தேற்றாத்தீவு ஸ்ரீ பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை

தேற்றாத்தீவு ஸ்ரீ பள்ளியங்கட்டு கண்? மட்டக்களப்பு தேற்றாத்தீவு ஸ்ரீ பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை

16/01/2024

தேற்றாத்தீவு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் நிகழ்வும் பூஜையும் நடைபெற்றது. கொம்புச்சந்திப்பிள்ளையாருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று ஆலய முன்றலில் பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன. அதனை தொடர்ந்து ஆலயத்தில் கொம்புச்சந்திப்பிள்ளையாருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.

25/09/2023

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எமது ஆலயத்தில் இடம்பெற்ற கலை நிகழ்வுகள்

25/09/2023

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எமது ஆலயத்தில் இடம்பெற்ற நிருத்தம்

25/09/2023

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எமது ஆலயத்தில் இடம்பெற்ற பன்னிருராசிக்கும் உரிய கணேசர் அபிஷேகம்

25/09/2023

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எமது ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது இந்து சமுத்திரத்தில் இடம்பெற்றது

25/09/2023

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எமது ஆலயத்தில் இடம்பெற்ற வசந்த மண்டப பூஜை உள் வீதி திருவிழா

25/09/2023

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எமது ஆலயத்தில் இடம்பெற்ற மகா கணபதி ஹோமம்

26/08/2023

தேற்றாத்தீவு ஸ்ரீ ஆதி வீரபத்திரர் ஆலய வருடாந்த திருச்சடங்கு

24/07/2023

தாந்தாமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் குருக்கள்மடம் செட்டிபாளையம் மாங்காடு தேற்றாத்தீவு களுதாவளை களுவாஞ்சிகுடி மக்களின் உபய திருவிழா

05/07/2023
04/07/2023

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவின் நடுத்தெரு தோரண ஊர்வலத்தின் நடனம்

04/07/2023

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவின் நடுத்தெரு தோரண ஊர்வலம்

Photos from தேற்றாத்தீவு ஸ்ரீ பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை's post 03/07/2023

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவின் நடுத்தெரு தோரண ஊர்வலம்

03/07/2023

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவின் ஆறாம் தெரு தோரண ஊர்வலம்

Photos from தேற்றாத்தீவு ஸ்ரீ பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை's post 02/07/2023

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவின் ஆறாம் தெரு தோரண ஊர்வலம்

02/07/2023

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவின் கல்யாண சடங்கிற்கு ஸ்ரீ ஆண்டாள் பிருந்தாவன கிருஷ்ணர் ஆலயத்தில் இருந்து கல்யாண சீர்வரிசை கொண்டுவருதல்

02/07/2023

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவின் ஐந்தாம் தெரு தோரண ஊர்வலம்

02/07/2023

மட்டக்களப்பு தேற்றாத்தீவு பள்ளியங் கட்டு கண்ணகி அம்மன் ஆலயமும் கண்ணகி விழாவும்

சிவபூமியாம் கடல்சூழ் இலங்கையின் ஆதவனின் வரவு காணும் கிழக்கு மாகாணத்தில் மீன் பாடும் தேனாடு என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு நகரின் தென்பால் பதின்மூன்று மைல் தொலைவில் கிழக்கே இந்து சமுத்திரமும் மேற்கே மீன்பாடும் வாவியும் வடக்கு தெற்குத் திசைகளில் கடல் நோக்கி ஓடும் நீரோடைகளாகிய தோணாக்களும் வயல் நிலம், மேட்டுநிலமென நீர் வளமும் நிலவளமும் அமைய பெற்று 'தேற்றா' என்றழைக்கப்படும் தீன் சுவைக் கனிகள் தரும் வாழைகளும், மற்றும் குளிர்தரு மரங்களாகிய 'தேற்றா' என்னும் மரங்களும் நிறைய பெற்றதுவும் தஞ்மென வந்தோரைத் தேற்றி ஆற்றி ஈவு இரக்கங் காட்டி ஆதரிக்கும் மக்கள் செறிந்து வாழும் (தேற்று+ஆற்று+ஈவு = தேற்றாற்றீவு/தேற்றாத்தீவு) பெருவளவூராகிய தேனூர் எனும் தேற்றாத்தீவு கிராமத்தின் மத்தியிலே மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஓரமாக கோயில் கொண்டு பூலோக தெய்வம் கற்பின் அரசி கண்ணகி அம்மன் அருளாட்சி புரியும் திருத்தலமே மட்டக்களப்பு தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலயமாகும்
இவ்வாலயம் தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலயம் எனப் பெயர் பெறுவதற்கு காரணம் இவ் ஆலயத்தின் அமைவிடமே ஆகும். தேற்றாத்தீவுக் கிராமத்தில் மிக உயரமான நிலப்பகுதி இதுவே ஆகும். 'பள்ளியங்கட்டு ' என்று சொல்லக்கூடிய அம்மன் அணையாகத் இத்தலப்பகுதி ஆரம்ப காலத்தில் காணப்பட்டதே இதற்கு காரணமாகும். இதனை விட 'வேலைக்காரங்கட்டு' 'சோதையன்கட்டு' போன்ற உயரமான மண் அணைக்கட்டு நிலப்பகுதிகளும் இன்றும் தேற்றாத்தீவில் உள்ளன. வெள்ளப்பெருக்கு காலங்களிலும் நீர் தேங்காத பள்ளியங்கட்டிலே வீற்றிருக்கும் கண்ணகி அம்மன் ஆலயம் ஓர் புராதன தனிக்கோயிலாகும். ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரையும் கிராமத்தின் மத்தியிலே கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்திருக்கும் இவ்வாலயம் இந்து கலாசாரத் திணைக்களத்தினால் இந்து ஆலயங்கள் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட போது ஆரம்பத்திலேயே பதிவு செய்யப்பட்ட புராதன தனிக்கோயிலாக விளங்குகிறது.
முதன் முறையாக கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் கி.பி 178 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இமயத்தில் இருந்து கல் எடுத்து சிலை வடித்து தனது வஞ்சி மாநகரிலே கோவில் அமைத்து விழாக் கொண்டாடியதாகவும் இவ்விழாவிற்கு கடல் சூழ் இலங்கைக் கஜபாகு மன்னும் சென்றிருந்ததாகவும் சிலப்பதிகாரக் காப்பியத்தின் ஊடாக அறிகின்றோம். செங்குட்டுவனின் நண்பனான அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த கஜபாகு மன்னன் தனது இலங்கையிலும் கண்ணகி விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக அங்கிருந்து சந்தனக் கட்டையிலாலான கண்ணகி சிலையையும் காற்சிலம்பையும் ஒரு சந்தன பேழையில் வைத்து எடுத்து வந்து இலங்கையில் உள்ள முல்லைத்தீவு, மட்டக்களப்பு, கண்டி, கதிர்காமம் போன்ற இடங்களில் கண்ணகி வழிபாட்டையும் விழாவையும் தொடங்கி வைத்ததாகவும் அறிகின்றோம் அன்று கஜபாகு மன்னனால் கண்ணகைக்கு பிரகார ஊர்வலமாக எடுக்கப்பட்ட விழாவே இன்று பெரகரா என்று கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் ஆரம்ப காலத்தில் தோற்றம் பெற்ற கண்ணகி அம்மன் ஆலயங்களில் ஒன்றாக மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயம் விளங்குகிறது. இவ் ஆலயத்தை ஆரம்ப காலத்தில் திருப்பழுகாம், அம்பிளாந்துறை, கிரான்குளம், குருக்கள்மடம், செட்டிபாளையம்,மாங்காடு, தேற்றாத்தீவு, களுதாவளை ஆகிய கிராம மக்கள் நிர்வகித்ததோடு சடங்கினையும் செய்து வந்தனர். செட்டிபாளையம் கண்ணகி அம்மனின் கிளை ஆலயங்கள் போன்று தத்தமது கிராமங்களிலும் கண்ணகிக்கு ஆலயம் அமைத்து வழிபாடியற்றினர். உதாரணமாக களுதாவளை கொம்புச்சந்தி எனும் இடத்திலும், தேற்றாத்தீவு பள்ளியங்காட்டிலும் அமைந்த ஆலயங்களை குறிப்பிடலாம். காலவோட்டத்தில் தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலயத்தைத் தவிர்ந்த ஏனைய களுதாவளை கண்ணகி அம்மன், செட்டிபாளைய பிள்ளையார் ஆலயத்தின் பக்கத்தில் அமைந்திருந்த கண்ணகி அம்மன் போன்ற அனைத்து கண்ணகி ஆலயங்களும் மாரி அம்மனாக மாற்றம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறலாயின.
செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் தேற்றாத்தீவைச் சேர்ந்த கட்டாடிமாரே பூசைகளை நிகழ்த்தி வந்ததனாலும் தேற்றாத்தீவுக் கிராம மக்கள் ஒன்று கூடி திருக்கல்யாண சடங்கினை செட்டிபாளையம் கண்ணகி அம்மனுக்கு செய்து வந்ததோடு மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததன் காரணமாகவும் 'வைகாசி திங்களில் வருவேனென்று வரிசைக்கியைந்து விடை கொடுத்தாரே' என்ற திருக்குளிர்த்தில் பாடலடிக்கு ஏற்ப கட்டாடியாரும் மக்களும் செட்டிபாளையம் கண்ணகிக்கு வைகாசிப் பூரணையை அண்டிய திங்கள் கிழமையை இறுதி நாளாகக் கொண்டு சடங்கினை நடத்தி விட்டு அடுத்த மாதம் ஆகிய ஆனி மாதத்தில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கிராமத்தை ஏழு தெருவாகப் பிரித்து தேற்றாத்தீவுப் பள்ளியங்கட்டில் கண்ணகிக்கு பெரு விழாக் கொண்டாடினர். காலப்போக்கில் ஆனி மாதப் பூரணையை அண்டிய திங்கட்கிழமையை இறுதி நாளாகக் கொண்டு ஏழு விழாவினை ஏழு தெருமக்களும் நடாத்தி வருகின்றனர். சேரனும் கஜபாகுவும் வைகாசியில் கண்ணகிக்கு விழாக் கொண்டாடவில்லை என்ற காரணத்தினாலும், விழா கொண்டாடுவதற்கு திதி நட்சத்திரங்கள் அவசியமில்லை என்பதாலும் கட்டாடியாரும் மக்களும் செட்டிபாளையம் கண்ணகிக்கு வைகாசியில் சடங்கு நடாத்தியதினாலும் ஆனி மாதத்திலே பெருவிழா தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகிக்கு நடைபெறலாயிற்று.
செட்டிபாளையம் கண்ணகிக்கு வைகாசித் திங்களில் 'வெப்புத்தணி வேகம் தணி' என்று கட்டாடியார் அம்மனை வேண்டி மண்றாட்;டமாக சடங்கினை செய்து அருள் பெற்று அதன் பயனாக தமது சொந்த ஊராயாகிய தேற்றாத்தீவிலே அருள் தந்த கண்ணகிக்கு ஆனி மாதத்தில் நன்றிப் பெருவிழாவினை தானும் கிராம மக்களும் ஒன்றுகூடி நடத்தினர். இவ்வாலயத்தில் கண்ணகி வழக்குரை படிப்பதோ, திருக்குளிர்த்தில் பாடல் பாடுவதோ, திருக்குளிர்த்தில் ஆடுவதோ கிடையாது. மாறாக அருள் தந்த கண்ணகிக்கு நன்றிப் பெருவிழாவே நடைபெறுகிறது. கட்டாடியார் கண்ணகியின் அருளை நினைந்த்து கசிந்துருகிக் காவியம் பாடுவதும், வாழ்த்து பாடுவதும் விழா முடிவில் திருக்குளிர்த்திலுக்குப் பதிலாக வாழிப்பாடி முடிப்பதும் பன்னெடுங்காலம் முதல் இன்று வரையும் நடைபெற்று வருகிறது.
சேரன் செங்குட்டுவன் நடாத்திய விழாவைப் போன்றதாகவும் இலங்கையில் கஜபாகு மன்னன் எடுத்த விழாவை ஒத்ததாகவும் இங்கு விழா இடம் பெறுவதைக் காணலாம். கஜபாகு மன்னன் பல்வேறுபட்ட ஆடல்,பாடல் வாத்திய இசை போன்ற கலைநிகழ்ச்சிகளோடு கண்ணகியின் சிலையை சுற்றுப் பிரகாரமாக எடுத்து வந்து (பெரஹரா) கொண்டாடிய விழா மரபை இன்றும் சிங்கள மக்கள் போற்றிக் கொண்டாடுகின்றனர். இம் மரபை ஒட்டியதாகவே தேற்றாத்தீவு பள்ளியங் கட்டு கண்ணகி அம்மன் விழாவிலும் கண்ணகியின் திருவுருவப் படத்தினைத் தாங்கிய தோரணம் அமைக்கப்பட்டுவதும் அத்தோரணத்தில் 'அம்மன் விழா' எனவும் எத்தனையாம் தெரு எனவும் எழுதப்படடுட அலங்காரம் செய்யப்பட்டு ஏழு நாட்கள் ஊர்வலம் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. ஊர்வலத்தின் போது காவடி, கும்மி, கோலாட்டம் போன்ற நடனங்கள் ஆடப்பட்டும் வந்ததோடு இன்றும் சிறுவர்கள் முதல் முதியவர்கள் ஈறாகப் பக்தி பரவசத்தோடும் குதுகலத்தோடும் ஆடி வருவதையும் காணலாம்.
கண்ணகி வழிபாட்டம்சங்களில்; காவியம், அகவல் போன்ற இலக்கிய வகைகள் முதன்மை பெறுவது போன்று கொம்புமுறி விளையாட்டு, வசந்த்ன் கூத்து என்பனவும் முக்கியம் பெறுகின்றன. குறிப்பாக கொம்புமுறி என்பது கோவலனும் கண்ணகியும் கொழுக்கொம்பு கொண்டு பூப்பறிக்கும் போது இரண்டு கொம்புகளும் கொழுவிக் கொண்டதாகவும் இதனை விடுவிக்க முடியாது போனதால் கோவலன் பக்கம் சில ஆண்களும் (வடசேரி) கண்ணகி பக்கம் சில பெண்களும் (தென்சேரி) நின்று கொம்புகளை இழுத்த போது கோவலனின் கொம்பு உடைந்து கண்ணகியின் பக்கம் வெற்றியடைந்ததாகவும் இதனை ஒட்டியே கண்ணகி விழாவில் கொம்புமுறி விளையாட்டும் செய்யப்பட்டு வருவதை அறிகின்றோம். அந்த வகையில் முன்னைய காலத்தில் தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகிக்கு ஆண்டுதோறும் கொம்புமுறி விளையாட்டு நடாத்தப்பட்டு வந்ததையும் பிற்பட்ட காலத்தில் கைவிடப்பட்டதையும் கிராம முதுசங்;கள் வாயிலாக அறின்றோம். இவ் விழா இங்கு நடைபெற்றதற்குச் சான்றாக 1978ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளிக்கு முந்திய காலப்பகுதியில் கொம்புமுறி விளையாட்டுக்காக நாட்டப்பட்ட மரம் இவ்வாலயத்துக்கு அருகாமையில் இருந்ததை சமகாலத்தில் வாழும் பலரும் அறிந்துள்ளனர். நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் இவ் ஊரில் 2018ஆம் ஆண்டு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலயத்தின் தொட்டத்து வீதியில் மீண்டும் பிரம்மாண்ட விழாவாக நடாத்தப்பட்டமை ஈண்டு குறிப்பிடத்தக்கது. இதேபோன்று வசந்தன் கூத்தும் கண்ணகி அம்மன் ஆலய வீதியில் விழாக்காலங்களில் சிறுவர்களால் ஆடப்படுவது யாவரும் அறிந்த விடயமாகும். இவை மட்டுமன்றி அம்மனின் விழாக் காலங்களில் அம்மனின் தொட்டத்து மேடையில் விடிய விடிய கலை நிகழ்ச்சிகளும் நடாத்தப்படும். இதுவே பின் நாட்களில் இக்கிராமம் கலை கிராமமாக உருவாக்கக் காரணமாயிற்று
தேற்றாத்தீவு கிராமத்தின் மத்தியில் பிரதான வீதி ஓரமாக ஆலமர நிழலில் வழிபடப்பட்ட தொன்மை வாய்ந்த பிள்ளையார் ஆலயமும் பிற்காலத்தில் கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயம் என பெயர் பெறுவதற்கும் இக் கொம்புமுறி விளையாட்டு நடைபெற்ற சந்தியில் இப் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்ததே காரணமாயிற்று. இவ்வாறுபட்ட நீற்றுக் கட்டிடத்தைக் கொண்ட பழமைமிகு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலயத்தின் கருவறையில் ஆரம்ப காலத்தில் விக்கிரகம் ஏதும் இருக்கவில்லை. கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் உள்ள பழமைமிகு பெட்டகத்தில் இருக்கும் கண்ணகி அம்மனின் புராதான கால முகக்களை பிள்ளையார் ஆலயத்திலே இருந்து எடுத்துவரப்பட்டு ஆலய கருவறையில் வைக்கப்பட்டு கதவு திறந்து முதல் நாள் விழா நடைபெறும். தொடர்ந்து ஏழு நாள் விழா முடிவில் மீண்டும் முகக்களையானது புராதன பெட்டகத்தில் வைக்கப்படும். இன்றும் இம் முகக்களை எடுத்து வந்து விழா நடாத்தும் மரபே உள்ளது. செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் கட்டாடியாராக பல்லாண்டு காலம் இருந்து மறைந்த தேற்றாத்தீவை சேர்ந்த இளையதபிக் கட்டாடியாரின் பேரனாகிய ருதுகரன் கட்டாடியாரே இவ்வாலயத்தின் பிரதான கட்டாடியராகவும் செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயத்தின் இணைக் கட்டாடியாராகவும் தற்போது உள்ளார்.
பன்னெடுங்காலமாக நீற்றுக் கட்டடமாக இருந்த இவ்வாலய சுவர்கள் நீக்கப்பட்டு கற்பக்கிரகம், அர்த்தமண்டபம் ஆகியவற்றைக் கொண்டதாக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய ஆலயம் அவசர அவசரமாக ஆறு மாத காலத்துக்குள் அமைக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் செய்து முடிக்கப்பட்டது. இவ்வாறு அவசரமாக ஆலயம் அமைக்கபட்டதுக்கு பள்ளியங்கட்டு கண்ணகி அம்பாளே காரணமாகும். 2016 ஆம் ஆண்டு அம்மனின் ஆலயத்திற்கு அருகே இருந்த கொம்புச்சந்தி பிளையார் ஆலயம் அழகிய கட்டட சிற்ப ஓவிய வேலைபாடுகளுடன் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டிருந்தது. ஆனால் நிதி வளம் பற்றாக் குறை காரணமாக இவ்வாலயம் புனருத்தானம் செய்யப்படாது பழைய சிறிய நீற்று கட்டிடமாகவே இருந்தது. இந்த வேளையிலே தான் அம்மனின் ஆலய முன்றலில் பிரதான வீதியில் தொடர்ந்தும் விபத்துகளும் ஏராளமான உயிரிழப்புகளும் சம்பவித்துக் கொண்டிருந்தன அம்மனின் கோபக் குறிப்பை உணராத பலரும் பல கருத்துக்களை கூறலாயினார். கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய கட்டுமானத்தில் பிழை இருக்குமோ? என்பாரும் கும்பாபிஷேகத்தில் பிழை இருக்கும்மோ? என்பாருமாக பல கதைகள் பரவத் தொடங்கின. இந்த வேளையிலேதான் அம்மனின் குறிப்பை உணர்ந்த ஆலய பரிபாலன சபையினர் அவசரமாக ஆலயம் அமைத்து கும்பாபிஷேகத்தை நடாத்தி முடித்தனர். கும்பாபிஷேகம் என்று நடைபெற்றதோ அன்று முதல் எந்தவித விபத்துகளும், அசம்பாவிதங்களும் ஆலயத்திற்கு முன்பாகவோ ஆலயத்தை அண்டிய பகுதியிலோ இதுவரை நடைபெற்றது கிடையாது. இதேபோன்று கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்துக்கான பணிமனை அமைப்பதற்கு இடவசதி போதாததனால் அம்மனின் ஆலய பின்பக்க எல்லைக்குள் பணிமனைக்கான பிளேட் (மேற்கூரை) அமைத்த போது அன்று இரவு அந்த கொங்கிறிட் பிளேட் முற்றுமுழுவதுமாக இடிந்து விழுந்ததை பலரும் அறிவர். பேசும் தெய்வமான பள்ளியங்கட்டுக் கண்ணகி அம்மனிடம் அருள் பெற்ற அடியார்கள் ஏராளம். தற்போதும் சிங்கள் மக்கள் கூட இங்கு வருகை தந்து 'பத்தினி தெய்யோ' என்று வழிபட்டு அருள் பெற்றுச் செல்கின்றனர்.
அம்மனின் கும்பாபிஷேகத்தின் போதும் அம்மன் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். பழைய ஆலய கருவறையில் விக்கிரகம் ஏதும் இருக்காததினால் புதிய ஆலயத்தில் எவ்வாறு பட்ட விக்கிரகம் வைப்பது என்று ஆலய நிர்வாகிகள் குழம்பியிருந்த வேளையில் ஆலய நிர்வாகிகள் சிலரிடமும் ஆலய கட்டாடியரிடமும் ஒரே நாளில் ஒரே இரவில் அம்மன் கனவில் காட்சி அளித்து தமக்குத் தாமிர விக்கிரகமே வைக்குமாறு கூறிய அற்புதம் அதிசயிக்கத்தக்கது. அம்மனின் அருள்வாக்குக்கிணங்க தாமிர விக்ரம் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டது விக்கிரகம் ஆலயத்திற்கு வந்து சேருவதற்கு முன் அதைப்பற்றி அறிந்திராத ஆலயத்தில் சிற்ப வேலைகளைச் செய்து கொண்டிருந்த சிற்பச்சாரி தான் செய்த ஒரு கண்ணகியின் சிற்பத்தை சுட்டிக் காட்டி அந்த சிற்பத்தை ஒத்த வடிவாகவே வரவுள்ள தமிர விக்ரம் இருப்பதாகவும் அம்மன் தனக்கு காட்சி தந்ததாக கூறினார் அவர் கூறியது உண்மை என்பதை மறுநாள் ஆலயத்திற்கு வந்து சேர்ந்த அம்மனின் தாமிர விக்கிரகம் உணர்த்தியமை யாவரையும் பிரமிக்க வைத்தது. இவ்வாறு பல அற்புதங்களும் அருளாட்சியும் புரியும் தேற்றாத்தீவு பள்ளியங்கட்டிலே உறையும் கண்ணகி அம்மனும் செட்டிபாளையம் கண்ணகி அம்மனும் ஒன்றே என்பதனை கிழக்கு இலங்கை கண்ணகி இலக்கியங்களின் மிக பழைய காவியமான ஊர் சுற்று காவியத்தில் வரும் 'நீதி செறி தேற்றா என்னும் செட்டிபாளையம்' எனும் பாடல் அடி சான்று பகர்கின்றது எனவே. துஸ்ர நிக்கிரக சிஸ்ர பரிபாலானம் செய்து அருள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் தேற்றாத்தீவுபள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழா ஆனி மாதத்தில் நடைபெறுவதைப் பற்றியும் அம்மனுடைய வழிபாட்டை பற்றி விமர்சிப்பதும் கண்ணகி அம்மன் பள்ளி கொண்டிருக்கும் பள்ளியங்கட்டை பேச்சி அம்மனுக்குரிய பள்ளையத்துடன் ஒப்பிட்டு விமர்சிப்பதும், அகராதியில் அர்த்தங்களை தேடிக் குதர்க்கம் புரிவதும் போன்றனவான செயல்கள் அம்மனின் கோபத்திற்கு இட்டுச் செல்வதோடு தனக்கும் தன் சந்ததிக்கும் பல இழப்புகளை ஏற்படுத்தி பிரமஹத்தி தோஷத்தையும் உண்டு பண்ணும். ஆகையால் பள்ளியங்கட்டு கண்ணகி அம்மனை வழிபட்டு இஷ;ட சித்திகளை பெற்று வாழ்வதோடு அம்மனின் விழாவிலும் கலந்தும் ஒத்துழைப்பு வழங்கியும் அருள் பெற்று இகபர சௌபாக்கியம் பெறுவோமாக.

த.விமலானந்தராஜா மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயம், பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலயங்களின் பரிபாலன சபைதலைவர்
செட்டிபாளையம் ஸ்ரீல ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய
ஆலய பரிபாலன சபை செயலாளர்

பள்ளியங்கட்டு கண்ணகி அம்மனுக்கு அரோகரா...!

Photos from தேற்றாத்தீவு ஸ்ரீ பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை's post 01/07/2023

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவின் ஐந்தாம் தெரு தோரண ஊர்வலம்

01/07/2023

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவின் நான்காம் தெரு தோரண ஊர்வலம்

Photos from தேற்றாத்தீவு ஸ்ரீ பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை's post 30/06/2023

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவின் நான்காம் தெரு தோரண ஊர்வலம்

30/06/2023

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவின் மூன்றாம் தெரு தோரண ஊர்வலத்தின் நடனம்

30/06/2023

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவின் மூன்றாம் தெரு தோரண ஊர்வலம்

30/06/2023

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவின் இரண்டாம் தெரு தோரண ஊர்வலம்

Photos from தேற்றாத்தீவு ஸ்ரீ பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை's post 29/06/2023

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவின் மூன்றாம் தெரு தோரண ஊர்வலம்

Want your place of worship to be the top-listed Place Of Worship in Batticoloa?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியை  கலை நிகழ்வுகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எமது ஆலயத்தில் இடம்பெற்ற நிருத்தம்
பன்னிருராசிக்கும் உரிய கணேசர் அபிஷேகம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எமது ஆலயத்தில் இடம்பெற்ற நிருத்தம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எமது ஆலயத்தில் தீர்த்த உற்சவம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எமது ஆலயத்தில் இடம்பெற்ற வசந்த மண்டப பூஜை உள் வீதி திருவிழா
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எமது ஆலயத்தில் இடம்பெற்ற மகா கணபதி ஹோமம்
தேற்றாத்தீவு ஸ்ரீ ஆதி வீரபத்திரர் ஆலய வருடாந்த திருச்சடங்கு
தாந்தாமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவதிருவிழா
தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவின் நடுத்தெரு தோரண ஊர்வலத்தின் நடனம்
தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவின் நடுத்தெரு தோரண ஊர்வலம்

Category

Address

Main Road Thettativu
Batticoloa

Other Hindu Temples in Batticoloa (show all)
Vilavaddawan Sri Nagathampiran Alayam Vilavaddawan Sri Nagathampiran Alayam
Batticoloa

It's about vilavur sri nagathampiran alayam

கல்லடி உப்போடை- நொச்சிமுனை பேச்சியம்மன் ஆலயம் கல்லடி உப்போடை- நொச்சிமுனை பேச்சியம்மன் ஆலயம்
கல்லடி உப்போடை/நொச்சிமுனை
Batticoloa, 30000

https://www.facebook.com/KNPecciyammanAlayam JOIN nOW

தேற்றாத்தீவு ஸ்ரீ பாலமுருகன் ஆலயம். தேற்றாத்தீவு ஸ்ரீ பாலமுருகன் ஆலயம்.
Batticoloa, 30196

தேற்றாத்தீவு ஸ்ரீ பாலமுருகன்

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம் வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம்
Kalkudah Road Valachenai
Batticoloa, 30400

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம்

Arayampathy Kannaki Amman Arayampathy Kannaki Amman
Arayampathy
Batticoloa, 30150

Arayampathy

ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலயம், திருப்பழுகாமம், மட்டக்களப்பு ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலயம், திருப்பழுகாமம், மட்டக்களப்பு
Thirupalugamam
Batticoloa, 30000

ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலயம் த