Yatihena News

எமது யடிஹேன செய்திச் சேவை உடன் இனைந்து இருங்கள் �

09/12/2023

BREAKING: இலங்கையில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு பதிவாகியுள்ளது

⭕ மின்வெட்டுக்கு 'systen failure' காரணம் என்று CEB கூறியுள்ளது.

⭕ மொத்த கிரிட் செயலிலந்து உள்ளதால் பொறியாளர்களுக்கு அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் திரும்ப குறைந்தது பல மணிநேரம் ஆகும்.

09/12/2023

BREAKING: நாடு முழுவதும் திடீர் மின்தடை...!

நாடு முழுவதும் திடீர் மின் தடை

06/12/2023

எமது அல் முஸ்தபா பாடசாலை 2010 OL Batch யினர் எமது பாடசாலைக்கு பெறுமதியான, அழகான podium (பேச்சு மேடை) ஒன்றை அன்பளிப்புச் செய்தனர்.
அல் ஹம்துலில்லாஹ்
வல்லவன் அல்லாஹ் அவர்களின் இந்நற்பணியை அங்கீகரிப்பானாக, அவர்களின் வாழ்விலும், தொழிலும் அருள் புரிவானாக, ஆமீன்

27/11/2023

MCL 2023 கிரிக்கெட் சுறறுத்தொடரின் இரண்டாம் சுற்றுக்கு தெறிவாகியுள்ள அணிகளின் விபரங்கள்.

♦️யடிஹேன நியூஸ்♦️

Photos from Yatihena News's post 25/11/2023

கடந்த 11 வருட காலமாக எமது யடிஹேன ஊரில் பொதுச் சேவையில் ஈடுபட்டு வந்த சுகாதாரக் குழு அங்கத்தவர்களை கௌரவிக்கும் முகமாகஇலங்கை red cross அமைப்பின் 36-வது வருட நிகழ்வின் போது சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

அவர்களின் சேவைகள் தொடர ஊர் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

⭕யடிஹேன நியூஸ்⭕

22/11/2023

அல் முஸ்தபா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் தாய்மார்கள் பாடசாலையின் பழைய மாணவிகள் மற்றும் மாணவர்களின் கல்வியில் அக்கறையுள்ள தாய்மார்களுக்கான ஆலோசனை நிகழ்ச்சி.

"பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் தாய்மார்களின் பங்களிப்பு"

வாழவாளர் 📢 DR. FAKEEHA NOOMAN
(Community Medical Officer-Gampaha Division BUMS University Of Colombo,Dip.In Counselling NISD ,Dip In Art Psychotherapy Practitioner-PRFI(india)

திகதி = 24.11.2023[வெள்ளிக்கிழமை]
நேரம் = பி ப 3.30 தொடக்கம் 5.30 வரை
இடம் = அல் முஸ்தபா மகா வித்தியாலயம்

-ஏற்பாடு- பழைய மாணவிகள் சங்கம்



♦️யடிஹேன நியூஸ்♦️

Photos from Yatihena News's post 19/11/2023

MUSTHAFA CHAMPIONS LEAGUE 2023

இன்று நடை பெற்ற ஆரம்ப போட்டியின் போது.

13/11/2023

உலகின் Number 01 (Plastic and Reconstructive Surgeon)
Professor Ghassan Abu-Sittah

பேராசிரியர் கசான் அபு-சித்தா உலகளவில் தனது மருத்துவ சேவைக்காக பல விருதுகளை வென்ற பிளாஸ்டிக் மற்றும் புனரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்.

அவர் லண்டனில் இருந்திருந்தால்
மில்லியன்களில் சம்பாதித்து சொகுசாக
உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் வாழ்ந்திருக்கலாம்.

அவரின் அந்த லண்டன் வாழ்க்கையை
தியாகம் செய்துவிட்டு

இஸ்ரேலின் வான்தாக்குதலில் எந்த செக்கனிலும்
தனது உயிரைவிட வேண்டி வரலாம் என்று தெரிந்திருந்தும்

காஸா மக்களுக்காக
மருத்துவமனைகளில்
தனது சிறந்த சேவையை
புன்னகைத்த முகத்துடன்
வழங்கிக்கொண்டிருக்கிறார்.

09/11/2023

முதல் நான்கு இடங்களுக்குள் செல்ல பாகிஸ்தான் 287 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும்

நியூசிலாந்தின் நிகர ரன் ரேட்டைக் கடக்க ஆப்கானிஸ்தான் 438 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்

Pakistan would need to beat England by 287 runs to move into the top four 😬

Afghanistan need to win by 438 runs to go past New Zealand's net run rate

06/11/2023

MUSTHAFA CHAMPIONS LEAGUE 2023



19_11_2023

05/11/2023

லடச்க்கணக்கான மக்களால் பல மணி நேரம் இஸ்தம்பித்து போன அமெரிக்கா வொஷிங்கடன் நகரம்

காஸா மக்களுக்கு ஆதரவு தெரிவித்து
இஸ்ரேலிய இனப்படுகொலைகளை கண்டித்து
அமெரிக்கா மக்கள் வொஷிங்டனில் செய்த
ஆர்ப்பாட்டத்தின் வீடியோ 59 செக்கனில்

Photos from Yatihena News's post 29/10/2023

அஸ்ஸலாமு அலைக்கும்

அல் முஸ்தபா மகா வித்தியாலய OBA, OGA அங்குரார்ப்பண நிகழ்வு.

எமது பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் பழைய மாணவிகளுக்கான விஷேட பொதுக்கூட்டங்கள் பாடசாலை அதிபர் MZM. சம்ரிஹான் அவர்கள் தலைமையில் நேற்று (28.10. 2023) சிறப்பாக நடைபெற்றன.

இக் கூட்டத்தில் பழைய மாணவிகள் சங்கம் [OGA] உத்தியோர்கபூர்கமாக ஆரம்பிக்கப்பட்டு அதற்கான பதவிதாங்குனர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

பழைய மாணவர்கள் சங்கத்தின் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு புதிய அங்கத்தவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

இவ் இரு கூட்டங்களிளும் ஏராளமான பழைய மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்குபெற்றி இருந்தார்கள்.

பாடசாலையின் முன்னேற்றத்துக்கு அர்ப்பணிப்படன் உழைக்க எமது புதிய பழைய மாணவ மாணவிகள் சங்கத்திற்க்கு வாழ்த்துக்கள்.

அதிபர்

Photos from Yatihena News's post 26/10/2023

எமது பாடசாலையில் எதிர் வரும் வாரம் மீண்டும் புத்துணர்வுடன் ஆரம்பிக்கப்படவுள்ள வாசிகசாலைக்கு பெறுமதியானபுத்தகங்களும் கதிரைகளும் சகோதரர் ரஷீத் அவர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் அவரது மாமியாரின் நினைவாக ஸதகதுல் ஜாரியா வாக கடந்த திங்கட் கிழமை 23/10/2023 அன்று அன்பளிப்புச் செய்யப்பட்டன.
அதே போல எமது பாடசாலை ஆசிரியர் அஷ்ஷேக் ஜவான் அவர்களும் தம் பெற்றோரின் பெயரில் ஸதகதுல் ஜாரியாவாக வாசிகசாலைக்கு பெறுமதியான நூல்களை அன்பளிப்புச் செய்தார்கள்.
இந் நற்கிரிகையை வல்லவன் அல்லாஹு த ஆலா ஏற்று அன்னவர்களுக்கு ஜன்னதுல் பிர்தெளஸை வழங்குவானாக.
ஆமீன்

19/10/2023

18/10/2023

"எமது இறந்த உடல்களைத் தவிர ஒரு போதும் நாம் காஸாவை விட்டு வெளியேற மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் செய்கிறோம்"

நேற்றைய தினம் வைத்தியசாலையில் 500க்கு மேற்பட்டோர் ஷஹீதாவதனை கண்ணால் பார்த்த

குடும்பத்தவர்கள் வைத்தியர்கள் ஊடகவியலாளர்கள் ஷஹீத்களை முன்னால் வைத்துக்கொண்டு கூட்டமாக இருந்து
நாம் ஒரு போதும் இங்கிருந்து வெளியேறமாட்டோம் என
அல்லாஹ் மீது சத்தியம் செய்யும்
நெகிழ வைக்கும் காட்சி

ஆச்சரியப்படுத்தும் ஈமானிய உள்ளங்கள்

Photos from Yatihena News's post 18/10/2023

பியகம கலாப்ப MAS ACTIVE PVT LTD நிறுவனத்தால் எமது அல் முஸ்தபா மகா வித்தியாயாலயத்திற்க்கு கழிவுகள் சேகறிக்க தொட்டிகள் வழங்கப்பட்ட போது.

18/10/2023

இந்த நூற்றாண்டின் பாரிய மனிதப் பேரவலம் மனிதப் படுகொலை

வைத்தியசாலை மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஷஹீதான
ஆயிரக்கணக்கான குழந்தைகள் தாய்மார்கள் வைத்தியர்களின் சடலங்களை
சூழ வைத்துக் கொண்டு உலக மக்களின் மனசாட்சியை நோக்கிப் பேசும்
வைத்தியசாலை தலைமை வைத்தியர்.

17/10/2023

காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் - 500 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல், காசாவில் உள்ள அஹ்லி அரபு வைத்தியசாலை மீது மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 500 பேர் வரை கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அல்-அஹ்லி வைத்தியசாலை மீது மேற்கொண்ட தாக்குதலின் புகைப்படங்களை வெளியிட்டு 500 பேர் கொல்லப்பட்டதாக குறித்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடைவிடாத தாக்குதல்களில் இருந்து மருத்துவ சிகிச்சையை பெற்று வருகின்றனர்.

தாக்குதலுக்குள்ளான வைத்தியசாலை குழந்தைகள் நிறைந்த வைத்தியசாலை என்பது குறிப்பிடத்தக்கது.

16/10/2023

இஸ்ரேலின் இந்த மிரட்டல்களுக்கு நாம் ஒரு போதும் பயப்படமாட்டோம்.

இந்த மிரட்டல்களுக்கு பயந்து நாம் எம் நிலத்தை விட்டு ஓடமாட்டோம்.

எமது மரணம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதொன்று
இறந்தால் நாம் இங்கேயே இருப்போம்

அல்லாஹ் எங்களுக்கு வெற்றியைத் தருவான்.

காஸாவை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலின் மிரட்டலுக்கு

தனது பேரப்பிள்ளைகளுடன்
இடிந்த வீட்டுக்குள் இருந்து கொடுக்கும் பதிலடி.

Yatihene News

15/10/2023

இம்மாம் மஹ்தி [அலை] அவர்களின் வருகையினை எதிர்பார்க்கும் சமூகத்தின் குரலாக...

ஸலாம் யா மஹ்தி ......
Salam Ya mahthi..


canada

14/10/2023

இந்த அறிகுறிகள் உள்ளதா ? - உடன் வைத்தியரை நாடுங்கள்

நாட்டில் தற்போது மிக வேகமாக பரவி வரும் கண் நோய் குறித்து கண் வைத்தியசாலை வைத்தியர் ஏ. ஆர். எம் தௌபீக் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வராமல் இருக்க கைகளை சோப்பு போட்டு கழுவுமாறும், கூடுமானவரை நெரிசலான இடங்களிலிருந்து விலகி இருக்கவும், நோயாளிகளைத் தொடுவதைத் தவிர்க்கவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நோயின் ஆரம்ப கட்டம் கண் அரிப்பு மற்றும் நோய்வாய்ப்பட்ட கண்ணின் சுரப்பை ஆரோக்கியமான கண்களில் படுவதாகல் நோய்வாய்ப்படும் சந்தர்ப்பம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

14/10/2023

நாளைய தினம் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுத உள்ள எமது சிறார்களை வாழ்த்துவதோடு
பரீட்சை இலகுவாக அமைந்து சிறந்த புள்ளிகளை பெற்ற எல்லாம்வல்ல நாயன் அல்லாஹ் விடத்தில் வேண்டுகின்றோம்..........

Photos from Yatihena News's post 13/10/2023

பலஸ்தீனுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று ஜும்மா தொழுகையின் பின் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
13.10.2023

எமது யடிஹேன செய்தி சேவையினை WhatsApp ஊடாக பெற்றுக்கொள்ள எமது Channel இல் இணையுங்கள்.

https://whatsapp.com/channel/0029VaCWrbL9xVJjvqeezf1h

Photos from Yatihena News's post 07/10/2023

எமது அல் முஸ்தபா பாடசாலையின் மென்பந்து கிரிக்கெட் அகடமி இன்று 07.10.2023 ஆரம்பிக்கப்பட்டது.

அதிபர் சம்ரிஹான் அவர்களின் விஷேட திட்டத்தின் கீழ் இவ் விளையாட்டு பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டது.

எமது மாணவர்களின் திறமையினை வெளிக்கொண்டுவரவும் தலைமைத்துவம் மற்றும் நற்பண்புகளை மாணவர்கள் மத்தியில் விதைக்க இவ் விளையாட்டுகள் துனைபுரிகின்றன.

எனவே மாணவர்களை விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளவர்களாக உருவாக்குவோம்.

Photos from Yatihena News's post 05/10/2023

05.10.2023 அன்று அல் முஸ்தபா மகா வித்தியாலயத்தில் மீலாத் தின விழா, ஆசிரியர் தின விழா மற்றும் சிறுவர்கள் தின விழா நிகழ்ச்சிகள் ஒரே நாளில் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

மாணவர்களுடைய கற்றலுக்கு இடையூறு இல்லாதவாறு மூன்று நிகழ்வுகளையும் ஒரே நாளில் கொண்டாட ப்பட்டது முன்மாதிரியான நிகழ்வாகும்.

இன்றைய சிறுவர்கள் தின நிகழ்வில் மாணவர்கள் அனைவருக்கும் காலை உணவு, யோகட் , சொக்லட்டு, மற்றும் ஒரே மாதிரியான பாடசாலை சின்னம் பதிக்கப்பட்ட சேவியட் என்பன வழங்கப்பட்டன.

மாணவர்களுக்கு பரிசாக ஆசிரியர்களால் பாடசாலை மேடைக்குத் தேவையான போடியம் ஒன்றை வழங்க இருக்கிறார்கள்.

ஆசிரியர்கள் தின நிகழ்ச்சியில்
ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.

மீலாத் தின நிகழ்ச்சிகளில்
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் அஷ்ஷைஃக் ரஷாத் அவர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டல் உரை ஒன்றை உரையாற்றினார்.

ஜவான் ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி மிக அழகான வினாவிடை போட்டி ஒன்று நடாத்தப்பட்டது.

அதேபோல் மாணவ மாணவிகள் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ் பாடக்கூடிய கஸீதாக்கள் மூலம் இன்றைய நிகழ்வை அலங்கரித்தனர்.

மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதிலும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஏற்படு செய்வதிலும் பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உதவியாளர்கள் இனணந்து தங்களது உடல், பணம், உழைப்பு என்பவற்றை தியாகம் செய்து இந்த நிகழ்வுகளுக்கு உழைத்தார்கள்.

பாடசாலையை அலங்கரிப்பதற்க்கும் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை பயிற்று விக்கவும் பங்களித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதிபர்

28/09/2023

Eid Miladun ❤️ 2023

Yatihena News

25/09/2023

இரு நிறங்களில் மாத்திரம் ஒளிரும்

கொழும்பு தாமரை கோபுரத்தில் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் திகதி இரு நிறங்களில் மாத்திரம் ஒளிரவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நபி முஹம்மது(ஸல்) அவர்கள் பிறந்தநாளான எதிர்வரும் 28ஆம் திகதியன்று தாம​ரை கோபுரம் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் ஒளிருமென தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Photos from Yatihena News's post 21/09/2023

2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு யடிஹேன அல் முஸ்தபா மகா வித்தியாலயத்தில் கடந்த 19.09.2023 செவ்வாய்க்கிழமை மிக விமர்சையாக நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக களனிய கல்வி வலய கல்விப் பணிப்பாளர் செல்வி நில்மினி பெரேரா அவர்கள் கலந்து கொண்டார்கள்.

கம்பஹா களனி வலயங்களுக்கான தமிழ் மொழி மூல கல்வி பணிப்பாளர் M. T. M தௌஸீர் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்கள்.

மற்றும் யடிஹேன வித்தியாலய அதிபர், அல் மஹ்மூத் மகா வித்தியாலயம் அதிபர், அல் முபாரக் ஆரம்ப பாடசாலை அதிபர் ஆகியோர்களும் எமது பாடசாலையின் நலன்புரி அமைப்பின் பிரமுகர்கள் பழையமாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கம் உருப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது என்று எல்லோராலும் சிலாகித்து கூறப்பட்டது.

எமது மாணவர்களின் தலைமைத்து பண்புகள் வளர்ந்து எமது பாடசாலை சிறப்பாக நடைபெற வாழ்த்து கின்றோம்.

20/09/2023

தசுன் ஷானக்க நீக்கம் – புதிய தலைவர் இன்று மாலை

இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக இருந்த சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவை எதிர்வரும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இருந்து நீக்க தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தசுன் ஷானக்க இன்று (20) காலை இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அங்கு அவர் தலைமைத்துவத்தை விட்டு விலக விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான புதிய தலைவர் இன்று பிற்பகல் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.

YATIHENA NEWS

Photos from Yatihena News's post 19/09/2023

அல் முஸ்தபா மகா வித்தியாலயத்திற்க்கு கொடி கம்பம் ஒன்றினை எமது பாடசாலை பழையமாணவர் குழு ஒன்று முன்வந்து அழகான முறையில் அமைத்துக் கொடுத்துள்ளனர்

இன்று 19.09.2023 பாடசாலை மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வின் போது இக் கொடிக் கம்பம் திறந்து வைக்கப்பட்டன.

இச் சேவையினை அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகம் ஊர்மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.

#யடிஹேன நியூஸ்

Photos from Yatihena News's post 19/09/2023

எமது அல் முஸ்தபா மகா வித்தியாலயத்திற்க்கு நீண்ட காலமாக தேவையாக இருந்த பாடசாலை பெயர் பலகை இன்றுடன் நிவர்த்தி செய்யப்பட்டன.

அல் முஸ்தபா பாடசாலை பழையமாணவரும் Mini World Lanka Pvt Ltd உரிமையாளருமான சகோதரர் M. R. M Ramzan அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இச் சேவையினை அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகம் ஊர்மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.

15/09/2023

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த அழகிய தருணம்

இனமத பேதம் இன்றி தாய் நாட்டின் வெற்றிக்கு பிரார்த்திப்போம்.

Cartoon by Rohana Agalakumbura

10/09/2023

தாயின் அன்பை பெற்றவனுக்கு தாயின் பிரார்த்தனைகள் என்றும் வெற்றியே¡¡

Photos from Yatihena News's post 07/09/2023

முபாரக்கின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்.

எமது பாடசாலையின் பிரதான நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க் கிழமை (06/09/2023) பாடசாலை அதிபர் ஜனாப் S.H.M. Naeem அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் (06/09/2023) கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் எமது பாடசாலைக்கு முதன் முதலாக ஜனாதிபதி ஒருவர் உத்தியோகபூர்வமாக விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் பிரதான அங்கமாக நூற்றாண்டையிட்டு நினைவு முத்திரை ஒன்று இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டதுடன் அதன் முதல் பிரதியினை கௌரவ ஜனாதிபதி அவர்கள் பெற்றுக் கொண்டார்.

அத்துடன் எமது பாடசாலையின் பழைய மாணவர் Al Haj Fazul Jiffry அவர்களின் பூரண நிதி அணுசரனையில் கட்டப்படவுள்ள மூன்று மாடி ஆசிரியர் விடுதிக்கான அடிக்கல் ஜனாதிபதி அவர்களால் நட்டப்பட்டது.

ஜனாதிபதி அவர்களின் வருகையை இட்டு நினைவு தூபி ஒன்று ஜனாதிபதியின் கையால் திறக்கப்பட்டதுடன், அதிபர் காரியாலயத்திற்கு சென்று பாடசாலை பதிவேட்டுப் புத்தகத்தில் அவர் தனது பதிவினை உத்தியோகபூர்வமாக பதிவிட்டார். இந்நிகழ்வு எமது பாடசாலையின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்படவேண்டிய ஒரு நிகழ்வாகும்.

நூற்றாண்டிற்கான நினைவு மலர் பாடசாலை அதிபரால் வெளியிடப்பட்டு அதன் முதல் பிரதி ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது.

எமது பாடசாலையின் பெயரை உச்சத்திற்கு கொண்டு சென்ற மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஜனாதிபதி அவர்களால் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

எமது பாடசாலையில் இருந்து உரையாற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க அவரது உரை அனைவரினதும் கவனத்தை ஈர்த்ததுடன்,
மள்வானை மக்களுடன் அவருக்கு உள்ள நெருங்கிய தொடர்பு பற்றிய உரை அனைவரினதும் வரவேற்பை பெற்றது.

அதன் நிமித்தம் எமது பாடசாலைக்கு முழுமையான கேட்போர் கூடம் (Auditorium) ஒன்றினை வழங்குவதற்கு ஜனாதிபதி அவர்கள் உறுதி அளித்தார்.

அத்துடன் எமது பாடசாலையின் நூற்றாண்டையிட்டு எதிர்வரும் வெள்ளிக் கிழமை (08/09/2023) பாடசாலை விடுமுறை தினமாக ஜனாதிபதி அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க குறித்த நிகழ்வு பற்றிய ஒருசில புகைப்படங்கள் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் (PMD) எமக்கு கிடைக்கப்பெற்ற ஒருசில புகைப்படங்களை இப்பதிவுடன் இணைக்கின்றோம்.

இந்நிகழ்வின் மேலதிக விடயங்கள் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அனுமதியுடன் எமது ஊடகப் பிரிவினூடாக வெளியிடப்படும்.

Media Unit
Centenary Organizing Committee
Al Mubarak Central College
(National School)
Malwana

06/09/2023

பியகமவை முன்னுதாரணமாக கொண்டு முழு நாட்டை முதலீட்டு வலயமாக மாற்றியமைப்போம் - ஜனாதிபதி

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்னுதாரணமாக கொண்டு நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அபிவிருத்தியடையாத பிரதேசமாக காணப்பட்ட பியகம பிரதேசம் வர்த்தக வலய ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் பாரிய அபிவிருத்தி கண்டுள்ளமையினால், இலங்கை முழுவதையும் முதலீட்டு வலயமாக மாற்றப்பட்டு பல்வேறு புதிய முதலீட்டு வாய்ப்புகள் உலகுக்கு திறக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வில் இன்று (06) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிங்கிரிய, ஹம்பாந்தோட்டை, கண்டி, திருகோணமலை மற்றும் வடமாகாணத்தில் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கான பல பகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு அந்த பகுதிகள் அனைத்தும் வர்த்தக நகரங்களாக கட்டமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு மாவட்டங்களினதும் அபிவிருத்திக்காக முதலீட்டு வாய்ப்புகளை கொண்டு வருவதற்கு மக்கள் பிரதிநிதிகளின் அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். அர்பணிப்புக்களை வலியுறுத்திய ஜனாதிபதி, கைத்தொழில் மயமாக்கல் எமது நாட்டுக்கு ஏற்றதல்ல என சிலர் கூறினாலும் இன்று பியகம முதலீட்டு வலயம் தெற்காசியாவின் சிறந்த வர்த்தக வலயமாக மாறியுள்ளதாகவும் பியகம, கட்டுநாயக்க போன்ற கைத்தொழில் மயமாக்கல் நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் முன்னெடுக்கப்பட்டால், இன்று நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்காது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.



புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அதேநேரம், எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மாணவர்களால் அன்பான வரவேற்பளிக்கப்பட்டது.

கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியிடப்பட்டதுடன் கல்லூரியின் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை அமைத்தற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.

மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதியொருவரின் முதல் வருகையைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி, கல்லூரியின் விருந்தினர் நினைவு பதிவேட்டில் பதிவிட்டார். அதனையடுத்து கல்லூரியில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

அதனையடுத்து கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமாரும் நிகழ்வில் உரையாற்றினார்.

இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர, காதர் மஸ்தான், மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.எச்.எம். நயீம் உள்ளிட்டவர்களும் மாணவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Thanks- த‌மிழ‌ன் செய்திகள்

Photos from Yatihena News's post 06/09/2023

AL MUSTHFA MAHA VIDYALAYA

KNOWLEDGE & SKILLS EXHIBITIONS

எமது மாணவர்களின் பல்துறை ஆற்றல் களை ஊக்குவிக்கும் அறிவு மற்றும் திறன் கண்காட்சியின் போது.

06.09.2023

Photographer - Rikas

05/09/2023

ASIA CUP 2023

SUPER 4 SCHEDULE

05/09/2023

BREAKING: Sri Lanka has qualified for the Asia Cup Super 4

05/09/2023

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது - ஆசாத் மௌலானா
05 September 2023 |

2019 ஆம் ஆண்டு தாக்குதல்களுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளர் ஆசாத் மௌலானா குற்றச்சாட்டியுள்ளார்.

குறித்த சந்திப்பு கிழக்கில் இடம்பெற்றதாகவும், அதில் தானும் கலந்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தொலைக்காட்சி நிலையத்தில் இன்று (05) ஒளிபரப்பப்பட்ட செனல் 4 டிஸ்பாட்ச்கள் ஆவணப்படத்தில் அவர் இந்த கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சாலே ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக மௌலானா குற்றச்சாட்டினார்.

தற்போது வெளிநாட்டில் புகலிடம் கோரியிருக்கும் ஆசாத் மௌலானா, ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற தூதரக அதிகாரிகளுடன் தகவலை பகிர்ந்துள்ளார்.

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத்தை (NTJ) சேர்ந்த ஒன்பது தற்கொலை குண்டுதாரிகள் 2019 ஏப்ரல் 21 அன்று மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் பல சொகுசு ஹோட்டல்களில் தொடர்ச்சியான குண்டுவெடிப்புகளை நடத்தினர்.

இதில் 270 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெறுவதற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தாக்குதலை முன்னெடுத்துச் செல்ல அனுமதித்ததாக மௌலானா குற்றச்சாட்டினார்.

எனவே ஆசாத் மௌலானா புகலிடம் பெறுவதற்காக இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்த நிலையில், சுரேஷ் சாலே குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

04/09/2023

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிரடியாக அதிகரிப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,

12.5 கிலோ 145 ரூபாவினால் அதிகரிப்பு புதிய விலை 3,127 ரூபா

5 கிலோ 58 ரூபாவினால் அதிகரிப்பு புதிய விலை 1,256 ரூபா

2.3 கிலோ 26 ரூபாவினால் அதிகரிப்பு புதிய விலை 587 ரூபா

Want your business to be the top-listed Media Company in Malwana?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

லடச்க்கணக்கான மக்களால் பல மணி நேரம் இஸ்தம்பித்து போன அமெரிக்கா வொஷிங்கடன் நகரம்காஸா மக்களுக்கு ஆதரவு தெரிவித்துஇஸ்ரேலிய ...
"எமது இறந்த உடல்களைத் தவிர ஒரு போதும் நாம் காஸாவை விட்டு வெளியேற மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் செய்கிற...
இந்த நூற்றாண்டின் பாரிய மனிதப் பேரவலம் மனிதப் படுகொலைவைத்தியசாலை மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஷஹீதானஆயிரக்கணக்கான குழந்தை...
இஸ்ரேலின் இந்த மிரட்டல்களுக்கு நாம் ஒரு போதும் பயப்படமாட்டோம்.இந்த மிரட்டல்களுக்கு பயந்து நாம் எம் நிலத்தை விட்டு ஓடமாட்...
இம்மாம் மஹ்தி [அலை] அவர்களின் வருகையினை எதிர்பார்க்கும் சமூகத்தின் குரலாக...ஸலாம் யா மஹ்தி ......Salam Ya mahthi..#FreeG...
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது - ஆசாத் மௌலானா05 September 2023 | 2019 ஆம் ஆண்டு தாக்கு...
*KIDDIES SHOPPING MALL 2023*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூமுதல் முறையாக *அல் மாஸ் பாலர் பாடசாலையில்* ஏ...
KIDDIES SHOPPING MALL 2023முதல் முறையாக  அல் மாஸ் பாலர் பாடசாலையில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறார்களின் சந்தை KIDDIES S...
யடிஹேன இளைஞர்களின் ஆக்ரோஷமான போரட்டத்தின் போது....#GoHomeGota22#iamyatihena
Gotabaya அரசு எதிராக மே 6 ஆம் திகதி யடிஹேன இளைஞர்கள் ஏற்பாட்டில் உருவான போராட்டம்....#iamyatihena#GoHomeGota22
#தேசத்திற்காக_ஒன்றினைவோம்#அழகான_எதிர்காலத்தை_உருவாக்குவோம்#GoHomeGota22#GoHomeGota#iamyatihena#srilanka#sinhalaandtamiln...
YATIHENA CHAMPIONS LEAGUE Seven Side Football Tournament 2021Organization YATIHENA YOUTH #iamyatihena

Telephone

Website

Address


Yatihena
Malwana

Other Malwana media companies (show all)
FunnY videos in galaxy FunnY videos in galaxy
Malwana

Ammoh ekah

Malwana News Malwana News
Malwana

மள்வானையின் முதற்தர செய்தி வழங்குனர்

Malwana TV Malwana TV
Malwana

THE TV WAS MADE IN MALWANA