SL1st Tamil News
You may also like
உண்மைக்கு முதலிடம்
வாய்மையே வெல்லும்
ஒற்றுமையே எமது பலம்
ஊடக வெளியீடு – 27.11.2023
சுற்றாடல் அமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் தனக்கு பயன்படுத்த வழங்கப்பட்டிருந்த சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான 02 அதிசொகுசு வண்டிகளை அமைச்சுப்பதவியை இழந்ததை தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைத்து விட்டதாக முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
அமைச்சராக பதவி வகித்த போது தனக்கு பயன்படுத்தவென வழங்கப்ட்டிருந்த 02 அதி சொகுசு ஜீப் வண்டிகளை மீள் ஒப்படைக்காது தாம் பயன்படுத்துவதாக சிங்கள மொழி பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இவ்விரு ஜீப் வண்டிகளையும் ஜனாதிபதி செயலகத்திடம் தாம் கையளித்து இருப்பதாக உறுதிப்படுத்தினார். ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் (போக்குவரத்து) புத்திக ஜெயதிஸ்ஸ 2023.11.02ம் திகதி எழுத்து மூலம் தனக்கு அனுப்பியிருந்தார். (ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது.)
இது தொடர்பாக மேலதிக தகவல்களை ஜனாதிபதி செயலகத்தின் போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் அவர்களிடம் கேட்டறிய முடியும் என தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரின் ஊடகப்பிரிவு
2022 ஆண்டு ஹஜ் குழுவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அமைச்சர் நஸீர் அஹமட் அவர்கள் தனது சொந்த நிதியிலேயே! ஹஜ்ஜுக்கு பயணித்துள்ளார்.
2022 ஆண்டு ஹஜ் பயணம் சம்பந்தமாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் அவர்கள் உரையாற்றிய காணொளி (2022.07.31)
பொய்களைப் பரப்புபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்
#சிரேஷ்ட பேராசிரியராக பதவியுயர்வு பெறுகிறார் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தவிசுப் பேராசிரியராக கடமையாற்றும் றமீஸ் அப்துல்லா அவர்கள் சிரேஷ்ட பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறையில் 1969 இல் பிறந்த இவர், தனது ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை அல் -மர்ஜான் வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை சம்மாந்துறை மகாவித்தியாலயத்திலும் கற்றார். இளமைக்காலத்தில் இலக்கிய ஈடுபாடும், வாசிக்கும் ஆர்வமும் இவரிடம் இயற்கைப் பண்புகளாக இருந்தன.
இதற்கேற்றாற்போன்ற நண்பர்களும் இலக்கிய ஆசிரியர்களும் இவருக்குக் கிடைத்தார்கள். உயர்தரத்தில் ஒரு வருடம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்றதனால் இவர் அறிவியல் ஊட்டம் பெற்றதோடு, மன்சூர் ஏ. காதிர், பஸீல் காரியப்பர்; முதலிய ஆசிரியர்களின் நிழலில் இலக்கியத்தையும் கற்றுத் தேர்ந்தார். தனது பல்கலைக்கழகக் கல்வியை பேராதனையில் தொடர்ந்த றமீஸ் அப்துல்லா, 1995 இல் தமிழ் சிறப்பு இளங்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுகொண்டார். கற்கை முடிவில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் உதவி விரிவுரையாகக் கடமையாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.
1995 இல் தென்கிழக்குப் பல்கலைக்கழத்தில் விரிவுரையாளராக கடமையேற்ற றமீஸ் அப்துல்லா, தனது முதுதத்துவமாணிப் பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களான சி. தில்லைநாதன், எம்.ஏ. நுஃமான் ஆகியோரின் வழிகாட்டலில் 2003 இல் பெற்றுக்கொண்டார். மேலும் பேராசிரியர் திஸ்ஸ காரியவசம், பேராசிரியர் சி. தில்லைநாதன் ஆகியோரின் கீழ் பொதுசனத் தொடர்பாடல் துறையில் கலாநிதிப் பட்டத்தை சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் 2010 இல் பெற்றதோடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறை தலைவர், இணைப்பாளர் போன்ற உயர் பதவிகளை வகித்து, பின் 2014 இல் பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார்.
பாடசாலைக் காலத்தில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் நாட்டம் கொண்டிருந்தாலும் பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்திலேயே இவரது இலக்கிய அறிவு செழுமையுற்றது எனலாம். முதுபெரும் எழுத்தாளர் கே. கணேஷ் தமிழாக்கம் செய்த, சீன எழுத்தாளர் "லாவ் ஷ" வின் 'கூனற்பிறை' எனும் நாவலை திறனாய்வு செய்து இவர் ஆற்றிய உரை மிகுந்த பராட்டையும், இலக்கிய அடையாளத்தையும் இவருக்குப் பெற்றுத்தந்தது. பேராசிரியர் சி. தில்லைநாதனின் உறவால் கம்பர் மீது ஈடுபாடுகொண்ட இவர், சிறந்த தமிழ்த்துறை மாணவருக்கான ஆறுமுக நாவலர் விருதினையும் 1995 இல் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
றமீஸ் அப்துல்லாவின் ஆரம்பகாலக் கட்டுரைகள் 1990 களில் நேசன், தினகரன் முதலிய பத்திரிகைகளில் வெளிவந்தன. ஜே. பௌஸ்தீனை ஆசிரியராகக் கொண்டு கொழும்பிலிருந்து வெளிவந்த நேசன் பத்திரிகையில் 'கீழ்வானில்' என்ற மகுடத்தின் கீழ் ஈழத்து இலக்கிய உலகிற்கு வளம்சேர்த்த ஈழமேகம் பக்கீர்த்தம்பி, ஆ.மு. ஷரிபுத்தீன், அ.ஸ. அப்துஸ் ஸமது, மருதூர்க் கொத்தன், பஸீல் காரியப்பர் ஆகியோரின் பங்களிப்புக்கள் குறித்து இவர் எழுதிய தொடர் பலரது கவனத்தையும் ஈர்த்ததொன்றாகும். தினகரனில் வெளிவந்த பேராசிரியர்களான க. கைலாசபதி, எம்.எம். உவைஸ் குறித்து எழுதிய கட்டுரைகளும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், நாட்டாரியல் குறித்த கட்டுரைகளும் இவரது ஆளுமையின் வெளிப்பாடுகளாக அமைந்தன.
பேராசிரியர் கா. சிவத்தம்பி, வீ. ஆனந்தன் போன்றோரின் வழிகாட்டலில் நாட்டாரியல், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் மீதான இவரது ஆர்வம் பலதளங்களிலும் வெளிப்பட்டது. தனது இளங்கலைமாணிப் பட்டத்திற்காக "கிழக்கிலங்கை கிராமிய இலக்கியத்தில் முஸ்லிம் பண்பாட்டுச் செல்வாக்கு" என்னும் தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வேடு, நூல்வடிவம் பெற்று மல்லிகைப் பந்தல் வெளியீடாக "கிழக்கிலங்கைக் கிராமியம்" (2001) என்ற தலைப்பில் வெளியானது. இவரது நாட்டாரியல் ஆய்வார்வம் குறித்து சி. தில்லைநாதன் (2009: iX) கூறும் கருத்தொன்று பின்வருமாறு அமைகின்றது :
"றமீஸ் அப்துல்லா பல கிராமங்களுக்குச் சென்று தம் ஆய்வுக்கு வேண்டிய தரவுகளைத் திரட்டிக் கொண்டார். ஏலவே வெளியிடப் பட்டவையும் வெளியிடப்படாதவையுமான நாட்டார் பாடல்களையும், பழமொழிகளையும், விடுகதைகளைகளையும் ஆதாரங்களாகக் கொண்டார். கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாடு, உலகநோக்கு, மதிநுட்பம், அழகியலுணர்வு, மொழிவழக்கு, தொடர்பாடல், நயம் முதலானவற்றை ஓரளவுக்காயினும் எடுத்துக் காட்டுவதாக அவரது ஆய்வு அமைந்தது. இஸ்லாமியர் பண்பாட்டிலும், தமிழ் மொழியிலும் அவருக்குள்ள ஆர்வமும், அறிவும் ஒருபுறமாக, அவரது நிதானமும் சமநோக்கும் உற்சாகமளிக்கும் வகையில் வெளிப்பட்டன"
பேராசிரியர் எம்.எம். உவைஸ் அவர்களின் மறைவினைத் தொடர்ந்து அவரது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களும், ஆராய்ச்சி நூலகமும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டதன் காரணமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்கும் நிலை உருவானது. இக்கற்கை நெறியில் றமீஸ் அப்துல்லா அவர்களின் பணி காத்திரமானதாகும். முதன்நிலை விரிவுரையாளராக இருந்து "இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்" இப்பல்கலைக்கழகத்தில் போதிக்கப்படுவதோடு, இவ்விலக்கியம் தொடர்பான ஆய்வுப் பணிகளும் இவரால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. இத்துறை சார்பான ஆய்வுக் கட்டுரைகள் பலவும் தேசிய, சர்வதேச மாநாடுகளில் இவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் க. இரகுபரனுடன் இணைப் பதிப்பாளராக இருந்து தொகுக்கப்பட்ட "தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் அடையாளம்" (2017) என்ற நூல் மிகுந்த கவனயீர்ப்பைப் பெற்றதொன்றாகும்.
நவீன இலக்கியப் பரிச்சயம் கொண்டவராக அறியப்படும் றமீஸ் அப்துல்லாவினால் அவ்வப்போது எழுதிய நவீன கவிதைகளின் தொகுப்பாக ~வாஸ்தவம்| 2011 இல் வெளியாகியது. சிறுகதைகள் மீது இவருக்கிருந்த நாட்டம் பின்னர் சிறுகதை ஆய்வாளராகவும் இவரை பரிணமிக்கச் செய்தது. இவ்வகையில் திறனாய்வுப் பார்வைகளுடன் கூடியதாக இவரால் எழுதப்பட்ட "அம்பாறை மாவட்ட சிறுகதை ஆளுமைகள்" என்னும் நூல் 2012 இல் வெளிவந்தது. இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய பேராசிரியர் அ. சண்முகதாஸ், "ஒரு பிரதேசத்தின் சிறுகதை ஆய்வின் வகை மாதிரிக்கு இந்நூல் முன்னுதாரணமாககத் திகழ்கிறது" எனக் குறிப்பிடுவது கவனம் கொள்ளத்தக்கதொன்றாகும்.
பத்திரிகை மற்றும் இதழியல் துறைகளில் ஆர்வத்துடன் இயங்கும் றமீஸ் அப்துல்லா, அவை தொடர்பான ஆய்வுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருபவர் ஆவார். இவ்வகையில் வெளிவந்த "இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் (1841-1950)" (2012) என்னும் நூல், இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் தொடர்பாக இதுவரை வெளிவந்த நூல்களிலிருந்து வேறுபட்டு பல்வேறு புதிய தகவல்களையும், அறியப்படாத பத்திரிகைகள் பற்றிய விபரங்களையும் தருவதாகும். தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊடகவியல்துறை டிப்ளோமா கற்கைநெறியின் வளவாளராகவும், இணைப்பாளராகவும் இவர் தொடர்ந்தும் கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
தினகரன் நாளிதழில் றமீஸ் அப்துல்லாவால் எழுதப்பட்ட பத்தி எழுத்துக்களின் தொகுப்பு "எண்ணப் பெருவெளி" (2018) என்னும் நூலாக வெளிவந்தது. சமூகம், அரசியல், கலை, இலக்கியம் என்றவாறாக எழுதப்பட்ட 102 பத்திகள் இந்நூலில் காணப்படுகின்றன. இவ்விதமான எழுத்துக்களுக்குப் பின்னால் இருக்கும் றமீஸ் அப்துல்லாவின் சமூக அக்கறை பலராலும் விதந்து கூறப்பட்டதொன்றாகும். உமா வரதராஜன் (2018) இதுபற்றி :
"நண்பர் றமீஸின் இத்தொகுப்பு தகவல்கள், ரசனை, வரலாறு, நடப்பு அரசியல் ஆகிய தளங்களில் பயணித்தாலும் இதன் உள்ளொளியாக நான் கண்டுணர்வது இந்நாட்டின் இனங்களுக்கிடையே நிலவவேண்டிய ஐக்கியத்தின் மீதான அவரது தீராத காதலையே. இத்தொகுப்பின் பல பத்திகளிலும் இது சார்ந்த கனவுகளும், அபிலாஷைகளும், வெப்புசாரங்களும், ஏக்கமும் வெவ்வேறு விதங்களில் வெளிப்படுகின்றன. இந்தத் 'தீராக் காதலே" அவரையும் என்னையும் நெருங்க வைத்தது. பல மேடைகளிலும் அவரைப் பேச வைக்கத் தூண்டியது. இனங்களுக்கிடையே நிலவவேண்டிய நல்லுறவு பற்றியும், பிரிக்க முடியாத பாரம்பரியம் பற்றியும் அண்மையில் ஒரு மேடையில் நண்பர் றமீஸ் உரையாற்றிய போது மண்டபத்தில் குழுமியிருந்த மக்கள் கரகோஷம் செய்து வரவேற்றார்கள். அது உணர்த்திய செய்தி ~மனிதர்கள் இன்னமும் மனிதர்களாகவே இருக்கிறார்கள்| என்பதாகும்"
எனக் குறிப்பிடுகின்றார். இவ்வகையில் முஸ்லிம் அரசியல், நல்லிணக்கம், சமூக இணக்கப்பாடு முதலிய எழுத்துச் செயற்பாடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபாடு காட்டி வருபவராக றமீஸ் அப்துல்லா அறியப்படுகின்றார். இவை குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் தனிக்கவனம் பெறுவதாகும்.
பதிப்புப் பணியிலும் இவரது பங்களிப்பு குறிப்பிட்டுச்சொல்லக்கூடியதாகும். பல்கலைக்கழக வெளியீடுகளான இளங்கதிர், பிரவாகம், கலம் முதலிய இதழ்களின் பதிப்பாசிரியராக கடமையாற்றிய இவர், "கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் நினைவுப் பகிர்வு" (2016), "அப்துல் மஜீத் ஆளுமையின் அடையாளம்"| (2012), "சம்மாந்துறை வரலாறு (2019)", "கிழக்கு வாசல்" (2017) போன்ற நூல்களின் பதிப்பாசிரியராகவும், இணைப் பதிப்பாசிரியராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆய்வரங்குகள், தமிழ்ச்சங்க செயற்பாடுகள் பலவற்றிலும் றமீஸ் அப்துல்லாவின் பங்காற்றுதல்கள் குறிப்பிடத்தக்கனவாகும். கிழக்கிலங்கையின் அடையாளம், இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய பார்வை, நாட்டாரியல் கூறுகள் முதலிய ஆய்வரங்குகளை நெறிப்படுத்துவதில் இருந்து, கட்டுரை சமர்ப்பித்தல், தொகுதியாக்கம் செய்தல் என்பன வரையான இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கதாகும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதல் பேராசிரியரான இவர், முதலாவது சிரேஷ்ட பேராசிரியராகவும் பதவியுயர்வு பெறுவது மகிழ்ச்சிக்குரியது. அவருக்கு எம் வாழ்த்துக்கள்.
எம். அப்துல் றஸாக்,
விரிவுரையாளர்,
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
♦️இலங்கை விஞ்ஞானி ஜவாஹிருக்கு அமெரிக்காவில் விருது.!
♦️அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்
அனுராதபுர மாவட்டத்திலுள்ள நாச்சியாதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் - விஞ்ஞானி இப்ராஹிம் ஜவாஹிர் அவர்களுக்கு 'அமெரிக்க இயந்திர பொறியியலாளர் சமூகம்' (The American Society of Mechanical Engineers) இன் 2023ம் ஆண்டுக்கான சிறந்த விருது அமெரிக்காவில் வழங்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சி தருகிறது.
அவர் எமது ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதனால் ஊர் சார்பாக அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சிடைகிறேன்.
அவர் தற்போது ஐக்கிய அமெரிக்காவின் University of Kentucky ல் பொறியியல் துறைப் பேராசிரியராகவும் விஞ்ஞான ஆராய்ச்சி ஆய்வு கூடத்தின் தலைவராகவும் இருப்பது இலங்கை மக்களுக்கும் பெருமை சேர்க்கிறது. அவர் சர்வதேசங்களில் பல முக்கிய விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றிருப்பதுடன் அமெரிக்காவிலுள்ள முக்கியமான நிறுவனங்களுக்கு பல மில்லியன் டொலர் செலவிலான திட்டங்களை (Projects) நிறைவேற்றிக் கொடுத்து தனது பல்கலைக் கழகத்துக்கும் ஆராய்ச்சி நிலையத்துக்கும் பாரிய வருமானத்தையும் பெருமையையும் தேடிக்கொடுத்துள்ளார்.
அவர் உலகில் உள்ள பல முன்னணி பல்கலைக் கழகங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருவதுடன் அங்கு பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வருகிறார். பொறியியல் முதுமாணி மாணவர்களுக்கான பல ஆராய்ச்சிப் புத்தகங்களை அவர் எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
👉கல்விப் பயணம்
ஜவாஹிர் அவர்கள் தனது இரண்டாம் வகுப்பு வரையுள்ள ஆரம்பக் கல்வியை அனுராதபுர மாவட்ட நாச்சியாதீவு இக்பால் மகாவித்தியாலயத்தில் பெற்றுக் கொண்டதுடன் க.பொ.த. (சா/த) வரை Irukkalampiddy Muslim Madhya Maha Vidyalaya த்தில் கற்ற அவர், தனது க.பொ.த.(உ/த) கல்வியை யாழ்ப்பாணம் Sri Skandavarodaya College லும் பெற்றார். பின்னர் அவர் Bachelor of Mechanical Engineering Degree யையும் Master of Science in Mechanical Engineering ஐயும் மாஸ்கோவில் உள்ள Patrice Lumumba University லும் பெற்றார்.
ஜவாஹிர் அவர்கள் அவுஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் அமைந்துள்ள New South Wakes University ல் Mechanical Engineering எனும் துறையில் தனது கலாநிதி(PhD) கற்கை நெறியை பூர்த்தி செய்தார்.
அதன் பின்னர் அவர் அவுஸ்திரேலிய நாட்டின் Wollongong University இல் Mechanical Engineering துறை விரிவுரையாளராக கடமையாற்றிமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஜவாஹிர் அவர்கள் பொறியியலாளராக பட்டம் பெற்ற பின்னர் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையிலும் National Engineering Research and Development Centre( NERD) ல் ஆய்வுக்கான பொறியியலாகவும் கடமைபுரிந்து நாட்டுக்கான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
👉நாச்சியாதீவுத் தொடர்பு
இவரது பெற்றோர் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து தமது பிள்ளைகளை வளர்த்தார்கள். தந்தை இப்ராஹீம் ஸாஹிப் மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டியையும் தாய் பாத்திமா பீவி அனுராதபுர மாவட்ட நாச்சியாதீவையும் பிறப்பிடமாகக் கொண்டவர்களாவர்.
பேராசிரியர் ஜவாஹிர் அவர்களது சகோதரரான இப்ராஹீம் அன்ஸார் அவர்கள் எகிப்து, மலேசியா, சவூதி அரேபியா,ஓமான் ஆகிய நாடுகளில் இலங்கை நாட்டின் தூதுவராக கடமையாற்றியிருப்பதுடன் சிறிது காலம் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
முன்னை நாள் தூதுவர் இப்ராஹீம் அன்ஸார் தனது குடும்பத்தின் நிலை பற்றி குறிப்பிடுகையில் "நாம் அடிப்படையில் எருக்கலம்பிட்டியில் தான் வசித்து வந்தோம்.
எமது குடும்பத்தில் ஒவ்வொரு பிள்ளையும் தாயின் வயிற்றில் தரித்த பின்னர் பிரசவத்திற்காக இன்னும் 40 நாட்கள் இருக்கின்றன என்ற நிலை வந்தால் எமது தகப்பன் எமது தாயை நாச்சியாதீவுக்கு அழைத்துச் செல்வார்.
அங்கு தான் நாம் ஒவ்வொருவரும் பிறந்தோம். எனவே எமது பிறந்தகம் நாச்சியாதீவு தான். எனது சகோதரர் ஜவாஹிர் அவர்கள் இரண்டாம் வகுப்பு வரை நாச்சியாதீவு இக்பால் மகாவித்தியாலயத்தில் தான் கல்விகற்றார்" எனக் கூறுகிறார்.
👉நாச்சியாதீவில் உறவுகள்
நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமை புரிந்து தற்போது ஓய்வு பெற்றிருக்கும் AHA Azeez அவர்களது தாயார் அதே ஊரைச் சேர்ந்த Mr. Yakoob, Mr. Seinulabdeen,Mr. Habeeb Mohamed, Mr. Ibramsa ஆகியோர் பேராசிரியர் ஜவாஹிர் அவர்களது தாயாரின் உடன்பிறப்புக்களாவர். இவர்கள் அனைவரதும் பிள்ளைகள் தற்போது நாச்சியாதீவிலேயே வசித்து வருகிறார்கள்.
👉மூளைசாலிகள் வெளியேற்றம்
இலங்கை மண் ஈன்றெடுத்த இத்தகைய விஞ்ஞானிகள் பலர் வெளிநாடுகளில் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் தொழில் செய்வதும் பாராட்டுக்களை பெறுவதும் மகிழ்ச்சி தரும் செய்தியாக இருப்பினும் இன்னொரு வகையில் அவர்களது சேவை இந்நாட்டுக்கு கிடைக்கவில்லை என்ற விடயம் கவலை தருகிறது.
எமது இலங்கை நாடு வளமான புத்திஜீவிகளை கொண்ட நாடு. ஆனால் அவர்கள் உயர்ந்த கல்வித் தகைமைகளை அடைகின்ற பொழுது அத்தகைய திறமைசாலிகளை நாட்டில் தக்க வைத்துக் கொள்வதற்கான பொறிமுறை இந்த நாட்டில் இல்லாமல் இருப்பது கண் கூடு.
குறிப்பாக அண்மைக் காலத்தில் இனவாதம், அரசியல் நெருக்கடிகள், யுத்தங்கள், பொருளாதார நெருக்கடிகள் போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட காரணிகளால் இந்நாடு பல புத்திஜீவிகளையும் விஞ்ஞானிகளையும் துறை சார் நிபுணர்களையும் இழந்திருக்கிறது. அவர்கள் புலம்பெயர்ந்து சென்று விட்டார்கள்.
பல்கலைக்கழகங்களில் 50% விரிவுரையாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன. வைத்தியத்துறையிலும் இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப் போனால் இந்த நாட்டின் நிலை என்னவாகும்?
மேற்கத்திய நாடுகள் எம் போன்ற நாடுகளைச் சேர்ந்த புத்திஜீவிகளுக்கு கவர்ச்சியான சலுகைகளையும் கொழுத்த சம்பளங்களையும் வழங்கி அவர்களை உள்வாங்கி தமது நாடுகளை முன்னேற்றி இருப்பதை நாம் அறிவோம். ஆனால் துரதிஷ்டவசமாக எமது நாடு இத்தகைய புத்திஜீவிகளை தொடர்ந்து இளந்துவருகிறது. இன்னும் ஓரிரு வருடங்களில் இதன் பயங்கரமான பாதிப்பை நாம் அனுபவித்தே தீருவோம்.இப்போதே அனுபவிக்கிறோம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
துறை சார் நிபுணர்களை உருவாக்குவது 'பர்ளு கிபாயா' என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். அந்த வகையில் இஸ்லாமிய உணர்வுள்ள, சமூக சேவை மனப்பாங்கு கொண்ட புத்திஜீவிகள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் வைத்தியர்கள், நிபுணத்துவ அறிவு கொண்டவர்கள் என்று ஒவ்வொரு துறைக்கும் உரியவர்களை தேவையான அளவு எண்ணிக்கையில் உருவாக்கி அவர்களை தக்க வைத்துக் கொள்வது சமூகத்தின் கடமையாகும். ஆனால் தற்போதைய நிலை மிக கவலைக்கிடமாக இருக்கிறது. இது பற்றி நாட்டுத் தலைவர்களும் பொறுப்பான பதவிகளில் அமர்ந்திருப்பவர்களும் அதிகமதிகம் சிந்திக்க வேண்டும். பேராசிரியர் ஜவாஹிர் போன்றவர்கள் இந்த நாட்டில் இருந்திருந்தால் நிலை எப்படி இருக்கும் என்று சிந்தித்து பார்ப்போம்.
எனவே எதிர்காலத்தை திட்டமிடுவதற்கான வழிமுறை ஒன்று இந்த நாட்டுக்குத் தேவைப்படுகிறது
சுவிஸ் பேங்கில் பணம் டெப்பாசிட் செய்து தேவை படும்போது எடுக்கலாம் என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் சுவிஸர்லாந்து தேசத்தில் காலத்தையும் டெப்பாசிட் செய்து தேவை படும்போது எடுக்கலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
ஆம், சுவிஸர்லாந்து தேசத்தில் "Time Bank" என்று ஒரு முதியோர் பென்ஷன் திட்டத்தை அந்த நாட்டுஅரசாங்கம் (Swiss Federal Ministry of Social Security) நடத்துகிறது.
இந்த "கால வங்கி"யில் நாம் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்போது நம்முடைய நேரத்தை டெப்பாசிட் செய்யலாம். ஆச்சிரியமாக இருக்கிறதா?
ஆம் நாம் ஆரோக்கியமாக இருக்கும் போது Swiss Federal Ministry of Social Securityயில் கணக்கு ஆரம்பித்து நம்முடைய Free Timeயை டெப்பாசிட் செய்யலாமாம். பிறகு நமக்கு தேவைபடும் போது அந்த Timeயை எடுத்து பயன் படுத்தி கொள்ளலாமாம்.
அங்கு வேலை நிமித்தம் சில வருடங்கள் சென்ற நண்பர் ஒருவரின் வார்த்தைகளில் இதை புரிந்துகொள்வோம் :
நான் ஸ்விஸர்லாந்தில் தங்கி இருந்தபோது ஒரு வீட்டை வாடகைகக்கு எடுத்திருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர், கிரிஸ்டியான 67 வயதான, ஓய்வு பெற்ற ஆசிரியை. தேவையான அளவுக்கு பென்ஷன் வாங்குபவர்.
அதற்கு மேல் நான் கொடுக்கும் வீட்டு வாடகை வேறு. இதை வைத்து அவர் நினைக்கும் விதம் எந்த பணகஷ்டமும் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியும்.
ஆனால் அவர் தினமும் ஒரு 87 வயதான முதியவர் வீட்டிற்கு சென்று வேலை செய்கிறார். அதாவது அவருக்கு தேவைபடும் உதவிகளை செய்கிறார். அவருடன் உரையாடுகிறார்.
அவருக்கு தேவைபடும் போது மருத்துவர்களுடன் தொடர்பு கொள்ளவும், மருந்துகள் வாங்கவும் உதவி செய்கிறார். சுருக்கமாக சொன்னால், தினமும் இரண்டு மணிநேரம் அந்த முதியவர் வீட்டில் வேலை செய்கிறார்.
நான் கிரிஸ்டியனாவிடம், "அந்த முதியவர் உங்கள் உறவினரா இல்லை அவருக்கு சம்பளத்திற்காக வேலை செய்கிறீர்களா" என்று கேட்டேன்.
"இரண்டுமில்லை, அந்த முதியவர் என் உறவினருமில்லை, நான் அவரிடம் சம்பளமும் வாங்கவில்லை" என்ற அவரது பதில் எனக்கு ஆச்சிரியத்தை அளித்தது.
பிறகு அவரே அதை விளக்கினார், " நான் இப்பொழுது ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னால் இந்த மாதிரி வேலைகளை செய்ய முடிகிறது. எனவே இந்த மாதிரி வேலைகளை செய்து என்னுடைய 'நேரத்தை' சேமித்து வைத்து கொள்கிறேன்.
நாளை எனக்கு இந்த 'நேரம்' தேவைபடும் போது எடுத்து உபயோ படுத்திக்கொள்வேன். நான் Swiss Federal Ministry of Social Securityயில் பதிவு செய்துள்ளேன். நான் அந்த முதியவருக்கு செலவிடும் நேரங்கள் என்னுடைய கணக்கில் வரவு வைக்கபடும்.
எப்பொழுது எனக்கு உதவி தேவை படுகிறதோ, அப்பொழுது Swiss Federal Ministry of Social Securityக்கு சொன்னால் அவர்கள் யாரையாவது உதவிக்கு அனுப்பி என் கணக்கில் உள்ள 'நேரத்தை' செலவு செய்வார்கள்" என்று விளக்க மளித்தார்.
அவர் மேலும் இது பற்றி சொல்லும் போது, "இத்திட்டத்தில் கணக்கு தொடங்க விரும்புபவர்கள் ஆரோக்கியமாகவும், சேவை மனபான்மை உடையவர்களாகவும் இருப்பதுஅவசியம். தினமும் உதவி தேவைபடும் முதியவர்களை அக்கரையுடன் கவனித்து கொள்ள வேண்டும்.
இப்படி அவர்கள் செலவிடும் 'நேரம்' அரசு மெயின்டெய்ன் பண்ணும் அவர்கள் கணக்கில் வரவு வைக்கபடும். ஒவ்வொரு வருட முடிவிலும் இந்நந 'நேர வங்கி (Time Bank)' எத்தனை மணி நேரம் வரவு வைக்க பட்டுள்ளது என்று கணக்கிட்டு "நேர சேமிப்பு அட்டை (Time Bank Card)" வழங்குவார்களாம்.
நமக்கு தேவை படும் போது அந்த அட்டையை பயன் படுத்தி நம்முடைய நேரத்தை எடுத்து கொள்ளலாம். அப்படி நாம் நம் நேரத்தை எடுக்க நாம் ரிக்வெஸ்ட் கொடுக்கும் போது, அவர்கள் நமக்கு உதவி செய்ய 'நேர சேமிப்பாளர்கள்' யாரையாவது அனுப்பி வைப்பார்கள்.
இத்திட்டத்தினால், நாமும் எந்தவித தாழ்வுமனப்பான்யின்றி அவரிடம்உதவியை பெற்று கொள்ள முடியும்." என்று முடித்தார்.
ஆனாலும் என் மனதில் இத்திட்த்தின் செயல்பாடுகளில் சத்தேகங்கள் இருக்கதான் செய்தன. அடுத்த சில நாட்களில் இதை சுத்தமாக மறந்தும் விட்டேன்.
ஒரு நாள் நான் அலுவலம் செல்ல தயாரிகி கொண்டிருக்கும் பொழுது, கிரிஸ்டியானா என்னை இன்டர்காமில் அவசரமாக அழைத்தார். அங்கு போனால், அவர் ஒரு ஸ்டூலில் இருந்து கீழே விழுந்து கணுக்காலில் அடிபட்டு கொண்டிருந்தார்.
நான் அலுவலகத்திற்கு பர்மிஷன் சொல்லிவிட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். கீழே விழுந்த வேகத்தில் கணுக்கால் உடைந்திருப்பதாகவும் சில நாட்கள் படுக்கையில்தான் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லி விட்டனர்.
நான் அடுத்தநாள் முதல் "Work at Home" வாங்கி அவருக்கு உதவி செய்வதாக சொல்லிவிட்டு அலுவலகம் சென்று விட்டேன். மாலை வீடு திரும்பியதும், அவரை கவனித்து கொள்ள ஒரு இளைஞர் வந்திருப்பதை கவனித்தேன்.
அவர் கணக்கில் தேவையான அளவு 'நேரம்' வரவுவைக்க பட்டிருந்தாகவும், அதை எடுத்து பயன் படுத்த ரிக்வெஸ்ட் கொடுத்ததால், அரசு இந்த இளைஞரை அனுப்பி இருந்தாகவும் தெரிவித்தார்.
என்ன அருமையான திட்டம், இந்த 'நேர சேமிப்பு' திட்டம் என்பது அப்போதுதான் எனக்கு புரிந்தது.
இன்று ஸ்விஸர்லாந்து தேசத்தில் இந்த 'நேர வங்கி' திட்டம், முதியவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் அருமையான திட்டமாக திகழ்கிறது.
இது நாட்டின் பென்ஷன் செலவுகளை குறைப்பது மட்டுமல்லாமல் ஒரு சமூக தீர்வாகவும் செயல்பாட்டில் உள்ளது.
பெரும்பான்மையான ஸ்விஸ் குடிமக்கள் இந்த முதியோர் நலதிட்டத்தை ஆதரித்து தங்கள் பங்களிப்பை வழங்குகிறார்கள்.
மெஜாரிட்டி ஸ்விஸ் குடிமக்கள் இத்திட்டதில் பங்களிக்க, கணக்கு தொடங்க விரும்புவதாக ஸ்வீஸர்லாந்து தேசத்து சர்வே ஒன்று சொல்கிறது.
ஸ்விஸ் அரசும் இந்த 'நேர வங்கி' திட்டத்தை ஆதரிக்க சட்டமியற்றி உள்ளது.
நாமும் நமது தேசத்தில் இந்த திட்டத்தை தொடங்கி நமது நாட்டு முதியவர்களுக்கு உதவி செய்யலாமே.
கிழக்கு மாகாணத்தின் வளங்களை துஷ்பிரயோகம் செய்கின்றாரா ஆளுனர்?
மாகாணங்களுக்கான ஆளுனர்கள் என்பது ஜனாதிபதியின் பிரதிநிதிகளே தவிர மக்கள் பிரதிநிதிகள் இல்லை. அந்த வகையில் பொதுமக்களின் வாக்குகளைப் பெற்று, மாகாண சபைகளுக்குத் தெரிவாகும் முதலமைச்சர், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கொண்டுள்ள சில அதிகாரங்கள், சலுகைகள் மாகாண ஆளுனர்களுக்கு கிடையாது
இலங்கையில் மாகாணங்களைப் பொறுத்தவரை எந்தவொரு வௌிநாட்டு முதலீடுகளையும் நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியாது. எந்தவொரு வௌிநாட்டுடனும் முதலீடுகள் தொடர்பில் இலங்கைக்கு வௌியே நேரடிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடியாது.
அதே போன்று இலங்கையின் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூட வௌிநாடுகளுக்கான சுற்றுப் பயணங்களின் போது முதலீடுகள், இருதரப்பு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது அந்தந்த நாடுகளில் இருக்கும் இலங்கைத் தூதுவர்களையும் தம்முடன் அழைத்துச் செல்வது மரபாகும்.
கிழக்கு மாகாண ஆளுனராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்ட பின்னர் இந்த மரபுகளை அப்பட்டமாக மீறியுள்ளார். இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மாகாண சபையின் நிதியில் சுற்றுப் பயணம் செய்துள்ளார். தான் மட்டும் தனியாகச் செல்லாமல் தனக்கு நெருக்கமான இன்னும் சிலரையும் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடித்து அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் துறைசார்ந்த நிபுணர்கள் கிடையாது. வெறும் அரசியல் அல்லக்கைகள் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறெந்த தகுதியும் இல்லை.
அத்துடன் வௌிநாட்டு விஜயங்களின் மூலம் கிழக்கு மாகாணம் இதுவரை எந்தவித நன்மையையும் பெற்றுக் கொள்ளவில்லை. அந்த வகையில் வெறும் பம்மாத்து சந்திப்புகளாகவே வௌிநாடுகளில் அவர் மேற்கொண்ட விஜயங்களை கருத வேண்டியுள்ளது.
எடுத்துக்காட்டாக ஆந்திராவுக்கான செந்தில் தொண்டமானின் விஜயத்தின் போது அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் நபர் புகைப்படக் கலைஞரை நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கின்றார். அத்துடன் தனது கோட் ஐ பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்று கட்டை விரல்களை உயர்த்தி தம்ஸ் அப் காட்டிக் கொண்டிருக்கின்றார். ஆக இந்த கலந்துரையாடல் என்ற விடயம் வெறும் பந்தா என்பது தௌிவாக விளங்கவில்லையா? ஏனெனில் சீரியஸான கலந்துரையாடல் ஒன்றின் போது அதில் கலந்து கொண்டுள்ள யாரும் புகைப்படக்கலைஞர்களைப் பார்த்து புன்னகைக்க மாட்டார்கள்.
இன்னொரு புறத்தில் கிழக்கு மாகாணத்தில் 5000 பேரளவிலானோருக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக அண்மையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் கிழக்கு விஜயத்தின் போது ஆளுனர் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது தான் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று முதலீட்டுச் சபையுடன் இலங்கையில் கிளையொன்றை அமைப்பது தொடர்பான ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது. அதற்குள்ளாக / அலுவலகமே இன்னும் செயற்படவே இல்லாத நிலையில் ஆளுனர் எவ்வாறு ஐயாயிரம் பேருக்கு அந்தத் துறையில் தொழில் பெற்றுக் கொடுக்க முடியும்?
இவ்வாறான பின்புலத்தில் தான் கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது மாகாண சபைகள் செயற்படாத நிலையிலும் ஆளுனர் அலுவலகம் மூலமாக சுமார் 14 ஆயிரத்து 136 கோடி ரூபா அளவிலான பொதுமக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இது ஒட்டுமொத்த ஒன்பது மாகாணங்களின் செலவாகும். கிழக்கு மாகாண ஆளுனர் அந்த வகையிலும் முன்னின்று செலவழிப்பவராகவே இருப்பார் என்றே தோன்றுகின்றது. ஏனெனில் ஏனைய மாகாணங்களின் ஆளுனர்களை விட அடிக்கடி வௌிநாடுகளுக்கான விஜயங்களை மேற்கொள்வது இவர் தானே..
இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் மாகாண ஆளுனர் ஒருவருக்கு மூன்று வாகனங்களை மட்டுமே உத்தியோகபூர்வமாக பயன்படுத்த முடியும். ஆனால் செந்தில் தொண்டமான் 22 அரச வாகனங்களை தன் பயன்பாட்டுக்காக விடுவித்துக் கொண்டுள்ளார். அது தொடர்பில் நியூஸ் அலர்ட் ஊடகம், விடுவிக்கப்பட்டுள்ள வாகனங்களின் பதிவு இலக்கங்களுடன் செய்தியொன்றை வௌியிட்டுள்ளது. அவற்றுக்கான எரிபொருள் பாவனைக்கு மட்டுமே மாதாந்தம் 30 லட்சம் ரூபா வரையிலான மக்களின் வரிப்பணம் வீணாக செலவழிக்கப்படுகின்றது.
ஒருசிலருக்கு ஒருநாள் அணிந்த ஆடையை மீண்டும் அணியப் பிடிக்காது. அவ்வாறு அணிவதாயின் நீண்டநாட்களின் பின்னரே அதனை அணிவார்கள். செந்தில் தொண்டமான் சற்று மாறுபட்டவராக ஒரு நாள் பயன்படுத்திய வாகனத்தை மீண்டும் நீண்ட நாட்களின் பின் தான் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டுள்ளாரோ தெரியாது. இல்லாது போனால் எதற்காக இத்தனை வாகனங்கள்?
விடுவிக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் இன்னொரு அதிர்ச்சித் தகவலையும் நியூஸ் அலர்ட் செய்தி நிறுவனம் வௌியிட்டுள்ளது.
குறித்த வாகனங்கள் மாத்தளை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆதரவாளர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வருவதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறாயின் கிழக்கு மாகாணம் என்பது தனது தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தனிப்பட்ட சொத்து என்பதாக செந்தில் தொண்டமான் நினைத்துக் கொண்டுள்ளாரா? கிழக்கு மாகாண மக்களின் வரிப்பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டு, அதே வரிப்பணத்தில் பராமரிக்கப்படும் வாகனங்கள் எதற்காக மாத்தளை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள அவரது கட்சி முக்கியஸ்தர்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும்? எதிர்காலத்தில் குறித்த மாவட்டங்களையும் கிழக்கு மாகாணத்துடன் இணைத்து அகன்ற கிழக்கு மாகாணம் ஒன்றை அமைக்கும் உத்தேசம் செந்தில் தொண்டமானுக்கு இருக்கின்றதோ தெரியாது.
இவ்வாறான விடயங்களைப் பார்க்கும் போது ஆளுனர் என்ற பதவியில் அமர்ந்து கொண்டு கிழக்கு மாகாணத்தின் வளங்களையும், சொத்துக்களையும் செந்தில் தொண்டமான் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. அவ்வாறான ஒருவர் எந்தவொரு மாகாண ஆளுனர் பதவிக்கும் பொருத்தமானவர் அல்ல என்பதே பொதுமக்களின் நிலைப்பாடாகும்.
கிழக்கில் மீண்டும் தலைதூக்கும்
தமிழ் தரப்பு நிருவாகப் பயங்கரவாதம்.
-----------------------------------------------------------------------
சாணக்கியன் எம்பியும் கவர்ணர் செந்தில் தொண்டமானும் இணைந்து முஸ்லிம்களுக்கு சொந்தமான நாவலடி காணிகளை கொள்ளையிட்டு தமிழருக்கு கொடுக்க எத்தனிக்கின்றனரா?
வழமை போல கிழக்கில் தங்களின் அரசியல் மற்றும் நிருவாக செல்வாக்கை மிகத்துல்லிதமாக பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் நிருவாக பயங்கரவாதத்தின் ஒரு அங்கமே இந்த நாவலடி காணி விவகாரம் ஆகும்.
இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் அலட்சியமாக இருப்பது முஸ்லீம்கள் மத்தியில் பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
முஸ்லிம்களின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் தலைமைகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு முஸ்லிம்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க இதுவரை முன்வரவில்லை
ஆதிவாசிகளையும் விரட்டியடிக்க முனையும் செந்தில் தொண்டமான்
கிழக்கு இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஆதிவாசிகள், கடந்த 1983 வரையான காலப்பகுதி மற்றும் 2009க்குப் பின்னரான காலப்பகுதிகளில் நீண்டகாலமாக மாதுருஓயா அருகே திவுலபத்தனை பிரதேசத்தில் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் கிழக்கு ஆளுனர் செந்தில் தொண்டமானின் அழுத்தம் காரணமாக, அங்குள்ள 50 வரையான ஆதிவாசிகள் குடும்பங்களை தங்கள் சேனைப் பயிர் நிலங்களிலிருந்து விரட்டியடிக்க மகாவலி அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் திவுலப்பத்தனை ஆதிவாசிகள் குடியிருப்பின் தலைவர் மொரானவரிகே குணவர்த்தனவிடம் தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டறிந்தேன்.
அதன் போது அவர் தெரிவித்த விபரங்கள் பின்வருமாறு,
கிழக்கு மாகாணத்தின் திவுலப்பத்தனை பிரதேசத்தில் 1983ம் ஆண்டின் வன்செயல்கள் மற்றும் பாசிசப் புலிகளின் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு முன்னர் சுமார் 1800 ஆதிவாசிகள் குடும்பங்கள் வசித்து வந்தனர். எனினும் பின்வந்த காலங்களில் ஏற்பட்ட அச்சுறுத்தல் நிலைமை காரணமாக இங்கு வசித்தவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து வெவ்வேறு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்திருந்தோம்
யுத்தம் நிறைவடைந்த பின்னர், தெஹிஅத்தகண்டிய, சந்துன்புர, ஹேனானிகல, ரதுகல, ரத்கிந்தை மற்றும் தம்பானை பிரதேசங்களில் இருந்து 50 குடும்பங்கள் அளவில் திவுலப்பத்தனை பிரதேசங்களில் மீண்டும் குடியேறி, சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றோம்
இந்நிலையில் ஆளுனர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாணத்தின் ஒருசிலரைத் திருப்திப்படுத்தும் நோக்கில் எமது பயிர்ச் செய்கை நிலங்களைப் பறித்து, மேய்ச்சல் தரையாக பயன்படுத்த அனுமதிக்குமாறு மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். அதன் காரணமாக அவர்களும் எங்களை இங்கிருந்து வௌியேற்ற முயற்சிக்கின்றார்கள்.
இது மிகப் பெரும் அநீதியாகும். இதுகுறித்து நாங்கள் சர்வதேச ஆதிவாசிகள் உரிமைகளுக்கான அமைப்பில் முறையிட உள்ளோம். மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அமைப்புகளிலும் முறைப்பாடு செய்யவுள்ளோம்.
இது குறித்து இன்று எங்கள் பிரதேசத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றையும் நடத்தி எங்கள் நிலைப்பாட்டை தௌிவுபடுத்தி உள்ளோம்.
ஆதிவாசிகளின் பாரம்பரிய நிலங்களில் இருந்து எங்களை விரட்டியடிக்கும் செந்தில் தொண்டமானின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராக ஊடகங்கள் தங்கள் ஒத்துழைப்பை ஆதிவாசிகளுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(ஆதிவாசிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நீதியான போராட்டத்தில் ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் என் பங்களிப்பை வழங்க உறுதியளித்துள்ளேன். அந்த அப்பாவி ஜீவன்களை தங்கள் வாழ்விடங்களில் இருந்து துரத்தியடிக்க செந்தில் தொண்டமான் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன்.)
அஷ்ரஃப் அலி
Senthil Thondaman இது உங்கள் கவனத்திற்கு...
அரசனை நம்பி புருஷனை கைவிடும் கிழக்கு மாகாண முஸ்லிம் அமைப்புகள்
கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது பதுளை மாவட்ட முஸ்லிம்களின் பெரும்பாலான ஆதரவைப் பெற்ற மலையக முஸ்லிம் கவுன்சில், பொதுஜன பெரமுணவின் வேட்பாளரான செந்தில் தொண்டமானுக்கு தனது ஆதரவை வழங்கி இருந்தது.
பதுளை மாவட்ட சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக அவரை ஆதரிப்பதாகவும் மலையக முஸ்லிம் கவுன்சில் அறிக்கையொன்றை விட்டிருந்தது. மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவர் எம்.ஏ.எம். முஸம்மில் தலைமையில் 2020ம் ஆண்டின் ஜூன் மாதம் 20ம் திகதி செந்தில் தொண்டமானுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்கான கூட்டம் ஒன்றும் நடைபெற்றது
குறித்த தேர்தலில் செந்தில் தொண்டமான் தோற்றுப் போனார்
ஆனால் அதன் பின்னர் அவருக்கு
1. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெருந்தோட்ட இணைப்பாளர்
2. ஜனாதிபதியின் பதுளை மாவட்ட இணைப்பாளர்
3. பசறை, லுணுகலை, எல்ல, பண்டாரவளை, ஹப்புத்தளை, ஹல்தும்முல்லை, ஹாலிஎல, ஊவா பரணகம பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் துணைத்தலைவர் பதவியும் வழங்கப்பட்டது
ஆனாலும் கடந்த கோட்டா ஆட்சியில் பதுளை முஸ்லிம்களுக்கு எந்தவொரு நன்மையும் செந்தில் தொண்டமான் ஊடாக கிடைக்கவில்லை.
இப்போது கிழக்கில் அமைச்சர் நஸீர் அஹமட்டுடன் செந்தில் தொண்டமான் மோதல் போக்கைக் கையாண்டுள்ளார்
அமைச்சர் நஸீர் அஹமட்டுடன் ஒருவகையான அதிருப்தியில் இருக்கும் அங்கத்தவர்களே இல்லாத ஒருசில லெட்டர் பேட் முஸ்லிம் அமைப்புகள் ஓடிப் போய் செந்தில் தொண்டமானை ஆதரித்து அறிக்கை விடுகின்றனர்.
இதில் இரண்டு விடயங்களை நாம் கவனித்தாக வேண்டும்
2020ம் ஆண்டு பதுளை முஸ்லிம்களின் வாக்குகளையும் பெற்றிருந்த போதும் கோட்டா ஆட்சியில் செந்தில் மூலமாக முஸ்லிம்களுக்கு எதுவித நன்மையும் கிட்டவில்லை. அந்த வகையில் செந்திலை ஆதரிக்கப் போய் மலையக முஸ்லிம் கவுன்சில் ஏமாந்து போனது தான் மிச்சம். தவிரவும் இன்று அந்த அமைப்பு இருந்த இடம் தெரியாமல் சிதறிப் போய் விட்டது
செந்தில் தொண்டமான் மலையகத்தைச் சேர்ந்தவர். தனது பதவிக் காலம் முடிந்தவுடன் அவர் மீண்டும் பதுளை மாவட்டத்துக்கு அரசியல் செய்யப் போய்விடுவார். தற்போதைக்கு அவரை ஆதரிக்கும் கிழக்கு முஸ்லிம் அமைப்புகள் அப்போது நிர்க்கதி நிலையில் கைவிடப்படும்.
ஆனால் அமைச்சர் நஸீர் அஹமட் மரணிக்கும் வரை கிழக்கு மண்ணில் தான் அரசியல் செய்தாக வேண்டும். அதற்காக அவர் நிச்சயமாக அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டாக வேண்டும். அவ்வாறான நிலையில் இன்று அவரை எதிர்ப்பவர்களும் தங்கள் பிரதேச அபிவிருத்தி மற்றும் தீர்வுகளுக்காக ஒரு கட்டத்தில் அவரைத் தான் நாடிப் போக வேண்டியிருக்கும்.
சிரிஷ்ட ஊடகவியலாளர்
அஷ்ரஃப் அலி
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
200/A Dehideniya
Kandy
Welcome to the official page of United America News. The latest news and most interesting stories fr
Kandy, 20802
ඔබේ හඬ වෙනුවෙන් ඔබේ මාධ්යය And our media for your voice உங்கள் குரலுக்காக என்றும் உங்கள் ஊடகம்
Kandy
"This is a trusted news exchange page." ● Political Information ● Election Details ● Sports N
Kandy
Welcome to the official NEWS SLRD page. Follow, Like, Share and stay updated with latest n