தமிழ்க் கேணி - Thamizh Keni

Nonprofit Volunteer based organization
Teaching Tamil - Connecting the present to our roots!! Tamil classes in Irvine,CA

Photos from தமிழ்க் கேணி - Thamizh Keni's post 02/10/2024

நமது தமிழ்க்கேணி பள்ளிக்கான நூலகத்திற்கான புத்தகத் தேடல், எனை தும்பி https://www.facebook.com/thumbi4childrenகுழந்தைகள்
புத்தகங்களில் செலுத்தி நிறுத்தியது.

அருமையான சிந்தனை, வரவேற்கத்தக்க வகையிலான செயலாக்கம் - ஒவ்வொரு புத்தகமும் முத்து! குழந்தைகளை மட்டுமல்ல நம்மையும் பெரு மகிழ்ச்சியிலும் ஆழ்ந்த சிந்தனையிலும் ஆழ்த்துமளவுக்கான படைப்புகள்!

ஒரு அழகான பூங்காவையே, கண்ணிலும் மனதிலும் விரித்துவிடும் பெருவலிமை கொண்ட புத்தங்களைத் தொடர்ந்து படைப்பதற்காக தும்பி பதிப்பகத்திற்கு நன்றி!

நாளை நமது பள்ளி மாணவர்களைச் சேர்த்து, தும்பி புத்தகங்களுடன் உறவாட, உணர்வாட வைப்பதற்காக ஒரு சிறு புத்தகத் திருவிழாவை தமிழ்க்கேணி பள்ளி நடத்துகிறது. பிற பின்.

#தும்பி

08/15/2023

எந்த மனிதரின் தோள்களில் இந்த பாரம் முழுவதும் ஏறப்போகிறதோ அந்த மனிதர் இப்போது பேச எழுந்தார். லாகூரிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததற்குப் பின்னால் ஜவஹர்லால் நேருவுக்கு சுதந்திரதின உரையைத் தயாரிக்க நேரமும் இல்லை; ஈடுபாடும் இல்லை. அவரது வார்த்தைகள் தன்னெழுச்சியாகவும் இதயத்தைத் தொடுவதாகவும் இருந்தன.

"பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் ஒரு தீர்மானத்துடன் நம்மை ஈடுபடுத்திக் கொண்டோம். அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் நேரம் இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக அல்லது பெருமளவினதாக இல்லையென்றாலும் மிகவும் உண்மையானதாக அது இருக்கும். உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவு நேரத்தில் இந்தியா வாழ்வுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் விழித்துக் கொள்கிறது"என்று அவர் அறிவித்தார்.

அவரது உதடுகளிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக வார்த்தைகள் வந்து விழுந்தன. ஆனால் மிக முக்கியமான அந்தத் தருணத்தில் ஜவஹர்லால் நேருவின் உரை சாதனை நிகழ்த்தக் கூடியதாக அமையவில்லை. "நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் என்பது எனக்கே தெரியாது. என் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து கொண்டிருந்தனவே தவிர எனது மனம் முழுவதும் பற்றி எரியும் லாகூரின் பயங்கரக் காட்சியிலேயே லயித்திருந்தது" என்று பின்னாளில் அவரது சகோதரியிடம் நேரு கூறினார்.

நேரு பேச்சைத் தொடர்ந்தார், "ஒரு சந்தர்ப்பம் வருகிறது. அந்த சந்தர்ப்பம் வரலாற்றில் மிகவும் அரிதானது. நாம் பழையதிலிருந்து புதியதில் அடியெடுத்து வைக்கிறோம்; ஒரு சகாப்தம் முடிவடைகிறது. நெடுங்காலம் அடக்கி வைக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா இப்போது பேசப் போகிறது. வரலாற்றின் விடியலில் இந்தியா தனது முடிவில்லா ஆய்வைத் தொடங்கியுள்ளது. அதன் பாதையறியாப் பல நூற்றாண்டுகள் முயற்சிகளாலும் வெற்றிகளாலும் தோல்விகளாலும் நிறைந்தவை. நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் இடையே தேடலை ஒருபோதும் விட்டுவிடவில்லை; அல்லது தனக்குப் பலமளித்த சிந்தனைகளை மறந்துவிடவில்லை. துரதிருஷ்டமான காலத்தை இன்று நாம் முடிக்கிறோம். இந்தியா சுயமாக தன்னைத் தானே கண்டறிந்து கொள்கிறது".

"அற்பமான அழிவுதரும் தரும் விமர்சனங்களுக்கு இது நேரமல்ல. மனக்கோணலுக்கும் மற்றவர்களைக் குற்றம் சொல்வதற்கும் இது நேரமல்ல. சுதந்திர இந்தியாவில் அதன் அனைத்து மக்களும் வாழ்வதற்குரிய பெருந்தன்மையான இல்லத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது" என்று உரையை முடித்தார்.

நள்ளிரவின் மணி ஒலிக்கும் போது, அனைவரும் எழுந்து இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் சேவை செய்யத் தாங்களாகவே உறுதி மொழியேற்குமாறு நேரு கோரினார். வெளியே அந்த நள்ளிரவின் வானத்தில் இடி முழக்கங்களின் ஒலியலைகள் பரவின. அந்த மண்டபத்தைச் சுற்றிலும் நெருக்கியடித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான சாமான்ய இந்தியர்கள் மேல் பருவ மழை பொழிந்தது. மிதிவண்டிகளைப் பற்றிக்கொண்டு, வெள்ளைநிறக் குல்லாக்களுடனும், உள்நாட்டுப் பருத்தியால் தயாரித்த தொளதொளப்பான கழுத்தில்லாத உடையுடனும், வெள்ளைச் சட்டைகளுடனும், புடவைகளுடனும், வியாபார ஆடைகளுடனும், கொட்டும் மழையிலும் சிதறாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். வரவிருக்கும் வளமிக்க சந்தர்ப்பத்துக்காக ஏங்கி அவர்கள் அசைவற்று நின்றிருந்தனர்.

~ நள்ளிரவில் சுதந்திரம் நூலிலிருந்து...

07/31/2023

சங்க இலக்கிய வடிவிலான பாடல்களை மேடையேற்றுகிறார்கள் பாடகர் டி எம் கிருஷ்ணா & எழுத்தாளர் பெருமாள் முருகன்.

https://fb.watch/m7LyYBt0r8/?mibextid=80Rg2Q

07/18/2023

📣 Don't miss out on the grand inauguration of ArWind FM, a virtual platform dedicated to creating special child awareness through engaging podcasts! Join us on 17th July, 2023, for the live streaming of our inaugural ceremony, where we will unveil our exclusive podcast series on various topics related to special children. Our interactive sessions and engaging discussions will provide opportunities for listeners to share their own experiences and insights. Help us grow, learn, and embrace diverse abilities by joining us for this incredible event!

Join us at https://open.spotify.com/user/3132eviehvb5wj2rjmznuhntghme?si=8f0f78cea2ce4f23

04/16/2023

I have the impression
that many of us
are afraid of silence.
We're always
busy yourself with something;
lyrics, music, radio,
television or thoughts
to occupy the space.
If the quiet and space
they are so important
for our happiness,
why don't we give them
more space in our lives ?

-Thich Nhat Hanh -

03/05/2023
STRING PUPPET PLAY - PANCHAALA KURAVANJI 02/26/2023

களரி குழுவினரின் பாஞ்சாலக் குறவஞ்சி மரப்பாவைக்கூத்து -
https://www.youtube.com/watch?v=1715lAWIyXk

STRING PUPPETRY - மரப்பாவைக்கூத்து
Marionette puppetry aka Marapaavai koothu of the Kongu region involves wooden marionettes made from Tragacanth gum tree (Sendhanakku maram). They are dressed up in attires and geared up with ornaments meant to be intense and colorful. The jewels are made out of a pulpy recipe of sawdust and tamarind seeds. The marionettes are steered by four guiding strings from behind the screen, by artists who puppeteer the dolls to sing, dance and perform the tales from epics of Ramayana and Mahabharata.

(செந்தணக்கு மரத்தாலான மரப்பதுமைகளுக்கு, மரத்தூள் புளியங்கொட்டை கலந்து சமைத்த மரக்கூழால் அணி செய்து, பின்பு கண்ணுக்கு வெளிச்சமாக அலங்கரித்து, பாவைகளாக்கி, திரைக்கு பின்னிருந்து நான்கு சூத்திரக்கயிற்றின் வழி இயக்கி, ஆடி பாடி புத்திக்கு உரைக்கின்ற கதை சொல்லும் தமிழ் நாட்டார் நிகழ்கலை மரப்பாவைக்கூத்து என்னும் பொம்மலாட்டம்.)

Kalari trust has been conducting String puppet plays on tales of Ramayana, Mahabharata, and especially stories from our cultural heritage such as Silapathikaaram and Ponnar Sankar.

These performances are live-streamed and available on social media platforms like Facebook.

STRING PUPPET PLAY - PANCHAALA KURAVANJI களரி தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டுமையம் வழங்கும் அரங்காற்றுகை நிகழ்வு : பாஞ்சாலக்குறவஞ்சி - மரப்பாவைக்கூத....

02/14/2023

இன்னொரு மனிதருள் மாணிக்கம் ஆப்ரகாம் லிங்கன்!

லிங்கன் தன் மகனை பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்..

ஆபிரகாம் லிங்கன் பிறந்த தின சிறப்பு பகிர்வு...
அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்கு சொல்லித்தாருங்கள். ஆனால் பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு
தெரிவியுங்கள் .

பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது , கோழைத்தனம் என புரியவையுங்கள். புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடிலா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும்,சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும் ,பசுமையான மலை யடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்
அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். என அறிவுறுத்துங்கள் .எனினும் உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள் .. துயரமான வேளைகளில்
சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள் ;. போலியான நடிப்பை கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள். அவனை கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்

சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...
இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரஹாம் லிங்கன்.

- பூ.கொ.சரவணன்

Photos from குக்கூ குழந்தைகள் வெளி ( Cuckoo Movement for Children)'s post 02/04/2023
46TH CBF STALL DETAILS.pdf 01/04/2023

சென்னை புத்தகக் கண்காட்சி

46TH CBF STALL DETAILS.pdf

01/03/2023

புத்தகங்களை புரட்டிப் பார்க்கையில் , அதில் இன்னொரு மனிதரின் குரல் கேட்கிறது. ஒருவேளை அவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இறந்திருக்கலாம். ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, அந்த ஆசிரியர் தெளிவாகவும் அமைதியாகவும் உங்கள் தலைக்குள் புகுந்து நேரடியாக உங்களிடம் பேசுகிறார்.

ஒருவரையொருவர் அறிந்திராத தொலைதூர சகாப்தங்களின் மக்களை ஒன்றிணைத்தல் என்பது மனித கண்டுபிடிப்புகளில் மிகப் பெரியது. புத்தகங்கள் காலத்தின் கட்டுகளை உடைக்கிறது. மனிதர்கள் மந்திரம் செய்ய முடியும் என்பதற்கான சான்றுகளே புத்தகங்கள்.

- கார்ல் சாகன் (வானியற்பியலாளர்)

2023ம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தும்பி - தன்னறம் நூல்வெளிக்கு அரங்கு கிடைத்திருக்கிறது. ஒருமித்த நண்பர்களின் கூட்டிணைவு உழைப்பால் நிறைய புதிய நூல்கள் இப்புத்தகத் திருவிழாவில் வெளிவரவுள்ளது. தும்பி சிறார் இதழும், தன்னறம் நூல்வெளியும் ஓர் பதிப்பகமாக இன்று நிலையூன்றுவதற்கு எத்தனையோ நண்பர்களின் துணைநிற்றல்தான் அடிப்படைக்காரணி. எக்காலத்தும் எங்கள் நெஞ்சில் ஏந்திச்சுமக்கும் நன்றிக்கடன் இது. இம்முறையும் தோழமைகளைச் சந்திக்க ஆவலுடன் அரங்கில் காத்திருக்கிறோம். தேர்ந்த வடிவமைப்புத் தரத்தில், தேர்ந்தெடுத்த தலைப்புகளில் ஒவ்வொரு புத்தகமும் பெரும் மெனக்கெடலுக்குப் பிறகே உருக்கொள்கிறது. எல்லாம்வல்ல பேரியற்கையை வணங்கி புத்தகக் கண்காட்சிக்கு ஆயத்தமாகிறோம்.

~
தும்பி தன்னறம் நூலரங்கு : 181
சென்னைப் புத்தகக் கண்காட்சி 2023
ஜனவரி 6 முதல் 22 வரை, YMCA வளாகம்
www.thumbigal.com l www.thannaram.in l 9843870059

Annual day 2022 discussion with Dr. Constantine V. Nakassis 01/01/2023

அனைவருக்கும் ஆங்கிலப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்!!

அதக நடத்திய மெய்நிகர் விழாவில் நடந்த ஒரு கலந்துரையாடல் இங்கே.

அமெரிக்க மண்ணில் பிறந்து வளரந்து பின் தன் ஆர்வத்தால் தமிழ் கற்றறிந்து அழகாகத் தமிழில் உரையாடுகிறார் முனைவர் கான்ஸ்டன்டைன் நக்காஸிஸ் - நிச்சயம் உங்கள் பிள்ளைகளோடு இணைந்து காணவேண்டிய காணொளி!!

Annual day 2022 discussion with Dr. Constantine V. Nakassis A discussion during ATA annual day with Dr. Constantine V. Nakassis, Associate professor of Anthropology in the University of Chicago. In this discussion, D...

10/30/2022

எங்கெல்லாம் மனிதன் இருக்கிறானோ
அங்கெல்லாம் அன்பை வழங்குவதற்கான
ஒரு வாய்ப்பு இருக்கிறது.

~ செனகா

Language, the opening move 10/17/2022

A re-post from a 2019 article-
//The zeal of the BJP to spread Hindi in non-Hindi States is based on deeply flawed premises. To begin with, the government does not have any authentic data on the linguistic composition of the country. The 2011 Census data on languages, published last year, was heavily doctored. It presents Hindi as the ‘mother tongue’ of over 52 crore people by subsuming more than 5 crore claimants of Bhojpuri and more than 9 crore speakers of nearly 61 other languages — claimed as ‘other’ by their speech communities — from Rajasthan, Himachal Pradesh, Uttarakhand, Haryana, Bihar, Jharkhand, Chhattisgarh and Madhya Pradesh. ‘The Hindi’ is probably spoken by not more than 30% of the population, but it is not the mother tongue for the remaining 70%. Knowingly causing risk to any indigenous language has been described by the UNESCO as ‘an act amounting to genocide’. //

Language, the opening move The ‘Hindi’ controversy foretells the larger political narrative for the coming years

Want your school to be the top-listed School/college in Irvine?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Category

Address


20 Truman Sreet
Irvine, CA
92620

Opening Hours

9am - 5pm

Other Language schools in Irvine (show all)
Konoz AlQuran Konoz AlQuran
33 Wheeler
Irvine, 92620

Welcome to our academy! We are a team of experienced and certified Arabic language and Quran teachers

ನುಡಿ ಕನ್ನಡ Nudi Kannada ನುಡಿ ಕನ್ನಡ Nudi Kannada
Irvine, 92620

Welcome to our Nudi Kannada family . Our school is a small volunteer-only organization with like m

LASC Brasil LASC Brasil
17320 Red Hill Avenue, Suite 300
Irvine, 92614

Welcome to LASC - American Language and Culture School, an English language school with more than 30 years of tradition. LASC has been one of the most respected and recognized inst...

Hindi Gurukul And Indian Culture Hindi Gurukul And Indian Culture
Irvine

Learn to speak, read and write Hindi in a fun and unique way. Get to know more about the Indian Culture by learning and celebrating some of the Indian festivals like Holi, Diwali, ...

LangoKids Irvine LangoKids Irvine
9200 Irvine Center Drive, Suite 100
Irvine, 92618

LangoKids offers group classes to children ages 2-15. Kids acquire languages and are immersed in cultures through music, games, and art. Give us a call!

LASC Irvine LASC Irvine
2301 Dupont Drive Ste 200
Irvine, 92612

LASC empowers international students in Southern California for English language excellence.

Karis Academy Karis Academy
14281 Chambers Road
Irvine, 92780

Karis Academy is hosting In-Person Mandarin Chinese & Korean Classes at Lyceum Village in Tustin!

The English Academy The English Academy
100 Spectrum Center Drive, Suite 900
Irvine, 92618

English Language School in SoCal, providing English training to executives, individuals, and groups.

Irvine Chinese School Irvine Chinese School
9 Truman Street
Irvine, 92620

Our vision is to be the best-run non-profit Chinese education and cultural institution in North Amer

ALD Chinese Children's Orchestra ALD Chinese Children's Orchestra
Irvine, 92614

ALD Chinese Children's Orchestra is Orange County's only traditional Chinese Children's Orchestra.

A Little Dynasty Chinese School A Little Dynasty Chinese School
17072 Gillette Avenue
Irvine, 92614

A Little Dynasty Chinese School offers a fresh fun approach to learning Mandarin for students from 15 months to high school.