்வுகள் கிடைக்க, மக்களும் போராட்டங்கள் கடந்து இயல்புநிலைக்கு திரும்ப திணிக்கப்படுவார்கள் .

UNP க்கு ஒற்றை Seat உம் இல்லாமல் செய்த மொட்டுக்கட்சிக்கு யானைக்கட்சியின் பரிதாப நிலை ஏற்படும் .

காலாதிகாலமாய் நம்மையும் நாட்டையும் அடிமைப்படுத்தி, ஆட்சி அதிகாரமேறி நாட்டின் இத்தனை சீரழிவுகளுக்கும் பங்குதாரர்களான ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் மீண்டும் நாட்டின் இரு பிரதான கட்சிகளாகும் .

இடைநடுவே முளைத்த மொட்டும், SJB க்கும் என்னவாகும் என்பதை காலம் தீர்மானிக்கும்.

ரணில் தன் ஆயுள்வரை ஆசைப்பட்ட பதவிகளை அலங்கரித்து யானையை சிம்மாசனத்தில் உட்கார வைப்பார், மே 12 ரணில் திடீரென பிரதமரானவுடனான ்அத்தனை நிகழ்ச்சி நிரலும் ஒவ்வொன்றாக இப்போது நிறைவேற்றப்படுகின்றமை புரிகிறதா 😉

இத்தனையும் தெற்கு அரசியலில் நடக்கும், அதைவைத்துக் கொண்டு சம்மந்தர் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று ஏமாற்று அரசியல் செய்துகொண்டே காலவோட்டத்தில் மறைந்துபோவார்.

சம்பந்தரின் மறைவுக்கு பின்னர் கூட்டமைப்பை சிதைக்கும ்அத்தனை வேலைகளையும் ரணில் அரங்கேற்றுவார், நம்மவர்கள் பதவி மோகத்தில் TNA தலைமைத்துவத்துக்காக அடிபட்டுக் கொண்டிருப்பார்கள்.

என் சிற்றறிவுக்கு எட்டியவகையில் இத்தனையும் நடந்தால் நாம் வழமையாக பேசும் அதே பல்லவியை பேசிக்கொண்டிருப்போம் .

ஆம் அன்றைக்கு தலைவர், ரணிலை தோற்கடிக்காமல் இருந்திருந்தால் என்று பேசுவது போல் ‘ சீஈஈஈஈக் கோட்டா சஜித்த ஆட்சிப்பொறுப்பை ஏற்க அழைக்கும் போது சஜித் ஒத்துக்கொண்டு பிரதமராகியிருந்தால்” அப்படியென்று 12 B திரைப்பட பாணியில் பேசிக்கொண்டிருப்போம் 😎

இவை எல்லாம் இலங்கையின் புரட்சிகர அரசியல் மாற்றத்திற்கு துணிந்து வித்திட்ட போராட்டக் காரர்களின் ஒவ்வொரு நகர்வும் ரணிலின் இத்தனை திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடும்

அதையும்தாண்டி அரசியல் சாசனத்தில் இருக்கும் நெளிவு சுழிவுகளை ஆய்ந்து அறிந்து, ரணில் நெருங்கிக்கொண்டிருக்கும் நிறைவேற்றதிகார சனாதிபதி இருக்கையை நெருங்கவிடாமல் செய்வதென்பதும் இப்போதைய அரசியல் களத்தில் சர்வசாதாரண விடயம் கிடையாது 🤫

இப்போது நடைபெறும் ஒவ்வொன்றின் அடிப்படையிலும்தான் எதிர்தரப்பு காய்களை நகர்த்துகின்றது, ஆனால் ரணிலது சதுரங்க வேட்டை வித்தியாசமானது, எல்லா சிக்கல்களுக்கும் முன்கூட்டிய தீர்வை கையில் வைத்துக்கொண்டுதான் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.

12 ம் திகதி துக்க தினமாக அறிவித்ததும், 13 போயா தினத்தி்ல் ஜனாதிபதி பதவி விலகுவார் என அறிவிக்கப்பட்டதும் , நாடாளுமன்றை உடனடியாக கூட்டாமல் இருக்க செய்த தந்திரங்கள்.

இதற்கிடையில் போராட்டம் வேறு ஒரு கோணத்தில் பயணிக்கிறது, நாடாளுமன்றமும் கைப்பற்றப்பட்டால் நாடாளுமன்றைக் கூட்டாமல் தள்ளிப்போடவும் ரணில் இன்னும் காய்களை நகர்த்தவும் இதுவே இன்னும் காரணமாகும்.

இலங்கை அரசியலும் இலங்கை கிரிக்கெட்டும் ஒன்றுதான், சங்கா, மஹேலவின் ஓய்வுக்கு பின்னர் அடுத்த தலைவரின்றி இலங்கை கிரிக்கெட் சின்னாபின்னமானதுபோல் இலங்கை நாடும் அப்படித்தான் செல்கிறது.

ரணில் நரியாக இருந்தாலும் சர்வதேச அரசியலை முன்கொண்டு செல்லும் அறிவும் ,சாணக்கியமும் கொண்டவராக இப்போதிருக்கும் சஜித், அனுரவைவிட ரணிலே அங்கே முன்னிலைபெறுகிறார்.

ஆகவே தத்தளித்துக்கொண்டு மூழ்கும் நிலையில் இருக்கும் இலங்கை எனும் கப்பலை மீட்கும் வல்லமை கொண்ட மாலுமி ரணில் என்ற உண்மையை சொன்னால் என்னை ரணில் ஆதரவாளராக்கிவிடுவீர்கள் 😎

ஓடமும்்ஒருநாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் , ரணில் சனாதிபதியாகவும் , மைத்திரி பிரதமராகவும் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை 😎😎

அரசியல் என்பது இப்படித்தான், நாம் ஒன்று நினைப்போம் , இன்னுமொன்று நடந்துவிடும் ,காலையிலிருந்து கோட்டாவின் பதவி விலகல் வரும் என்று காத்திருந்து ஏமாந்தது போலத்தான் இனிவரும் ஒவ்வொரு நாட்களும் .

“வீழ்வது யாராகிலும் வாழ்வது நாடாகட்டும் “

துணிகர மக்கள் எழுச்சி இலங்கை அரசியல் அரங்கின் புதியதொரு அத்தியாயம் ❤️

13/07/2022

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்ஹ பதவி ஏற்றுள்ளார். போராட்ட களமாக மாறியுள்ள நிலையில் எதனையும் பொருட்படுத்தாது தனக்கான பதவியை ஏற்றுக்கொண்ட ரணில் இனி என்ன செய்யப் போகிறார்?

ரணிலால் சாதிக்கவோ சமாளிக்கவோ முடியுமா எனும் கேள்வி எழுகிறது. 69இலட்சம் வாக்குகள் பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசை கொண்ட, ஒரு முன்னால் பாதுகாப்பு செயலாளராக (இராணுவ அதிகாரி) யையே விரட்டியடித்த போராட்டக்காரர்களுக்கு ரணில் எம்மாத்திரம் என எண்ணத்தோன்றும். எனினும் இந்திய அமெரிக்க (சர்வதேச நட்புறவு) ஆதரவு கொண்ட ரணில், நான்கு சகாப்தங்களுக்கு மேலாக அரசியல் ஆட்டங்களை மேற் கொண்ட ரணிலை இலகுவில் விரட்டியடிக்க முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்னும் சில தினங்கள், வாரங்களில் மக்கள் மனங்களை ஓரளவுக்கேனும் திருப்தியுறச் செய்யும் உத்திகளை கைகொண்டு, மக்கள் கவனத்தை இலாவகமாக திசை திருப்புவதற்கான திட்டங்களை வகுத்திருப்பார் என்று நம்பலாம். எரி பொருள், எரிவாயு, வாழ்க்கை சிலவு அதிகரிப்பு என்பவற்றில் கிட்டிய நாட்களில் மாற்றத்தை ஏற்படுத்தி பெரும்பாலானவர்களை அரகலயிலிருந்து பிரித்து விடக்கூடிய வகையில், தத்தமது அன்றாட வாழ்வுக்குள் தள்ளிவிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டே..... போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்கான வாய்ப்புகளே அதிகம் காணப்படுகின்றன.

போரளிகளுக்குள் இப்போதே இரண்டு பிரிவினர்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், வரும் நாட்களில் அது வளர்சியுறும் சாத்தியமே அதிகம். அதற்கான சகலவித ஊக்குவிப்புகளையும் ரணில் எனும் ராஜதந்திரி முன்னெடுப்பார் என்றே தோன்றுகிறது.

மக்களின் அன்றாட அத்தியவசிய தேவைகளை குறைப்பதற்கான பல்வேறு திட்டங்களுடனும் அதனை செயல்படுத்த தேவையான (டொலர்) நிதி மற்றும் உதவிகளை பெறுவதிலும் வெற்றி கொள்வதற்கான சாத்தியங்களே அதிகம்.

காகமும் ரணிலின் கையில் வடையும் அவரின் கையில் எனவே இன்றைய நெருக்கடி நிலமைகளுக்கு முகம் கொடுப்பார் என்று நம்பலாம்.

-நி ஸா

13/07/2022

நாளை (14) காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

13/07/2022

சபாநாயகர் வீடு சுற்றிவளைப்பு; ரணிலும் சிக்கிக்கொண்டுள்ளார்..!

சபாநாயகர் மஹிந்த யாப்பாவின் வீடு போராட்டக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

அவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சிக்கிக் கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ராணுவத்தின் கமாண்டோக்கள் அவ்விடத்துக்கு விரைந்துள்ளனர்.

Ashroff Ali
Journalist

13/07/2022

கண்ணீர்ப்புகை தாக்குதலில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பில் பிரதமர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்.

குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டதில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்து உயிரிழந்துள்ளார்

13/07/2022

#கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள பித்தளை சந்திப்பகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதியன்று, அப்போது பாதுகாப்புச்செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷவை இலக்கு வைத்து #தற்கொடைக்குண்டு 💥 தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதன்போது கோத்தபாய ராஜபக்ஷ குண்டு துளைக்காத பி.எம்.டபிள்யூ வாகனத்தில் பயனித்திருந்ததால் உயிர் தப்பியிருந்தார். அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 9 உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

அவ்வேளையில் இவர் உயிரிழந்திருந்தால், கொள்ளுப்பிட்டி, பித்தளை சந்தியில் சிலை கூட நிறுவப்பட்டிருக்கலாம். நினைவு முத்திரை வெளியிடப்பட்டிருக்கலாம். இவரது பெயரில் விசேட படையணி உருவாக்கப்பட்டிருக்கலாம். மொத்தத்தில் இலங்கையர்களின் மனதை வென்ற ஹீரோக்களில் ஒருவராக இவர் மாறியிருப்பார்.

ஆனால், காலம் அவ்வாறான ஒரு கௌரவத்தை வழங்க விரும்பவில்லை. கால ஓட்டம் இவரை இறுதிப்போரையும் முடித்து வைத்த நவீன துட்டகைமுனுவாக, ஓர் இரும்பு மனிதனாக சிங்கள மக்கள் மத்தியில் தூக்கி நிறுத்தியிருந்தது. எதிர்வரும் சில தசாப்த காலங்களுக்கு இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினரின் ஆட்சியே என பலரும் எதிர்வு கூறும் அளவிற்கு செல்வாக்கு ஓங்கி இருந்தது.

ஆயினும் காலத்தின் கணக்கு வேறு விதமாக இருந்தது.செய்த பாவங்களுக்கான பலனை அவர் மட்டும் அன்றி அவரது சகோதரர்கள், வாரிசுகள், உறவினர்கள் என முழுக்குடும்பமுமே அனுபவிக்கும் வகையில் மாறிப்போனது. எந்த மக்களால் "ஹீரோ"வாக கொண்டாடப்பட்டனரோ அதே மக்களால் "திருடன்/ கொள்ளைக்காரன்" என தூற்றப்படும் அளவிற்கு இறங்குமுகமாகியது. போரை வென்ற நவீன துட்டகைமுனுவாக இருந்தவர்கள் கோழைகளாக ஓடி ஒளியும் படியாக ஆகிப்போனது.
இலங்கையின் வரலாற்றில் ராஜபக்சக்களின் காலம் ஒரு இருண்ட காலமாக பதியப்பட்டது.

வன்னியில் இறுதிப்போரைக்கூட போரியல் தர்மத்தின் படி நடாத்தி வெல்லவில்லை என்பதும் தர்மத்தின் படி போரிடும் வீரர் இவர் அல்ல என்பதும் மனிதம் உள்ள சிங்கள மக்களின் மனச்சாட்சியில் (அவர்கள் வெளிப்படையாக கூறாவிடினும்) உறைக்க தொடங்கியுள்ளது.

💢 காலம் தனது தீர்ப்பை தெளிவாக எழுதியுள்ளது.

12/07/2022

கோட்டா கட்டுநாயக்க முகாமில் முடக்கப்பட்டார்..! ராஜபக்சவினரை ஏற்றிச் செல்ல விமானிகள் மறுப்பு.

ஜனாதிபதி கோட்டாபய இன்று (11) விமானப்படையின் AN 32 பயணிகள் போக்குவரத்து விமானத்தில் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு எல்லாம் தயாராகிவிட்டிருந்த நிலையில் இருந்த போதும் , அவரால் நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை.

இன்று காலை, திருகோணமலை கடற்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு இரத்மலானை விமானப்படைத் தளத்திற்குச் சென்று, அங்கு சிறிது நேரம் தங்கியிருந்து மீண்டும் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்கு விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 மற்றும் பெல் 212 ஆகிய இரண்டு ஹெலிகொப்டர்களில் கட்டுநாயக்கவில் தரையிறக்கிய பின் , சில காரணங்களால் திட்டமிடப்பட்ட விமானப்படையின் ஏஎன் 32 விமானம் இல்லாமல் , இலங்கை விமானம் யூஎல் 220 இல் நாட்டை விட்டு வெளியேற கோட்டாபய மற்றும் அவரது குழுவினர் தயாராகினர்.

ஆனால் அந்த விமானங்களை செலுத்தும் சிவில் விமானிகள் ராஜபக்ச குடும்பத்தில் எவரையும் ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.

அதனால்தான் சபாநாயகர் திக்கி திக்கி பேசுகிறார்.

Photos from Digana News's post 09/07/2022

2022.07.09

இலங்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்படவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இது. ராஜபக்ஷேக்களின் குடும்ப ஆட்சியை, பொதுமக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு முழுமையாக வீழ்த்திய நாள் இது. மக்கள் ஒன்று சேர்ந்து, எதிர்ப்புகளைப் புறந்தள்ளி ஜனாதிபதியைத் துரத்தியடித்து சாதித்திருக்கும் நாள் இது.

இலங்கை வரலாற்றில் மக்களால் ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட முதல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ.

இலங்கை ஜனாதிபதி பதவி விலகியதாக எழுதப் போகும் சர்வதேச ஊடகங்கள், அவர் மக்களால் துரத்தியடிக்கப்பட்டதையும் கட்டாயம் குறிப்பிடட்டும். பொதுமக்களுக்கு நன்மை விளைவிக்காத உலகில் எந்தவொரு பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் இது ஒரு மிகப் பெரிய பாடம்.

இன்றைய நிகழ்வின் பல புகைப்படங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. அவற்றை உங்கள் பார்வைக்கு இத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.

- எம்.ரிஷான் ஷெரீப்

29/06/2022

🔴⚫️ Passport எல்லோருக்கும் எடுக்க முடியும். பலர் சொல்வதை போல பேப்பர், book தட்டுப்பாடோ, கட்டணம் அதிகமாய் வசூலிப்பதோ இல்லை. ஆனால் எப்படி செய்துகொள்வது?

✅ Passport apply / renew செய்ய, என்னவெல்லாம் வேண்டும்?

1. NIC original and copy.
2. பழைய passport இருப்பின் original and copy.
2. Birth certificate original. (6 மாத காலத்திற்குள் CERTIFY செய்யப்பட்டது)
3. PHOTO studio acknowledgment recipet ( Photo Studio ஒன்றில் சொன்னால் அவர்கள் படம் எடுத்து அவர்களே passport office க்கு computer system வழியே அனுப்புவார்கள். உங்களுக்கு printed recipet ஒன்றை தருவார்கள்)

4. Online வழியே எடுத்த appointment. (கண்டிப்பாக இருக்க வேண்டியது - கீழே விபரம் உள்ளது)

கட்டணங்கள்:
One day service -15000
Normal service - 3500
(காசு கையில் வைத்துக்கொள்ளுங்கள். No card payments allowed)

* என்ன சிக்கல்?

1. Online வழியே மட்டுமே appointment வழங்கப்படுகிறது. அதுவும் அடுத்த 30 நாட்களுக்கு மேல் புக்கிங் full ஆகிவிடுகிறது. இந்த இணைப்பில் நீங்கள் புக்கிங் செய்து கொள்ளலாம் (புகைப்படம் பிடித்து பெற்றுக்கொண்ட Acknowledgement இலக்கத்தை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்): https://bit.ly/396YVUN

2. Phone இல் தொடர்பு கொள்ள தரப்பட்டுள்ள contact நம்பர்கள் எதுவுமே வேலை செய்வதாயில்லை. எனவே, நேரத்தை வீண் செய்யாதீர்.

3. நேரில் சென்றால் ஒரே நாளில் வேலை நடக்காது. லைனில் நின்று appointment எடுக்க முடியும். முதல் 400 பேருக்கு மாத்திரம், அதுவும் அதிகமானோர் விண்ணப்பிப்பதால் 2 வாரத்திற்கு பின்னர் அல்லது அதற்கும் மேல் வருகிற ஒரு திகதியே பெரும்பாலும் கிடைக்கிறது.

4. ஒவ்வொரு நாள் இரவும் அடுத்த நாளைக்கு லைனில் நிக்க ஒரு கூட்டம் அங்கேயே நிற்கிறது. 500 பேருக்கும் மேல் நிற்பதாக சொல்கிறார்கள்.

5. Birth certificate 6 மாத காலத்திற்குள் CERTIFY செய்யப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்.

6. கொழும்பில் இருக்கும் எந்த ஒரு AG office இலும் நீங்கள் நாட்டின் எந்த பிறந்த இடமாக இருந்தாலும் Copy certified பண்ணி தருவார்கள். பிறந்த ஊருக்கு போக வேண்டியதில்லை. But, நீங்கள் 1974ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவராய் இருத்தல் வேண்டும்.

7. Photo acknowledgement recipet எடுக்க ஸ்டுடியோ போனால் .. சில ஸ்டுடியோவில் system down. பல இடங்களில் கடந்த சில நாட்களாக வேலை செய்ய வில்லையாம்.

8. பத்தரமுல்ல, passport office அருகில் உள்ள photo studio க்களில் system நன்றாக வேலை செய்கிறது. ரூ.750 - ரூ.1000 ரூபாய்க்கு உள்ளாக பெறலாம். application form fill செய்தும் தருகிறார்கள். ஆனால் அவதானமாக செய்து கொள்ளுங்கள். பணம் வசூலித்து ஏமாற்றும் ஆட்களும் உள்ளனர்.

9. Agent மூலம் உள்ளே அனுப்பி passport பெற நினைப்போர்…… அது உங்கள் ஏஜெண்டை பொறுத்தது!! ஏஜெண்ட்கள் யாருமே சில நேரம் முன்வரவில்லை என்றும் சொல்கிறார்கள். Agent சிலர் பணம் பெற்று, வேலை முடித்து தருவதாக இழுத்தடிக்கும் நிலையும் ஏற்பட்டதாம். Appointment எடுத்தால் மட்டுமே solid ஆக வேலை நடக்கும் என்பதை நினைவில் கொள்க!

10. Agent உங்களிடம் இருந்து பணம் கறக்க வேறு வேறு தொகைகளை சொல்வார்கள்…..
மேலே சொன்ன கட்டணங்கள் மாத்திரமே அவசியமானவை. Application form கூட இலவசமாக தான் கிடைக்கிறது. நீங்களே fill செய்து கொள்ளலாம்.

11. Appointment date எடுக்க online வழியே அமையவில்லை என்றால். அதிகாலையில் சென்று இடம் பிடிப்பது மட்டுமே வழி. அதிலும் காத்திருக்க வேண்டும். (பல பேர் பல நாட்களாக அலைகிறார்கள் ☹️)

12. சில நாட்களில் One day passport இரவில் 11 மணி தாண்டியும் கொடுக்கப்படுவதாக பெற்றுக்கொண்டவர்கள் சொன்னார்கள்.

13. Normal service ஒருமாதம் வரை அல்லது அதற்கு அதிகமாகவும் ஆகலாம்.

- ஜூன் 2ம் வாரத்தின் நிலைவரம் இது -

eservices.immigration.gov.lk

Want your business to be the top-listed Media Company in Kandy?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

திகன நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் போக்குவரத்து முற்றாக தடை.தற்போது திகன நகரில் அராஜஹ அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்...
விமான நிலையத்தில் பிடிபட்ட 7 வினோத பொருட்கள்.
சிறு வயதில் பெற்றோர்கள் ஆன 6 சிறுவர்கள்.
கத்தாரில் தற்போதைய நிலைமை காரணமாக நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை சகோதரர்கள், கத்தாரல் உள்ள இலங்கை தூதரகத்திற்கு 06/07/2...
சாதரன இரைச்சி வியாபரம் செய்பவருக்கே இந்த விடயம் தெறியும் என்றால் டாக்டர்களின் எவ்வளவு அறிவுறை செய்கின்றார்கள் அதனை நாம் ...
இலங்கை மின்சார கட்டணத்தை கவனமுடன் சரிபார்க்கவும். 20/06/2020.
உங்கள் நேரம் மிகக் குறைவானது..எனவே அதை இன்னொருவர்வாழ்க்கையை வாழ்வதில்வீணடிக்காதீர்கள்
Eid greetings from NZ Prime MinisterJacinda ArdenNZ பிரதமர் ஜசிந்தா ஆர்டனின் ஈத் வாழ்த்துக்கள்.
கொரோனா பரிசோதனைகளில் தவறு: எரிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா?இலங்கையில் குறிப்பாக கடந்த ஐந்தாம் திகதி மேற்கொள்ளப்பட...
சற்றுமுன் பாணந்துரை ஹொரேத்துடுவ பகுதியில் பல வீடுகள் தீப்பிடித்துள்ளதாக பாணந்துரை வடக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.video...
குவைத்தில் வானிலை:பெரும்பாலான இடங்களில் தற்போது பலத்த தூசிக்காற்று பரவியுள்ளது:video clip#Kuwaitweather
නව කොරෝනා වෛරසය ව්‍යාප්තිය හමුවේ පීඩාවට පත් අඩු ආදායම්ලාභී සහ අවදානමට ලක්විය හැකි පවුල් සහ පුද්ගලයන් සඳහා සහන මුදළ් රැපි...

Website

Address

Kandy

Other Media/News Companies in Kandy (show all)
Viral News Viral News
200/A Dehideniya
Kandy

Welcome to the official page of United America News. The latest news and most interesting stories fr

SL Latest News SL Latest News
Kandy, 20000

💯நம்பகமான செய்திகளின் அடையாளம்🔥

Journalist Journalist
Kandy

Hello Evereone

Vision Social Media Vision Social Media
Kandy, 20802

ඔබේ හඬ වෙනුවෙන් ඔබේ මාධ්‍යය And our media for your voice உங்கள் குரலுக்காக என்றும் உங்கள் ஊடகம்

Kandy Media Kandy Media
Kandy

Pioneer of uncensored provincial news reporting

News line  Sri Lanka News line Sri Lanka
Kandy

"This is a trusted news exchange page." ● Political Information ● Election Details ● Sports N

Beerok Media Beerok Media
Kandy

BEEROK MEDIA

Ostrabrama Media Unit Ostrabrama Media Unit
Kandy

Media unit of st.mary's church Ampitiya

Madawala e News Madawala e News
51, Napana, Gunepana
Kandy, 20270

page of Madawala News

Kandy Time News Kandy Time News
Kandy

most popular tamil news website in sri Lanka

News SLRD News SLRD
Kandy

Welcome to the official NEWS SLRD page. Follow, Like, Share and stay updated with latest news around the world.

SL1st Tamil News SL1st Tamil News
Kandy

உண்மைக்கு முதலிடம் வாய்மையே வெல்லும் ஒற்றுமையே எமது பலம்