Tamil Live

Photos from Tamil Live's post 01/06/2024

#ஆடு, #மாடு, #ஒட்டகம் #போன்றவற்றில் #பெண் #இனத்தை #குர்பானி #கொடுக்கலாமா?

முஸ்லீம்களிடத்திலும், முஸ்லீம் அல்லாதவர்களிடமும் கால்நடைகளில் (ஆடு , மாடு , ஒட்டகம் ) #பெண் இனத்தை அறுக்க கூடாது. என்ற சமூக நடை முறை பெருவாரியாக காணப்படுவதை நாம் அறிகிறோம் . சிலமாநிலங்களில் பெண் இன கால்நடைகளை அறுத்ததற்காக மனித மிருகங்களால் இரத்தங்கள் ஓட்டப்பட்டு அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதும், ஊர் விலக்கம் செய்வதும் அன்றாட நிகழ்வாக உள்ளது .

#அல்லாஹ் #அனுமதித்த #ஒன்றை #தடுப்பதற்கு #எவருக்கும் #அனுமதி #இல்லை.

நபியே! அம்மக்களிடம்) “கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன – செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது #பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள #பெண்களின் #கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்பீராக. 6:143

6:144. இன்னும், “ஒட்டகையில் (ஆண், பெண்) இரு வகை மாட்டிலும் ( #பசு, காளை) இரு வகையுண்டு - இவ்விரு வகைகளிலுள்ள ஆண்களையா அல்லது #பெட்டைகளையா அல்லது இவ்விரு வகையிலுள்ள #பெட்டைகளின் #கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கிறான். இவ்வாறு அல்லாஹ் கடடளையிட்ட(தாகக் கூறுகிறீர்களே, அச்)சமயம் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா?” என்றும் (நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ்
இத்தகைய அநியாயக் காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி
காட்டமாட்டான்.

1 மேற்காணும் வசனங்களின் மூலம் கால்நடைகளில் பெண் இனத்தை இறைச்சிக்காக அறுக்கலாம். என்பதை விளங்க முடிகிறது .

2. கால்நடைகளில் பெண் இனத்தை குர்பானி கொடுக்க கூடாது என்று கூறுபவர்கள் #மக்களை #வழி #கெடுப்பவர்கள், #அறிவில்லாதவர்கள் , #அல்லாஹ்வின் #மீது #பொய்யை #புனைந்துரைப்பவர்கள் , #மிகப்பெரிய #அநியாயக்காரர்கள் என்று குர் ஆன் கூறுகிறது.

3 #கர்ப்பிணியையும் #உழ்ஹிய்யா #கொடுக்கலாம்

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “கர்ப்பிணியாக உள்ள பிராணிகளைக் கொடுக்க முடியும், அதன் குட்டி இறந்த நிலையில் வெளியேறினால் அதை அறுக்க வேண்டியதில்லை என்பதே இமாம் ‘ஷாஃபிஈ(ரஹ்), அஹ்மத்பின் ஹம்பல் (ரஹ்) போன்றவர்களின் கருத்தாகும்’

அது உயிருடன் வெளியேறினால் அதையும் அறுக்கவேண்டும். மஜ்மூஉல்ஃபதாவா 6/178

#கவனிக்க #வேண்டிய #முக்கிய #விஷயம்

4 #பாலூட்டும் #பிராணியை #அறுக்க #கூடாது
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)
முஸ்லிம் : (3799

5. கால்நடைகளில் ஆடு , மாடு , ஒட்டகம் ஆகியவற்ற்றில் பெண் இனத்தை அறுப்பதின் மூலம் விலை ஏற்றத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

(அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன் )

https://www.youtube.com/c/YaserFirdousi/videos

30/05/2024

நரகத்தின் பல்வேறு வகையான தண்டனைகள்

30/05/2024

*அல் ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ் பிரிவு) நடத்தும்...*
_வாராந்திர பயான் நிகழ்ச்சி_
🗓️நாள் : *ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை*
⌚நேரம்: *8.45 pm*
🕌இடம்: *அல் ஜுபைல் தஃவா நிலைய பள்ளிவாசல்*
_https://maps.app.goo.gl/ZnK9ZUvrkzmGB8fV6_
சிறப்பு ஏற்பாடுகள்⬇️
*பெண்களுக்கு தனி இடவசதி*✅
*இரவு உணவு*✅
_தமிழறிந்த சகோதர,சகோதரிகள் குடும்பத்துடன் வருமாறு அன்புடன் அழைக்கிறோம்_💐💐💐
_நமது தஃவா நிலைய நிகழ்சிகள் தங்களை உடனுக்குடன் வந்தடைய நமது குழுமத்தில் இணைந்திருங்கள்_
👇🏻
⬇️ *ஆண்கள்*
https://chat.whatsapp.com/J4SxHOTXQkcF2cPOiGoCFK
⬇️ *பெண்கள்*
https://chat.whatsapp.com/BmIrG71liZ5DpH1UYAuFsc
*மேலதிக வீடியோக்களை பார்வையிட நமது யூடியூப் சேனலை*⬇️ _https://www.youtube.com/c/YaserFirdousi/videos_
*subscribe செய்து நம்மோடு இணைந்திருங்கள்*
_*📖யார் மரணத்திற்கு பிறகும் தன்னுடைய நற்கருமங்கள் துண்டிக்கப்படக் கூடாது என்று விரும்புகிறாரோ அவர் கல்வியை பரப்பட்டும்.*_
*பார்வையிடுங்கள்*📱
*பகிருங்கள்* 📲
*பயனடையுங்கள்* ♾️
*நம்மோடு இணைந்திருங்கள்*🫱🏼‍🫲🏾
*தங்களின் தொடர்பிலுள்ள அனைத்து குழுமங்களுக்கும் பகிருங்கள்*

27/05/2024

அஸ்ஸலாமு அலைக்கும்,

இஸ்லாமிய கல்வி நிலையம், மஸ்கட் மற்றும் அல் ஜூபைல் தஃவா நிலையம் இணைந்து வழங்கும் நேரலை வகுப்பு

மரணம் முதல் மறுமை வரை - தொடர் 65

தலைப்பு :- நரகத்தின் கொடூரம்

உரை:🎤 ஷேய்க். யாஸிர் ஃபிர்தவ்ஸி

இன்ஷா அல்லாஹ்
நாள்:- 27-05-2024, திங்கட்கிழமை

🇸🇦சவூதி நேரம் : 7.00 pm
🇧🇭பஹ்ரைன் நேரம் : 7.00 pm
🇰🇼 குவைத் நேரம் : 7.00 pm
🇴🇲ஓமான் நேரம் : 8.00 pm
🇦🇪அமீரகம் நேரம் : 8.00 pm
🇮🇳இந்தியா நேரம் : 9.30 pm
🇱🇰 இலங்கை நேரம் : 9.30 pm

Join Zoom Meeting link 👇🏽
https://us02web.zoom.us/j/8913256966

Meeting ID: 891 325 6966
Passcode :1

Facebook link👇🏽
https://www.facebook.com/IslamiyaKalviNilayam

எங்களுடைய தஃவா குரூப்பில் இணைய இதை கிளிக் செய்யவும்
https://chat.whatsapp.com/CF3DFAf60xR6WdpDwy9J9X

தொடர்புக்கு: + 968 7158 3871

பார்வையிடுங்கள் பகிருங்கள் பயனடையுங்கள் நம்மோடு இணைந்திருங்கள்

27/05/2024

#மரணித்தவர்களுக்காக #உழ்ஹிய்யா #கொடுக்கலாமா?

🐐🔪🐂
❓❓❓
🔖ஒரு மனிதன் தனக்காகவும், தன் குடும்பத்தார்கள் சார்பாகவும் உழ்ஹிய்யா கொடுக்கலாம்.
இதில் உயிரோடு இருப்பவர்களும் மரணித்தவர்களும் அடங்குவார்கள்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் சார்பாகவும், தங்கள் குடும்பத்தார்கள் சார்பாகவும் உழ்ஹிய்யா கொடுத்துள்ளார்கள்.
📚{ஆதாரம்: முஸ்லிம் 5203}

🔖ஆனால் இன்னார் சார்பாக என்று மரணித்தவர்களுக்கு குறிப்பாக்கி கொடுத்ததாக எந்த ஆதாரமும் இல்லை.

📌 #வஸிய்யத் #நிறைவேற்றப்பட #வேண்டும்
தன்னுடைய மரணத்திற்குப் பின் தனது செல்வத்திலிருந்து உழ்ஹிய்யா கொடுக்க வேண்டும் என்று ஒருவர் வஸிய்யத் செய்திருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும்.

வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
📖 {2:181}

மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் சொத்து பங்கீடு செய்ய வேண்டும்
📖{4:12}

🔖ஸதக்கத்துல் ஜாரியா என்ற அடிப்படையில், உயிரோடு இருப்பவர்கள், மரணித்தவர்களுக்காக உழ்ஹிய்யா கொடுக்கலாம் என்று ஹனஃபி மத்ஹபை சார்ந்த சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.

🔖என்றாலும் நபி(ஸல்) அவர்களின் சுன்னாவிலிருந்து இதற்கு நேரடியான எந்த ஆதாரமும் இல்லை.

🔖நபி(ஸல்) அவர்களின் நெருங்கிய உறவினரான, உஹதுப் போரில் ஷஹீதான ஹம்ஸா (ரழி) அவர்களுக்கோ, நபி (ஸல்) வாழ்நாளில் மரணித்து விட்ட, திருமணம் முடித்த மூன்று பெண்குழந்தைகளுக்கோ, சிறு வயதில் மரணித்து விட்ட மூன்று ஆண் குழந்தைகளுக்கோ, மனைவிமார்களில் தனக்கு மிகவும் விருப்பமான கதீஜா (ரழி) அவர்களுக்கோ உழ்ஹிய்யா கொடுத்ததாக எந்த ஆதாரமும் இல்லை.

🔖ஸஹாபாக்களின் காலத்திலும் எந்த ஒரு ஸஹாபியும் மரணித்து விட்ட ஸஹாபிக்காக உழ்ஹிய்யா கொடுக்க வில்லை.

👆🏻 #அல்லாஹ்வே #மிகவும் #அறிந்தவன்
✍🏽தொகுப்பு: யாஸிர் ஃபிர்தௌசி
அல்ஜுபைல் தஃவா நிலையம்,
சவூதி அரேபியா 🇸🇦.

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட நம்மோடு இணைந்திருங்கள்
https://www.youtube.com/c/YaserFirdousi/videos
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

26/05/2024

🔪🐐🐂🐫
#உழ்ஹிய்யா #கொடுப்பவர்களின் #கவனத்திற்கு...
🐐🐂🐫🔪

🔖 #நகம் #முடிகளை #களைவதின் #சட்டங்கள்🔖
✂💇🏻‍♂✂

👇🏽உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர், துல் கஃதா மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்த பிறகு அல்லது துல்ஹஜ் மாதம் முதல் பிறை தென்பட்டதிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை
🚫நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக்கூடாது.🚫

"நீங்கள் உழ்ஹிய்யா கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் உழ்ஹிய்யா கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
{அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)}
📚{நூல்: முஸ்லிம்- 5234}

✍10 நாட்களுக்கு இடையில் உழ்ஹிய்யா கொடுப்பதாக ஒருவர் நிய்யத் வைத்தால் அப்போதிலிருந்து கொடுக்கும் வரை நகம், முடி இவற்றை வெட்டக்கூடாது.🚫

✍இதற்கு முன் அவர் வெட்டி இருந்தால் அவர் மீது குற்றமில்லை அவரும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.

✍ஊரில் உழ்ஹிய்யா கொடுப்பவர் ஹஜ்ஜிலே பங்கெடுப்பவராக இருந்தால் இந்த பத்து நாட்களில் முடிகளையோ, நகங்களையோ வெட்டக்கூடாது என்ற சட்டத்திலிருந்து விதிவிலக்கு பெறுகிறார்.

✍காரணம் ஹஜ் அல்லது உம்ராவிற்காக இஹ்ராமில் பிரவேசிப்பவர் அதற்கு முன்பாக நகங்களையும் மறைவிடத்தில் உள்ள முடிகளையும் அகற்றுவது சுன்னத்தாக்கப்பட்டுள்ளது.

✍ஹஜ்ஜுத் தமத்துவை நிறைவேற்றும் ஒருவர் உம்ராவை நிறைவேற்றியவுடன் தலைமுடி முழுவதையும் முழுமையாக கத்தரித்தாலே இஹ்ராமிலிருந்து வெளியேற முடியும்.

✍தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம் என்ற இந்த சட்டம் உழ்ஹிய்யா கொடுக்கும் நபருக்கு மட்டும் உரித்தானது.

✍இச்சட்டம் அவருடைய குடும்பத்தார்களையோ, உறவினர்களையோ, ஒருவரின் உழ்ஹிய்யாவை கொடுப்பதற்கு பொறுப்பேற்றவரையோ உள்ளடக்காது.

✍உழ்ஹிய்யா கொடுக்கும் ஒருவர் தனது நகத்தையோ, முடியையோ எடுத்தால் அவர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடவேண்டும். மீண்டும் அவர் இவ்வாறு செய்யக் கூடாது. இதற்கு எந்தப் பரிகாரமும் இல்லை. அவர் தனது உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதில் தடையேதுமில்லை.

✍உழ்ஹிய்யா கொடுக்கும் ஒருவர் மறதியாலோ, நகங்களை, முடிகளை எடுக்க கூடாது என்ற சட்டத்தை தெரியாமலோ, அல்லது தானாக முடி கொட்டி விட்டாலோ அவர் மீது குற்றமில்லை. அவரும் தனது உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.

✍கையின் நகம் உடைந்து தொங்கிக் கொண்டு வலியை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அல்லது அறுவைசிகிட்ச்சை செய்வதற்காகவோ காயத்தை குணப்ப டுத்துவதற்காகவோ நகம், முடியை வெட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற நிர்பந்த நிலையில் நகத்தை முடியை வெட்டுவது அனுமதிக்கப்பட்டதே! இவரும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.

✍ #உழ்ஹிய்யாவோடு #தொடர்புடைய #நகம் #முடிகளை #களைதல் #குறித்த #ஹதீஸ்கள் #பலஹீனமானவை #என்ற #கருத்தும் #முஹத்திஸீன்கள் #மத்தியில் #உள்ளன.

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

✍🏽தொகுப்பு: யாஸிர் ஃபிர்தௌசி
அல்ஜுபைல் தஃவா நிலையம்,
சவூதி அரேபியா 🇸🇦.

Photos from Tamil Live's post 25/05/2024

صفة الحج بطريقة مبسطة وسهلة للمتمتع والقارن والمفرد
( باللغة التاميلية )
ஹஜ்ஜின் வகைகளும் செய்ய வேண்டிய முறைகளும் எளிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
(பார்வையிடுங்கள், பகிருங்கள் பயனடையுங்கள், நம்மோடு இணைந்திருங்கள் https://www.youtube.com//videos)

24/05/2024

ஹஜ்ஜில் ஏற்படும் சந்தேகங்கள்

24/05/2024

ஹஜ்ஜின் வகைகளும் செய்ய வேண்டிய முறைகளும்

24/05/2024
23/05/2024

📢📢📢📢📢📢📢📢📢📢📢

அல் - ஜுபைல் தஃவா நிலையம், தமிழ் பிரிவு சார்பாக...

🕋 ஹஜ் விளக்க வகுப்பு🕋

🗓️ நாள் : 24/ 05/2024 (வெள்ளிக்கிழமை)

🕌 இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலைய பள்ளிவாசல்
https://maps.app.goo.gl/ZnK9ZUvrkzmGB8fV6

⌚ நேரம் : மாலை 5 மணிமுதல்....

🎙️ சிறப்புரை :
s . யாஸிர் ஃபிர்தௌஸி (அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம்)
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
தலைப்பு : ஹஜ்ஜின் வகைகளும் செய்யவேண்டிய முறைகளும்

🎥 (வீடியோ காட்சியுடன் விளக்க வகுப்பு)

~~~~~~~~~

🎙️ அஷ்ஷெய்க் A. அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி, (அழைப்பாளர், அல்-ஜுபைல்)
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
தலைப்பு : ஹாஜிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள்

~~~~~~~~~

📌 பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

👥 அனைவரும் வருகை தருவதோடு பிறரையும் அழைத்து வாருங்கள்.

📲 மேலதிக விபரங்களுக்கு : 0503786956, 0555988967

23/05/2024

நரகவாசிகளின் உணவும் பானமும்

79-குர்பானி, பெருநாள் அன்று மட்டும் தான் கொடுக்க வேண்டுமா? | HASAN ALI UMARI 22/05/2024

*குர்பானி, பெருநாள் மற்றும் அதனை தொடர்ந்து வரக்கூடிய மூன்று நாட்களும் கொடுக்கலாம்.*
1 - நபி ஸல் அவர்கள் கூறினார்கள், அய்யாமுத் தஷ்ரீக் (துல்ஹஜ் 11, 12,13) அனைத்தும் அறுப்பதற்குரிய நாட்களாகும். (நூல்: அஹமத்)
2 - ஸஹாபாக்கள் இந்த நான்கு நாட்களும் குர்பானி கொடுப்பதற்குரிய நாட்களாகும் என்று கூறியுள்ளார்கள்.
3 - இஸ்லாமிய அறிஞர்கள், அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என கூறியுள்ளார்கள்.
4 - ஹஜ் பெருநாள் அன்று மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பது, ஸஹாபாக்கள் காலத்திலிருந்து, இன்று வரையிலும் முஸ்லிம் உம்மத்தில் இல்லாத ஒரு கருத்தாகும்.
5 - மார்க்க சட்டங்களை முறையாக ஆய்வு செய்யாமல், ஆய்வு என்ற பெயரில் ஏதேனும் ஒரு புதிய கருத்தை, இந்த உம்மத்தில் கூறுபவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம்.!
மேலும் தகவல்களுக்கு
https://youtu.be/IYmmtrxL7I8?si=rA4HaY-ZpDKulrW_
ஹசன் அலீ உமரி

நபி (ﷺ) கூறினார்கள் கடைசி காலகட்டத்தில் தஜ்ஜால்கள் , பொய்யர்கள் தோன்றுவார்கள் அவர்கள் உங்களிடத்தில் நீங்களும் உங்கள் முன்னோர்களும் கேள்விப்படாத பலவற்றை பேசுவார்கள். அவர்களையும் உங்களையும் நான் எச்சரிக்கிறேன். அவர்கள் உங்களை வழி கெடுத்துவிட வேண்டாம், உங்களை குழப்பத்தில் ஆழ்த்தி விட வேண்டாம்.
நூல் : முஸ்லிம்

79-குர்பானி, பெருநாள் அன்று மட்டும் தான் கொடுக்க வேண்டுமா? | HASAN ALI UMARI 1 - துல் ஹஜ் 11.12.13 அருப்பது தொடர்பான ஹதீஸ் ளயிஃப்பானதா? 2 - அல்குர்ஆன் 2:203 வசனத்தில் ஆதாரம்.3 ஸஹாபாக்களின் நிலைபாடு என்.....

20/05/2024

பித் அத்வாதிகளின் மரணமும் அஹ்லுஸ்சுன்னாவினரின் மகிழ்ச்சியும்
-------------------------------------------------------
1. இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் '(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்' என்றார்கள். மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'இறை நம்பிக்கை கொண்ட அடியார் (மரணிக்கும் போது ) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (மரணிக்கும் போது ) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன' என்றார்கள்.
அறிவிப்பாளர் :அபூ கத்தாதா இப்னு ரிப்ஈ அல்அன்சாரி(ரலி)
நூல் : புகாரி - 6147 , முஸ்லிம் - 950
2. ஹஜ்ஜாஜின் மரணம் குறித்து இப்ராஹீம் (ரஹிமஹுல்லாஹ் ) விற்கு நான் சுபச்செய்தி சொன்னேன் அவர் ஸு ஜூதில் விழுந்தார் .மகிழ்ச்சி மிகுதியினால் அவர் அழுவதை நான் பார்த்தேன்
அறிவிப்பாளர் : ஹம்மாத் பின் அபீ சுலைமான்
நூல்: இப்னு ஸஅத் தபகாதுல் குப்ரா 287/ 6 , இப்னு அஸாகிர் தாரீக் திமஷ்க் 197/ 12
3. இமாம் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் தனது அல் பிதாயா வந்நிஹாயா என்ற கிரந்தத்தில் குறிப்பிடுகிறார் (12 / 22 )உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு அல்ஹுஸைனி அபுல் காஸிம் அல் கஃப்பாப் இப்னு நகீப் என்று அறியப்பட்டவர் இவர் அஹ்லுஸ் சுன்னாவின் மிகப் பெரும் இமாம் இவருக்கு இப்னுல் முஅல்லிம் என்ற ஷீ ஆ மத இமாமின் மரண செய்தி வந்தடைந்தது இதனை செவியுற்ற இமாமவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதமாக ஸஜ்தா செய்தார்கள் .
4. அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் பொய்யனான முஸய்லமதுல் கத்தாபின் மரண செய்தி வந்தபோது நன்றிக்கான ஸுஜூத் செய்தார்கள்.
அலி இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்கள் போரில் கொல்லப்பட்ட ஃகவாரிஜ்களுக்கு மத்தியில் நபி (ஸல்) அவர்களால் முன் அறிவிப்பு செய்யப்பட்ட துஸ் ஸத்யா என்ற ஃகாரிஜியின் உடலை கண்ட போது நன்றிக்கான ஸுஜூது செய்தார்கள்.
முஸன்னிஃப் இப்னு அபீ ஷைபா 2/366
யாஸிர் ஃபிர்தௌஸி , ஜம்இய்யத்துத் தஃவா
அல் - ஜுபைல், சவூதி அரேபியா

16/05/2024

மரண முதல் மறுமை வரை
நரகத்தின் கொடூரம்

28/04/2024

📢📢📢📢📢📢📢📢📢

✨ *கோடைகால பயிற்சி வகுப்பு* ✨

🗓️ *நாள் : 01/ 05/ 2024 முதல்*
*15/ 05/ 2024 வரை*

⏳ *நேரம் : 2:00 மணி முதல் 5:00 மணி வரை*

🕌 *இடம் : ஜாமிவுஸ் ஸலஃபிய்யா, திருவிதாங்கோடு.*

📌 *5ஆம் வகுப்பு முதல் 12வது வகுப்பு வரை மாணவ மாணவிகள் அனைவருக்கும்...*

⏬ *முறைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பயிற்சிகள்* ⏬

📌 *20 சூராக்கள் பொருளுடன் மனனம் செய்தல்*

📌 *குர்ஆனின் உபதேசங்கள் (தேர்வு செய்யப்பட்ட 60 கேள்விகள்)*

📌 *அகீதா (கொள்கைவிளக்கம்)*

📌 *ஃபிக்ஹ் (தொழுகை)*

📌 *100 சிறிய நபிமொழிகளும் அதன் விரிவுரையும்*

📌 *அன்றாட வாழ்வில் அழகிய துஆக்கள்*

📌 *காலை மாலை ஓத வேண்டிய துஆக்கள்*

📌 *தொழுகைக்குப் பின் ஓத வேண்டிய துஆக்கள்*

📌 *ஓதிப் பார்ப்பதற்கான துஆக்கள்*

📌 *தூங்கும் முன் கடைபிடிக்க வேண்டிய சுன்னாக்கள்*

❗❗❗❗❗❗❗❗❗❗❗
*15 நாட்களும் விடுப்பு எடுக்காமல் வருகை தரும் மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.*

_தங்கள் பிள்ளைகளின்‌ கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக்க அன்போடு அழைக்கின்றோம்._

✍🏼 _ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்_
_திருவிதாங்கோடு கிளை, கன்னியாகுமரி மாவட்டம்._

📲 _மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்_

*கலீமுல்லாஹ் ஃபிர்தௌஸி - 9994774770,*

*தௌஃபீக் ஃபிர்தௌஸி 8300185138*

18/04/2024

*அல் ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ் பிரிவு) நடத்தும்...*

*வாராந்திர பயான் நிகழ்ச்சி*

🗓️ *நாள் : வியாழக்கிழமை தோறும்*

⌚ *நேரம்- 8:30 pm*

🕌 *இடம்: அல் ஜுபைல் தஃவா நிலைய பள்ளிவாசல்*
_https://maps.app.goo.gl/ZnK9ZUvrkzmGB8fV6_

சிறப்பு ஏற்பாடுகள்⬇️

*பெண்களுக்கு தனி இடவசதி*✅

*இரவு உணவு*✅

_தமிழறிந்த சகோதர,சகோதரிகள் குடும்பத்துடன் வருமாறு அன்புடன் அழைக்கிறோம்_💐💐💐

_நமது தஃவா நிலைய நிகழ்சிகள் தங்களை உடனுக்குடன் வந்தடைய நமது குழுமத்தில் இணைந்திருங்கள்_
👇🏻

⬇️ *ஆண்கள்*
https://chat.whatsapp.com/J4SxHOTXQkcF2cPOiGoCFK

⬇️ *பெண்கள்*
https://chat.whatsapp.com/BmIrG71liZ5DpH1UYAuFsc

*மேலதிக வீடியோக்களை பார்வையிட நமது சேனலை*⬇️ _

_https://www.facebook.com/jubail.tamil.live,_
_https://www.youtube.com/c/YaserFirdousi/videos , 0503786956_

_*subscribe* செய்து நம்மோடு இணைந்திருங்கள்_

📖 *யார் மரணத்திற்கு பிறகும் தன்னுடைய நற்கருமங்கள் துண்டிக்கப்படக் கூடாது என்று விரும்புகிறாரோ அவர் கல்வியை பரப்பட்டும்.*_

*பார்வையிடுங்கள்*📱
*பகிருங்கள்* 📲
*பயனடையுங்கள்* ♾️
*நம்மோடு இணைந்திருங்கள்*🫱🏼‍🫲🏾

தங்களின் தொடர்பிலுள்ள அனைத்து குழுமங்களுக்கும் பகிருங்கள்

_'அப்துல்லாஹ் (இப்னு மஸ்வூத்)(ரலி) ஒவ்வொரு *வியாழக்கிழமை* அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் 'அபூ அப்துர் ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்' என்றார். அதற்கு (உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைவிட்டும் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். அவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள்' என்றார்' என அபூ வாயில் அறிவித்தார்._

📚 _நூல் :புகாரி : 70_

12/04/2024

⏳ ரமழானுக்குப் பின் நாம் ⏳

📝 தொகுப்பு: S.யாஸிர் ஃபிர்தவ்ஸி ✍🏽

ரமழான் மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை, திக்ரு, தர்மம்... போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும்.
அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! ரமழானில் எந்த இறைவனோ அவன் தான் எல்லா மாதங்களுக்கும் இறைவன். அவனுக்கு கட்டுப்பட்டு வணக்க வழிபாடுகளை தொடர்வோம். அவனை சந்திக்கின்ற வரை இம்மார்க்கத்தில் உறுதியோடு இருக்க அவனிடம் பிரார்த்தனை செய்வோம். வணக்க வழிபாடுகளும், அவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் பெருநாளோடு முடிந்து விடாது.

அல்லாஹ் கூறுகிறான்:
👇🏽
உமக்கு மரணம் வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக!
{15:99} 📖

ஸலஃபுகளில் சிலர் கூறினார்கள்:👇🏽
ஒரு உண்மையான முஸ்லிமின் அமல்களை மரணம் தான் முடிவுக்கு கொண்டு வரும்.

உமர்(ரலி)அவர்கள் மிம்பரில் ஏறி மக்களுக்கு உரையாற்றும் போது👇🏽
நிச்சயமாக எவர்கள்; “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள் பால் மலக்குகள் வந்து, ”நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம், உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். {41:30} 📖
இவ்வசனத்தை ஓதிக்காட்டி விட்டு கூறினார்கள், அல்லாஹ்விற்க்கு கட்டுப்படுவதில் தொடர்ந்து உறுதியாக இருங்கள்.

எனவே ரமழான் மாதம் சென்று விட்டால் வணக்க வழிபாடுகளை விட்டும் ஓர் இறை நம்பிக்கையாளன் தொடர்பற்று போக மாட்டான்.

📝 உபரியான நோன்புகளின் சிறப்பும், அதன் நன்மைகளும்

"ஒருவர் ரமழானில் நோன்பு நோற்று, அடுத்து ஷவ்வாலின் ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு வைத்தால், ஆண்டு முழுவதும் நோன்பு வைத்தவர் போலாவார்” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ அய்யூப்(ரழி),
(நூல்: முஸ்லிம்) 📚

இந்நபி மொழிக்கு மார்க்க அறிஞர்கள் மூன்று விதமான விளக்கங்களை கொடுத்துள்ளனர்.

1⃣ பெருநாளை அடுத்து வருகின்ற தொடர்ச்சியான ஆறு நாட்கள்.
2⃣ ஷவ்வால் மாதத்தில் தொடர்ச்சியான ஏதாவது ஆறு நாட்கள்
3⃣. ஷவ்வால் மாதத்தில் ஏதாவது ஆறு நாட்கள்

இம்மூன்று கருத்தில் எதனடிப்படையிலும் நாம் அமல் செய்யலாம். (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமழானோடு ரமழான் நோன்பு நோற்று வருவதும் காலமெல்லாம் நோன்பிருப்பதாகும். அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா(ரழி) (நூல்:அஹ்மத், முஸ்லிம்) 📚

என் நண்பர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூன்று காரியங்களை எனக்கு உபதேசம் செய்தார்கள்👇🏽
1⃣. ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வைப்பது,
2⃣. லுஹா நேரத்தில் இரண்டு ரக்க அத் தொழுவது,
3⃣. நான் உறங்கும் முன் வித்ரு தொழுவது.

அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா(ரழி)
(நூல்: புகாரி, முஸ்லிம்)📚

‘மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு வைத்தால், 13,14,15 ஆம் நாட்களில் நோன்பு வைப்பீராக’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூதர் (ரழி),
(நூல்: திர்மிதீ, அஹ்மத், நஸாயி) 📚

அரஃபா நாளில் நோன்பு வைப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘சென்று போன மற்றும் வர உள்ள வருடங்களின் பாவங்களை அது அழிக்கும்’ என பதில் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி). (நூல்:முஸ்லிம்.) 📚

முஹர்ரம் மாதத்தில் 10 ஆம் நாளின் நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சொன்னார்கள்: *அது சென்ற ஆண்டின் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகிறது.
அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி)
(நூல்: முஸ்லிம்.) 📚

நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது: ரமழான் மாதத்திற்குப் பிறகு எது சிறந்த நோன்பு? அதற்கு நபியவர்கள் சொன்னார்கள், ரமழான் மாதத்திற்கு பிறகு சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பு.
அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா(ரழி)
(நூல்: முஸ்லிம்) 📚

திங்கள் கிழமையில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்குச் சொன்னார்கள், அது எத்தகைய நாளெனில் அன்று தான் நான் பிறந்தேன். அன்று தான் என் மீது வஹி எனும் இறையருட் செய்தி இறக்கப்பட்டது. அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி) (நூல்:முஸ்லிம்.) 📚

நபி (ஸல்)கூறினார்கள்: திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் (இறைவனின் முன்னால்) அமல்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் என்னுடைய அமல்கள் எடுத்துக் காட்டப்பட வேண்டுமென நான் விரும்புகின்றேன். அறிவிப்பாளர்:அபூ ஹூரைரா(ரழி), (நூல்:திர்மிதி) 📚

ஐவேளை தொழுகையை ஜமாஅத்தோடு பள்ளி வாசலில் நிறை வேற்றுவதோடு உபரியான தொழுகையிலும் கவனம் செலுத்த வேண்டும்.
ரமழான் மாதத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஜமாஅத் தொழுகையில் பங்கெடுத்தனர். ரமழானுக்குப்பின் பள்ளி வாசல்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்நிலை மாற வேண்டும்.

‘கூட்டுத் தொழுகை என்பது, தனித்து தொழுவதை விட தகுதியால் 27 மடங்கு சிறந்ததாகும்’. என நபி(ஸல்)கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரழி),
(நூல்: புகாரி,முஸ்லிம்) 📚

ரமழான் மாத இரவின் சிறப்புத் தொழுகை முடிந்து விட்டாலும் திண்ணமாக இரவுத் தொழுகை என்பது ஆண்டு முழுவதும் ஒவ்வொரு இரவிலும் கடை பிடிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘கடமையான தொழுகைக்குப் பிறகு சிறப்பு மிக்க தொழுகை இரவுத் தொழுகையாகும்’. அறிவிப்பாளர்:அபூ ஹூரைரா(ரழி)
(நூல்: முஸ்லிம்.) 📚

இரவுத் தொழுகையின் சிறப்பு குறித்து ஏராளமான குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும் வந்துள்ளன. விரிவஞ்சி நாம் இங்கே குறிப்பிடவில்லை.

‘கடமை அல்லாத உபரியான பனிரெண்டு ரக்க அத்களை ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வுக்காகத் தொழும் ஒரு முஸ்லிமான அடியானுக்கு, சொர்க்கத்தில் ஒரு வீட்டை அல்லாஹ் கட்டுகின்றான்.
அறிவிப்பாளர்:உம்மு ஹபீபா (ரழி),
(நூல்:முஸ்லிம்) 📚

(ஃபஜ்ருக்கு முன் 2, லுஹருக்கு முன் 4, பின் 2,
மஃரிபிற்கு பின் 2,
இஷா விற்கு பின் 2)

குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள குறைந்தது தினமும் ஒரு ஜூஸ்வு வீதம் குர்ஆன் முழுவதும் ஓதி முடிக்க முயற்சி செய்ய வேண்டும். குர்ஆன் ஓதுவதின் சிறப்பு குறித்து ஏராளமான குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் வந்துள்ளன.

சகோதரர்களே!
நன்மையான அனைத்து காரியங்களிலும் பேரார்வம் கொள்ளுங்கள், வழிபாடுகளை நிறை வேற்றுவதில் நன்முயற்ச்சி செய்யுங்கள், தவறுகளையும் தீமைகளையும் தவிர்த்து விடுங்கள். அப்படிச் செய்தால் இவ்வுலகில் தூய வாழ்வையும் மரணத்திற்குப் பிறகு அதிகமான கூலியையும் நீங்கள் வென்றெடுப்பீர்கள்!

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
{16:97} 📖

”எங்கள் இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த அமல்களை) எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”
{2:127} 📖

யா அல்லாஹ்! எங்களையும், எங்கள் பெற்றோர்களையும், அனைத்து முஸ்லீம்களின் பாவங்களையும் மன்னிப்பாயாக! (ஈமான்) நம்பிக்கையிலும் நற்செயல் புரிவதிலும் எங்களை உறுதியோடு இருக்கச் செய்வாயாக! தூய வாழ்வு கொண்டு எங்களை வாழச் செய்வாயாக! மேலும் உத்தமர்களின் குழுவில் எங்களைச் சேர்த்து வைப்பாயாக!

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட நம்மோடு இணைந்திருங்கள்

https://youtube.com/c/YaserFirdousi

10/04/2024

பெருநாள் தொழுகை
அல் ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் மையம்

09/04/2024

அனைவரும் வருகை தருவதோடு பிறரையும் அழைத்து வாருங்கள்

09/04/2024

அனைவரும் வருகை தருவதோடு
பிறரையும் அழைத்து வாருங்கள்

27°00'56.2"N 49°40'16.1"E · Jubail City Center, Al Jubail 35515, Saudi Arabia 09/04/2024

🌙 *நோன்பு பெருநாள் தொழுகை* 🌙

🗾 *இடம்: போர்ட் கேம்ப் மைதானம்* *(அல்- ஜுபைல், (சவூதி அரேபியா)*

Location👇🏼
https://goo.gl/maps/xB1YiKXDf2d4ZMDKA

🗓️ *நாள் : 10/04/2024 (புதன்கிழமை)*

🎙️ *சிறப்புரை : உஸ்தாத் M.பஷீர் ஃபிர்தௌஸி*

_இன்ஷா அல்லாஹ்_

⏰ *தொழுகை நேரம்: காலை 5:40 மணிக்கு (சரியாக)*

🧑‍🧑‍🧒‍🧒 *அனைத்து பெண்களுக்கும் தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது*

📜 *தொழுகை விரிப்பு கண்டிப்பாக (முஸல்லா) எடுத்து வர வேண்டும்.*

🚷 *தொழுகை முடிந்ததும் உடனடியாக கலைந்து விட வேண்டும்.*

🚳 *போர்ட் கேம்பினுள் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை.*

❗ *தாமதிக்காமல் சரியான நேரத்தில் வருகை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*

📲 *தங்களின் தொடர்பிலுள்ள அனைத்து குழுமங்களுக்கும் பகிரவும்*

*تقبل الله منا ومنكم صالح الأعمال*🤲🏼

*அல்லாஹ் உங்களிடமிருந்தும் நம்மிடமிருந்தும் நல் அமல்களை ஏற்றுக் கொள்வானாக!*🤲🏼

*அல்- ஜுபைல் தஃவா நிலையம்-தமிழ் பிரிவு,*
*சவூதி அரேபியா*

📲 *மேலதிக விபரங்களுக்கு 0503786956 , 0555988967*
👍🏽

27°00'56.2"N 49°40'16.1"E · Jubail City Center, Al Jubail 35515, Saudi Arabia Jubail City Center, Al Jubail 35515, Saudi Arabia

08/04/2024

பெருநாளில் மு அத்தினோ அல்லது இமாமோ மைக்கில் சப்தமாக தக்பீர் சொல்ல அதனை தொடர்ந்து பொது மக்களும் கூட்டாக சப்தமாக தக்பீர் சொல்லும் வழி முறையை பல இடங்களில் காணமுடிகின்றது . அதை போன்று துல் ஹஜ் பிறை 11, 12, 13, ஆகிய தினங்களில் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் கூட்டாக சப்தமாக தக்பீர் சொல்வதை காண முடிகின்றது இதுவும் மார்க்கம் அனுமதிக்காத காரியமாகும் . இது குறித்து ஷேக் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ் ), ஷேக் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ் ), ஷேக் நாஸிருத்தீன் அல்பானி (ரஹிமஹுல்லாஹ் ) மேலும் சவூதி அரேபியாவின் லஜனத்து தாயிமாவின் மார்க்க தீர்ப்பை இப்புத்தகத்தில் காணமுடிகிறது .http://www.sheikfawzi.net/ar/book/check/fatawa-takbir.pdf எனவே அனைத்து முஸ்லீம்களும் இந்த பித் அத்தை தவிர்க்கு மாறு அன்போடு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்

www.sheikfawzi.net

06/04/2024

🌹 *அஸ்ஸலாமு அலைக்கும்* 🌹

_இன்ஷா அல்லாஹ்..._

🕋 _*பெருநாள் விடுமுறையில் உம்ரா பயணம் ...*_

🕋 *‌‍‌மக்கா மதீனா*

_*பயண நாட்கள்-4*_
_*புதன் ~~ சனிக்கிழமை*_

🗓️ *புறப்படும் நாள்: 10 -04 -2024, புதன் கிழமை*

⌚ *புறப்படும் நேரம்: மதியம் 3 மணியளவில்*

🚍 *புறப்படும் இடம் 😘
*nesto விற்கு பின்புறம் வாகனம் புறப்படும் https://goo.gl/maps/eKg669bdVJLFo87U6 (Free parking available)*

🚍 *திரும்புதல் : மக்காவிலிருந்து மதீனா வெள்ளிக்கிழமை (12/04/2024) ஜும் ஆ தொழுகை முடிந்தவுடன்*

*இன்ஷா அல்லாஹ்*
*(14/04/2024) ஞாயிற்றுக்கிழமை காலை ஜுபைல் வந்தடைதல்*

📌 _சிறப்பம்சங்கள்_ 👇🏼
1️⃣ _*குர்ஆன், சுன்னா அடிப்படையில் தெளிவான வழிகாட்டுதல்*_

2️⃣ _*வினாடி வினா நிகழ்ச்சி, பரிசுகள்...*_

3️⃣ *_மக்கா , மதீனாவில் உணவு, தங்குமிட வசதிகள்_*

4️⃣ _*இஸ்லாமிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்*_

_இப்பயணத்தில் உறுதியாக பங்குபெற விரும்புபவர்கள் மட்டும், நமது குழுமத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்..._

❗ *குழுமத்தில் பதிவு செய்யவேண்டிய தகவல்கள்* 👇🏼
🔖 _முழுமையான பெயர் (இகாமாவில் இருப்பது போன்று)_
🔖 _இக்காமா எண்_
🔖 _தொடர்பு எண்_
🔖 _வயது_
🔖 _நாடு _

🔖 _நுஸுக் ஆப்பில் *11*ஆம் தேதி வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு மேல்* கட்டாயம் பெர்மிட் எடுக்கவும்_
❗இறுதி நேர பரபரப்பை தவிர்த்திடுங்கள்❗
📲 _மேலும் உங்கள் தொடர்பில் உள்ளவர்களுக்கும் அனுப்பி அவர்களையும் பங்கெடுக்கச் செய்யுங்கள்..._
*மேலதிக விபரங்களுக்கு* 👇🏼
📱 *0503786956*,

05/04/2024

மகிழ்ச்சிகரமான வாழ்விற்கு மார்க்கத்தின் வழிகாட்டல்கள்

05/04/2024

கேள்வி பதில் நிகழ்ச்சி
உஸ்தாத் பஷீர் ஃபிர்தௌஸி
போர்ட் கேம்ப் பள்ளி வாசல்

Want your public figure to be the top-listed Public Figure in Jubail?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

நரகத்தின் பல்வேறு வகையான தண்டனைகள்
ஹஜ்ஜில் ஏற்படும் சந்தேகங்கள்
ஹஜ்ஜின் வகைகளும் செய்ய வேண்டிய முறைகளும்
நரகவாசிகளின் உணவும் பானமும்
மரண முதல் மறுமை வரை நரகத்தின் கொடூரம்
பெருநாள் தொழுகை அல் ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் மையம்
மகிழ்ச்சிகரமான வாழ்விற்கு மார்க்கத்தின் வழிகாட்டல்கள்
கேள்வி பதில் நிகழ்ச்சி உஸ்தாத் பஷீர் ஃபிர்தௌஸி போர்ட் கேம்ப் பள்ளி வாசல்

Telephone

Address


Jubail
7779-35514

Other Motivational Speakers in Jubail (show all)
Anith Kumar Anith Kumar
Jubail, 31961

Our greatest weakness lies in giving up. The most certain way to succeed is always to try just one more time So, if you feel low, don't hesitate and be ready to raise your wings ...

Its Razeb Its Razeb
Jubail

Personal vloger & Motivational Facebook: https://www.Facebook.com/Itsrazeb2

Peace of Islam Peace of Islam
Jubail, 24211

islam motivation�

Quota For You Quota For You
Saudia Arabia
Jubail, 351514

ONE LOYAL GIRL IS BETTER THAN MILLION BITCHS

66 Days of Gratitude 66 Days of Gratitude
Askan Camp Makkah
Jubail, 24236

66 Days of Gratitude A masterpiece Book written by Sarfraz Rasul Sahi. How to get happiness in an uncertain life while struggling as freelancer, doctor, business person, celebrity...

Wajahat Chaudhry Abu Sulaiman Wajahat Chaudhry Abu Sulaiman
Jubail

A Pakistani origin, authorized Khateeb from Jaaliyat, Saudi Arabia, studied in Saudi Arabia & Pakistan. By profession a finance personnel. Leading and supervising various Islamic ...

Quran and Tafseer Quran and Tafseer
Makkah
Jubail

Quran

ZIBAN KA SHIKH ZIBAN KA SHIKH
Jubail, 35713

hello friends

كلّمهُ بِما يُحبه كلّمهُ بِما يُحبه
Jubail

اللي بيحب حد♥بيدورعلى أحلى كلام يكلم بيه حبيبه♥ بيعيش

Abdul samad Abdul samad
Jabal Street
Jubail

motivational video’s…

abbasi info abbasi info
Al Jubail
Jubail, 35412

my name is Nayyar Abbasi. I am from Pakistan. I am working in Saudi Arabia.

life with javed life with javed
Jubail, 32243

MY NAME IS JAVED THE WORLD MOTIVATION IS ALL ABOUT TANSLATING ANY QUOTES INTO URDU DON'T FORGET TO