Dr Kamal Naser

I am a Consultant in General internal medicine, Diabetes and Endocrinology

28/08/2024

කෑමට පෙර හෝ පසු ඖෂධ ගැනීම ගැන කරදර විය යුතුද?

ශ්‍රී ලංකාවේ ෆාමසිවල ඖෂධ පැත්තක් කෑමට පෙර හෝ කෑමට පසු යනුවෙන් ලිවීම සිරිතකි. මෙය වැරදි සහ අකාර්යක්ෂම භාවිතයකි. ඔබ ආහාර වේලකට පෙර හෝ පසුව පෙත්තක් ගන්නවා නම්, එයින් අදහස් වන්නේ ඔබ 'ආහාර සමඟ' පෙති පානය කරන බවයි.
ආහාර සමඟ මිශ්‍ර නොකර හිස් බඩක් මත පෙති කිහිපයක් පමණක් ගත යුතුය. හිස් බඩට ගැනීම යනු කෑමට පෙර ගැනීම නොවේ. හිස් බඩට ගත යුතු ඖෂධ ඉතා අල්පය. මෙයින් අදහස් කරන්නේ සමහර පෙති ආහාර සමඟ මිශ්‍ර නොකළ යුතු බවයි. පහත සඳහන් පෙති හිස් බඩක් මත ගත යුතුය: තයිරොක්සීන්, යකඩ පෙති, ඇලන්ඩ්‍රොනිකාසිඩ් (Alendronic acid), ඩොක්සිසයික්ලයින් (Doxycycline), සෙමග්ලුටයිඩ් පෙති (oral form of semaglutide), වෝෆරින් (warfarin) සහ සුක්‍රල්ෆේට්. තයිරොක්සින් වැනි පෙති මුලින්ම ගත යුත්තේ උදෑසනයි. පෙති ගැනීමෙන් පසු, ඔබ අවම වශයෙන් පැය භාගයක්වත් ජලය හැර කිසිවක් අනුභව නොකළ යුතුය. ඔබ රාත්‍රියේදී මෙම පෙති ගැනීමට තීරණය කරන්නේ නම්, රාත්‍රී ආහාරයෙන් පසු සහ නින්දට යාමට පෙර ඒවා ගත යුතුය. එබැවින් ආහාර සහ පෙති අතර අවම වශයෙන් පැය 2 ක පරතරයක් පවතී. පෙති සහ ආහාර අතර මෙම පරතරය අවශ්‍ය වන්නේ ආමාශයේ ඇති ආහාර මෙම විශේෂිත ඖෂධ අවශෝෂණය අඩු කළ හැකි බැවිනි.

ආහාර සමඟ ගත යුතු ඖෂධ:

සමහර පෙති ආමාශයෙ දැවිල්ලක් ඇතිකරන්න පුළුවන්, ඒ නිසා ඒවා ආහාර සමඟ ගත යුතුය. එය ඔබේ ආහාර වේලකට පෙර, පසුව හෝ අතරතුර ගත හැකිය.
උදාහරණයක් ලෙස: Ibuprofen (brufen), Naproxen, Mefenamic acid, Diclofenac, Aspirin වැනි වේදනා නාශක සහ Prednisolone, Dexamethasone වැනි ස්ටෙරොයිඩ් ආහාර සමඟ ගත යුතුය.

වෙනත් බොහෝ ඖෂධ ඔබේ ආහාර වේලාවට වඩා නිශ්චිත වේලාවක ගත හැකිය.
කෙටියෙන් කිවහොත්, ෆාමසි කෑමට පෙර හෝ පසුව ලිවීම නතර කර පෙති පානය කරන ආකාරය පිළිබඳ නිසි උපදෙස් දීමට පටන් ගත යුතුය.

Diabetes education for patients - oil and fried food [part 4] 24/08/2024

எந்த எண்ணெய் வகை சிறந்தது?

Diabetes education for patients - oil and fried food [part 4]

14/08/2024

When to take a tablet- before meals or after meals.

மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது உணவுக்கு முன், பின் என்று அலட்டிக்கொள்ள வேண்டுமா?.

இலங்கையில் உள்ள பாமசிகளில் மாத்திரை பக்கட்டுகளில் 'உணவுக்கு முன் அல்லது உணவுக்குப் பின்' என்று எழுதுவது வழமை. இது தவறான மற்றும் பயனற்ற நடைமுறையாகும். நீங்கள் உணவுக்கு முன் அல்லது உணவுக்குப் பிறகு ஒரு மாத்திரையை எடுத்துக் கொண்டால், மாத்திரைகளை 'உணவுடன்' எடுத்துக்கொள்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.
ஒரு சில மாத்திரைகள் மட்டுமே உணவுடன் கலக்காமல் வெறும் வயிற்றுடன் எடுக்கவேண்டும். வெறும் வயிற்றில் எடுப்பது என்பதன் அர்த்தம் சாப்பிட முன் எடுங்கள் என்ற அர்த்தம் அல்ல. ​​வெறும் வயிற்றில் எடுக்க வேண்டிய மருந்துகள் மிகக் குறைவு. அதாவது சில மாத்திரைகள் உணவுடன் கலக்கக் கூடாது. பின்வரும் மாத்திரைகள் வெறும் வயிற்றுடன் எடுக்கப்பட வேண்டும்: தைராக்ஸின், இரும்பு மாத்திரைகள் (iron tablets), Alendronicacid, doxycycline, semaglutide மாத்திரைகள், warfarin மற்றும் sucralfate. தைராக்ஸின் போன்ற மாத்திரைகளை காலையில் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். மாத்திரைகளை எடுத்துக் கொண்ட பிறகு, குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு நீங்கள் தண்ணீரைத் தவிர சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. இந்த மாத்திரைகளை இரவில் எடுக்க முடிவு செய்தால், இரவு உணவை நேரகாலத்தோடு எடுத்து விட்டு, படுக்கைக்கு முன் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உணவுக்கும் மாத்திரைகளுக்கும் இடையில் குறைந்தது 2 மணிநேர இடைவெளி இருக்கும். மாத்திரைகளுக்கும் உணவுக்கும் இடையில் இந்த இடைவெளி தேவைப்படுகிறது, ஏனெனில் வயிற்றில் உள்ள உணவு இந்த குறிப்பிட்ட மருந்துகளின் உறிஞ்சுதலைக் குறைக்கும்.

உணவுடன் சேர்த்து எடுக்க வேண்டிய மருந்துகள்:

சில மாத்திரைகள் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும், எனவே, அவை உணவுடன் எடுக்கப்பட வேண்டும். இது உங்கள் உணவுக்கு சற்று முன், பின் அல்லது இடையில் எடுத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக: Ibuprofen (brufen), Naproxen, Mefenamic acid, Diclofenac, Aspirin போன்ற வலி நிவாரணிகள், மற்றும் Prednisolone, Dexamethasone போன்ற ஸ்டெராய்டுகள் (steroids) சாப்பாட்டுடன் எடுக்கப்பட வேண்டும்.

பெரும்பாலும் மற்றைை எல்லா மருந்துகளையும் உங்கள் உணவு நேரத்தை விட, ஒரு குறிப்பிட்ட நேரப்படி எடுத்துக்கொள்ளலாம்.
சுருக்கமாக, மருந்தகங்கள் உணவுக்கு முன் அல்லது பின் என்று எழுதுவதை நிறுத்திவிட்டு, மாத்திரைகள் எப்படி எடுப்பது என்பது குறித்த சரியான ஆலோசனைகளை வழங்கத் தொடங்க வேண்டும்.

It's a usual habit for pharmacies in Sri Lanka to write on tablet covers as 'before meals or after meals '. This is a wrong and useless practice. If you take a tablet just before meals or just after meals, you are taking the tablets 'with meals'.
When you are taking tablets, there are very few medications that needs to be taken on empty stomach, that means the tablet should not be mixed with meals. Eg: thyroxine, iron tablets, alendronic acid, tetracycline, semaglutide oral tablets, warfarin and sucralfate). Tablets like thyroxine should be taken first thing in the morning. After taking the tablets, you should not eat or drink except water for at-least half an hour. If you decide to take these tablets in the night, you should take your evening meal early and take the tablets at bedtime, so that there is at least a 2 hour gap between the food and tablets. This gap between the tablets and food is needed because food in the stomach will.reduce absorption of these particular medicines.

Some tablets can irritate the stomach, therefore, they should be taken with meals. It could be taken just before, after or in between your meals. Eg: pain killers like ibuprofen, naproxen,are the tabletsmefenamic acid, diclofenac and aspirin, steroids like prednisolone and Dexamethasone.

All other medicines can be taken according the time frequency rather than your meal times.
In summary, pharmacies should stop writing before or after meals and start giving proper advice on how to tablets.

31/07/2024

Please avoid using 'mineral water' bottles:

அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்று சமீபத்தில் செய்த ஆய்வில், mineral water எனப்படும் disposable தண்ணீர் போத்தல்கள் பற்றிய ஒரு ஆபத்தான கண்டுபிடிப்பைக் காட்டுகிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் சராசரியாக 240,000 நனோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது என்ன தீங்கு விளைவிக்கும் என்பது பற்றிய தரவு எங்களிடம் இல்லை. இந்த நானோ துகள்கள் மிக இலகுவாக எமது உடல் கலங்களுக்குள் சென்றுவிடும். இவற்றை எமது உடலால் அகற்ற முடியாது. இது ஒரு பயங்கரமான செய்தியாக இருக்கிறது. தயவு disposable பிளாஸ்டிக்குகளுக்கு பதிலாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய கண்ணாாடி, உலோகம் போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்த முயற்சிக்கவும்.
A recent research done by an American University shows an alarming finding about disposable water bottles. They have found on average 240,000 nano plastic particles in a litre of water. We have no data on what harm it can cause. These nano particles can breach through the cell membranes and accumulate within the cells. This sounds scary. Please try to use reusable materials instead of disposable plastics.

1.https://www.nih.gov/news-events/nih-research-matters/plastic-particles-bottled-water #:~:text=The%20researchers%20found%20that%2C%20on,mostly%20focused%20on%20larger%20microplastics.
2.https://cleanwater.org/2020/07/29/bottled-water-human-health-consequences-drinking-plastic

27/07/2024

Quantity of food matters more than anything:

We made food from 100g of carbohydrates to check the volume of them. This is because people don't check the weight of carbohydrates, but they assume the quantity from what they see.
We used 100g of carbohydrates to make these food. 100g of rice looks much bigger portion compared to others. String hoppers made of 100g of rice flour also looks like a big portion, but roti made of wheat flour and Kurahan (Finger Millet) flour look much smaller. 100g of rice and 100g of string hoppers will be enough for two people, but because the roti looks much smaller one roti is not enough for a person. Sometimes people eat two roti with sambol or gravy. This is equivalent to 2 full plates of rice. Because there is not much vegetables and proteins added to the roti, absorption is faster. In diabetes patients, blood sugars will increase fast and remains high for a long time causing damage to the organs like heart and kidneys. In non diabetics, its going to increase the weight. If you like roti (it could be rice Kurahan, wheat or rice flour), please eat only half and remember to add vegetables and proteins.
Rice and curry is the best because amount of carbohydrate is less and added vegetables and proteins reduce the rate of absorption of glucose.
But quantity matters, don't eat a lot of rice. Please put less rice and add lots of curries.

நீங்கள் உண்ணும் உணவின் அளவு தான் முக்கியம்:

100 கிராம் கார்போஹைட்ரேட்டை அளவுடைை சோறு, இடியப்பம், ரொட்டி என்பவற்றை ஆராய்ச்சிக்காக நாங்கள் தயாரித்தோம். ஏனென்றால், மக்கள் கார்போஹைட்ரேட்டின் எடையை பார்க்க மாட்டார்கள், ஆனால் அவர்கள் அவர்கள் கண்ணுக்குத்தெரியும் அளவை வைத்துத்தான் எவ்வளவு சாப்பிடுவது என தீர்மானிப்பார்கள்.
இந்த உணவை தயாரிக்க 100 கிராம் கார்போஹைட்ரேட் பயன்படுத்தினோம். மற்றவற்றை விட 100 கிராம் அரிசி மிகவும் பெரிய அளவகத் தெரிகிறது. 100 கிராம் அரிசி மாவில் செய்யப்பட்ட இடியப்பமும் ஒரு பெரிய பகுதி போல் தெரிகிறது, ஆனால் கோதுமை மாவு மற்றும் குரக்கன் (விரல் தினை) மாவு ஆகியவற்றால் செய்யப்பட்ட ரொட்டி மிகவும் சிறியதாக இருக்கும். 100 கிராம் அரிசி மற்றும் 100 கிராம் இடியப்பம் இரண்டு பேருக்கு போதுமானதாக இருக்கும், ஆனால் ரொட்டி மிகவும் சிறியதாக இருப்பதால் ஒருவருக்கு ஒரு ரொட்டி போதாது. சில நேரங்களில் மக்கள் சாம்பல் அல்லது குழம்புடன் இரண்டு ரொட்டிகளை சாப்பிடுவார்கள். இது 2 முழு தட்டு அரிசிக்கு சமம். ரொட்டியுடன் அதிக காய்கறிகள் மற்றும் புரதங்கள் சேர்க்கப்படாததால், உறிஞ்சுதல் வேகமாக இருக்கும். நீரிழிவு நோயாளிகளில், இரத்தத்தில் உள்ள சீணியின் அளவு வேகமாக அதிகரித்து, இதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்குச் சேதத்தை ஏற்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களுக்கு, இது எடையை அதிகரிக்கும். நீங்கள் ரொட்டியை விரும்பினால் (அது அரிசி குரக்கன், கோதுமை அல்லது அரிசி மாவாக இருக்கலாம்), தயவுசெய்து பாதி ரொட்டியை மட்டும் சாப்பிடுங்கள், காய்கறிகள் மற்றும் புரதங்களைச் சேர்க்கவும்.
கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவாக இருப்பதாலும், காய்கறிகள் மற்றும் புரதங்களைச் சேர்ப்பதாலும் குளுக்கோஸ் உறிஞ்சும் வீதத்தைக் குறைப்பதால் சோறும் கறியும் சிறந்தது.
ஆனால் சாப்பிடும் அளவு முக்கியம், அரிசி நிறைய சாப்பிட வேண்டாம். தயவு செய்து சாதம் குறைத்து நிறைய கறிகளைச் சேர்க்கவும்.

19/07/2024

இரவு வேலை செய்வதாலும, நள்ளிரவு 12.30 மணி முதல் காலை 6.00 மணி உற்பட்ட நேரத்தில் வெளிச்சத்தில் இருப்பதாலும் நீரிழிவு நோய் அபாயம் அதிகரிக்கிறது.

இரவு ஷிப்டுகளில் வேலை செய்பவர்கள், இரவில் உட்புற வெளிச்சம் மற்றும் நள்ளிரவுக்குப் பிறகு மொபைல் ஃபோனைப் பயன்படுத்துபவர்களுக்கும் நீரிழிவு நோய் உருவாகும் அபாயம் அதிகரிக்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. ஆபத்து 1.5 மடங்கால் அதிகரிக்கிறது. இதற்கு காரணம் நள்ளிரவுக்குப் பிறகு வெளிச்சம் படும் போது மெலடோனின் ஹார்மோன் சுரப்பு குறைவடைவதாகும்.

Type 2 Diabetes risk increased by exposure to light in the night (between 12.30 midnight to 6.00am)

Studies have shown increased risk of developing type 2 diabetes in people working night shifts, indoor light exposure in the night and using mobile phone after midnight. The risk increases by 1.5 times. This is because melatonin hormone secretion is reduced when people are exposed to light after midnight.

For details, please read this article:
https://www.medscape.com/viewarticle/light-night-tied-diabetes-risk-largest-study-date-2024a1000cqs

16/07/2024

Many people with fatty liver try to cure fatty liver by using liver supplements. Cure of fatty liver is not in using supplements. Two important causes of fatty liver are alcohol and overweight/obesity. Other causes are consumption of excessive carbohydrates, sugar, fructose containing drinks such soft drinks, fruit juices and fast food. Sri Lankans should have a BMI of less than 23.
Fatty liver is not just increased liver enzymes. Fatty liver is a sign of multiple medical problem in your body. If you have fatty liver, you can develop cirrhosis of liver. People with fatty liver can develop diabetes, high blood pressure, heart attacks and cancers.

What can we do to prevent and treat fatty liver
1. Regular exercise
2. Reduce the quantity of carbohydrates
3. Minimise sugar intake
4. Minimise soft drinks including fruit juices (can eat plenty of fruits)
5. Minimise fast food/fried food

Important step is to reduce the amount of food you eat.
Please watch my video on YouTube to get more information

ஈரலில் கொழுப்பு படிவு (Fatty liver) உள்ள பலர் liver சப்ளிமெண்ட்ஸ் மூலம் Fatty liver ஐ குணப்படுத்த முயற்சி செய்கிறார்கள். Fatty liver இரண்டு முக்கிய காரணங்களால் ஏற்படுகின்றது. சாராயம், கூடுதலாக சாப்பிடுவது மற்றும் அதிக எடை / உடல் பருமன் முக்கியமான காரணிகளாகும். அதிகப்படியான கார்போஹைட்ரேட், சீணி, குளிர்பானங்கள், பழச்சாறுகள் மற்றும் fast food உட்கொள்வது ஏனைய காரணங்களாகும். இலங்கையர்கள் BMI 23க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
Fatty liver என்பது liver enzymes மட்டும் அதிகரிப்பதல்ல. Fatty liver உங்கள் உடலில் உள்ள பல மருத்துவ பிரச்சனைகளின் அறிகுறியாகும். உங்களுக்கு Fatty liver இருந்தால், liver cirrhosis, liver cancer போன்ற நோய்கள் உருவாக்கலாம். Fatty liver உள்ளவர்களுக்கு சீணி நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் புற்று நோய்கள் உண்டகலாம்.

Fatty liverஐ தடுக்க மற்றும் சிகிச்சை செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்?
1. வழக்கமான உடற்பயிற்சி
2. கார்போஹைட்ரேட்டுகளின் அளவைக் குறைக்கவும்
3. சர்க்கரை/சீணி உட்கொள்ளலைக் குறைக்கவும்
4. பழச்சாறுகள் உட்பட குளிர்பானங்களை குறைக்கவும் (நிறைய பழங்களை சாப்பிடலாம்)
5. Fast food/பொரித்த உணவுகளை குறைக்கவும்

நீங்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைப்பதே முக்கியமான படியாகும்.

12/07/2024

Salt and sugar - Killer combination:

உடல் செயல்பாடுகளுக்கு உப்பு தேவை, ஆனால் ஒரு சிறிய அளவு மட்டுமே தேவை. ஒரு நாளைக்கு 3-5 கிராம் உப்பு பாவிக்கலாம். சில உணவுப் பொருட்களில் மறைந்திருக்கும் உப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் கண்டி மாவட்டத்தில் 24 மணி நேர உப்பு உட்கொள்ளும் அளவை ஆய்வு செய்தோம். 30% ஆனோர் ஒரு நாளைக்கு 6 கிராம் வரை எடுத்துக்கொள்கிறார்கள், 33% ஆனோர் ஒரு நாளைக்கு 6-12 கிராம் வரை எடுத்துக்கொள்கிறார்கள். மீதமுள்ளவர்கள் ஒரு நாளைக்கு 12 கிராமுக்கு மேல் எடுத்துக் கொண்டனர். இது நீண்ட காலத்தில் உடம்பில் நோயை உண்டாக்கும். சிறிய அளவு உப்பு பரவாயில்லை என்பதை எனது பதிவில் வலியுறுத்தியுள்ளேன்.

சீணி வாழ்க்கைக்கு இன்றியமையாதது அல்ல. சீணி 1700 இல் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் மக்கள் 1900 வாக்கில் சீணிக்கு அடிமையாகினர். சீணி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு உடல் பருமன், நீரிழிவு மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் அதிகரித்ததை நாம் தெளிவாகக் காண்கிறோம். நீங்கள் சிறிய அளவு சீணியை உட்கொண்டால், அது தீங்கு விளைவிக்காது. எனினும் இலங்கையில் பொதுவாக தேனீர்க்கு 2-3 டீஸ்பூன் சீனி போடுகிறோம். சிலர் இன்னும் அதிகம் போடுகிறார்கள். ஒரு நாளைக்கு எத்தனை கப் டீயை அதிக சீணியுடன் குடிக்கிகிறோம்? அதற்கு மேல் எங்கும் பேக் ஹவுஸ்கள் உருவாகியுள்ளன. பேக்கரி பொருட்கள் சீணியுடன் கூடிய கார்போஹைட்ரேட் நிறைந்தவை.

குடிப்பழக்கத்தால் ஈரலில் நோய் ஏறபடுவது போல் ஈரலில் கொழுப்பு மற்றும் சிரோசிஸ் போன்ற நோய்கள் அதிக சீணி மற்றும் கார்போஹைட்ரேட் காரணமாக ஏற்படுகின்றன

We need salt for bodily functions, but only a small quantity is needed.(3-5 grams a day - remember there is hidden salt in some food items). We did a research study in Kandy district measuring 24 hour salt intake. About 30% were taking upto 6g per day, 33% were taking 6-12g per day. The rest were taking more than 12g per day. This is a poisonous dose in long term. I have stressed here that small amounts of salt is alright.

Sugar is not essential for life. Sugar was invented in 1700 but people got addicted to sugar around 1900.We clearly see increase in diseases like obesity, diabetes and heart attacks after sugar was introduced. If you consume small amounts of sugar, it would not be harmful. However in Sri Lanka, we normally put about 2-3 teaspoons of sugar for tea. Some people put more. How many cups of tea with high sugar we consume a day? On top of that Bake houses have sprung up everywhere. The bakery products are full of carbohydrates with added sugar. People are consuming poisonous doses of sugar.
We are now seeing epidemic of liver disease ( fatty liver and cirrhosis) similar to that alcoholism. It's because of sugar and carbohydrates.

12/07/2024

ஏன் நாம் நோய்களை தேடித்தேடி ஓடுகிறோம்.

Dr Arshath Ahamed MBBS MD PAED

இன்று நீங்கள் காலை கண்விழித்து எழும்பியதில் இருந்து , தூங்கும் வரை உட்கொண்ட உணவுகள் எவை? பருகிய குடிபானங்கள் எவை? எத்தனை லீட்டர் தண்ணீர் குடித்தீர்கள்?

கொஞ்சம் போனை ஓரத்தில் வைத்துவிட்டு ஒரு பேப்பரும் பேனையும் எடுத்து அவைகளை எழுதுங்கள்.

1. டீ/ப்லேன்டி ( குறைந்தது இரண்டு கரண்டி சீனியுடன்) +/- பிஸ்கட்/கேக்

2. காலைச் சாப்பாடு : இடியாப்பம்/புட்டு தோசை/ பராட்டா/ பாண்/ சோறு + சொதி + சம்பல்

3. பத்து/ பதினொரு மணி போல; கட்லட் / இறைச்சி ரொட்டி/ சமுசா +/- டீ / ப்ளேன்டி/ ஜூஸ்/

3.பகல் சாப்பாடு: ஒன்று/ இரண்டு பிங்ஙான் சோறு+ ஒரு முட்டை/ஒரு துண்டு மீன்/ ஓரிரு துண்டு இறைச்சி + கொஞ்சம் மரக்கறி

4. மாலை நேரம்: டீ/ப்ளேன்டி +/- பனிஸ்/ பிஸ்கட்/ கேக்

5. ஆறு / ஏழு மணி போல ; கிழங்கு பாபத்/ சூப் / வடை/ ரொட்டி/ சமுசா/ கஞ்சி

6. இரவுச் சாப்பாடு: சோறு/பாண்/ ரொட்டி / கொத்து/ நூடுல்ஸ்/ பராட்டா+ கொஞ்சம் ஏதாவது கறி+ ஏதாவது ஒரு பழம்

இடையிடையே கொறிப்பான் கடிப்பான் மிக்ஸர் என்று இன்னும் பல.

இப்போது உங்கள் லிஸ்டிலே உள்ள உணவுகளை காபோஹைதிரேட்(மாப்பொருள்) , ப்ரோட்டின்( புரதம்), லிப்பிட்( கொழுப்பு) , என்று பிரித்து பாருங்கள்.

உண்ணும் உணவில் 95% எதுவாக இருக்கிறது? நிச்சயமாக மாப்பொருள்

உங்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான கார்போஹைட்ரேட் எவ்வளவு? ஆனால் நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள்? இதை கொஞ்சம் சிந்தனை செய்து பார்த்திருக்கிறீர்களா?

கல்யாண வீட்டிலே சஹனில் உள்ள முட்டையை கோலெஸ்ட்ரோல் என்று ஒதுக்கிவிடும் பலரை கண்டிருக்கிறேன். தேங்காய் எண்ணெய் கொலெஸ்ட்ரோல் என்று, நெய் கொலஸ்ட்ரோல் என்று பாவிப்பதை நிறுத்திய பல குடும்பங்கள் இருக்கின்றன. ப்ரோய்லெர் கோழி கூடாது என்று பைரஹா சிக்கன் சோஸேஜ் தேடி வாங்கும் பலரை எனக்கு தெரியும். ஆனால் நாம் அதிகம் கார்போஹைட்ரேட் ( மாப்பொருள்) உட்கொள்கிறோம் என்று சோற்றை குறைவாக, பேக்கரி உணவுகளை குறைவாக, இனிப்பை குறைவாக , கிழங்கை குறைவாக, உண்ணும் யாரையும் இன்னமும் காணவில்லை.‌ அது தான் பரிதாபம்.

ஒரு நாளைக்கு நாம் உண்ணும் உணவுகளில் பின்வரும் உணவுகள் அதிகமாக இருந்தால் எப்படி இருக்கும்
மூன்று முட்டை, இரண்டு கிளாஸ் தயிர், எலுமிச்சை சாறு,இளநீர், பச்சைநிற மரக்கறி ஒரு கோப்பை,சிவப்பு நிற மரக்கறி ஒரு கோப்பை, மஞ்சள் நிறமரக்கறி ஒரு கோப்பை, ஒரு பெரிய துண்டு 1/4 கோழி, பெரிய துண்டு இறைச்சி, சீஸ், நெய் , சூப் , நான்கு ஐந்து மீன் துண்டுகள். இரண்டு லீட்டர் தண்ணீர். இவைகளை சாப்பிட்டால் குடித்தால் நாளடைவில் பசி எடுப்பது குறைந்து விடும். ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு உண்டாலே போதும் என்ற நிலை வந்து விடும். உடல் ஆரோக்கியம் பெறும்.

உண்மையில் தற்போதைய உணவு முறையில் ஒருவருக்கு ஒரு நாளைக்கு தேவையான 80 கிராம் புரதத்தை பெற்றுக் கொள்ளவதற்கு நாம் அதிகம் சிரத்தை எடுக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக புரத உணவுகள் மிகவும் விலை கூடியவையாக இருக்கின்றன. ஒரு நாளைக்கு தேவையான புரத உணவு வாங்கும் செலவுக்கு ஒரு கிழமைக்கு தேவையான அரசி மா கிழங்கு போன்ற உணவுகளை வாங்கி விடலாம். இது தான் இங்கே உள்ள மிகப்பெரும் பிரச்சினை.

சுருங்க சொன்னால், மாப்பொருள் உணவுகள் மிகவும் மலிவானவையாக இருக்கின்றன. அதிகம் உப்பையும் சீனியையும் சேர்த்தால் சுவையானவையாவையாக இருக்கின்ற ன. அதனால், உண்ண உண்ண இன்னும் இன்னும் உண்ண தூண்டும் உணவுகளாக இருக்கின்றன. கடைசியில் பசிக்காக ருசிக்காக என்று விளம்பரம் செய்யும் வியாபாரிகளுக்கு அதிகம் இலாபம் உழைத்து கொடுக்கும் பண்டமாக இருக்கின்றன. உடல் உழைப்பு இல்லாத மக்களுக்கு அதுவே அதிகம் நோய்களை கொடுக்கும் எமனாக மாறிவிடுகின்றன.

உண்மையில் மூன்று முட்டைகள் சாப்பிட்டால் ஒருநாளைக்குத் தேவையான புரதத்தின் நான்கில் ஒரு பங்கே நமக்கு கிடைக்கும். அப்படி இருக்கும்‌ போது எப்போதாவது ஒரு நாள் உண்ணும் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிடும் மடமை நமக்கு எங்கிருந்து வந்தது?

நாம் கவனமாக தேடிப் பிடித்து சாப்பிடாவிட்டால் மொத்த நாளுக்கும் தேவையான புரதத்தை ஒரு நாளும் நம்மால் அடைய முடியாது. அது போல்தான் கொழுப்பும். ஆனால் ஒருநாளைக்கான மாவுச்சத்தை ஒரே ஒரு வேளை மதிய சாப்பாட்டில் அடைந்துவிடலாம். அதன்பின்னர் சாப்பிடுவது எல்லாமே அதன் பின்னர் கொழுப்பாக உடலிலே சேமிக்கப்பட்டுவிடும். இது தான் யதார்த்தம். இது தெரியாமல் மாப்பொருள் உணவை அள்ளிக் கட்டிக் கொண்டிருக்கிறோம். திண்டு தள்ளிக் கொண்டு இருக்கின்றோம்.

ஒரு நாளைக்கு 100- 200 கிராம் மாவுச்சத்து நமக்கு போதுமானது. அதிகம் உடல் உழைப்பில் ஈடுபடுகிறவர்களுக்கே 300 கிராம் கார்போஹைட்ரேட்டே போதுமானது. ஆனால் நாம் ஒவ்வொருவரும் இப்போது கிட்டத்தட்ட 400-500g மாவுச்சத்து உணவுகளை ஒவ்வொரு நாளும் உட்கொண்டு தள்ளிக் கொண்டிருக்கிறோம். கடைசியில் முட்டை மஞ்சள் கருவுக்கும், தேங்காய் எண்ணெய்க்கும் கொலெஸ்ட்ரோல் பழியை போட்டுக் கொண்டிருக்கிறோம். என்ன டிசைனோ தெரியவில்லை

இது ஏன்? இதற்கு காரணம் என்ன?

1. அறியாமை.

2. இன்றைய நவீன பொருளாதார உலகம். மீடியாக்கள். மாபியாக்கள்.

நாளுக்கு நாள் மீன், இறைச்சி, முட்டை , மரக்கறி பால், பழங்களின் விலைகள் ஏன் எகிறிக் கொண்டே போகின்றன.? ஏழைகள் நடுத்தர மக்கள் இறைச்சி மீன் முட்டை வாங்குவதை விட ஏன் அதிகம் பரோட்டா, பிட்ஸா , சோறு, பாண் பேகர்களை நாடுகிறார்கள்?

முட்டை,நெய், தேங்காய் எண்ணெய், கோழி இறைச்சி, மாட்டிறைச்சி , ஆட்டிறைச்சி, மீன் போன்றவை நோய் என்றும் கொலஸ்ட்ரோல் என்றும் ஏன் பயம் காட்டப்படுகின்றன? .
ஆனால் கோர்ன் பிளேக்ஸ், ஓட்ஸ் , குரக்கன், சிவப்பரிசி, போன்றவை ஆரோக்கியமான உணவுகளாக சித்தரிக்கப்படுகின்றன. ஏன் என்று எப்போதாவது யோசித்தீர்களா?

பரோட்டா பிட்ஸா பேர்கர்ள் கிடைக்கும் விலைக்கு ஏன் கோழி ஆடு மாடு இறைச்சி வகைகள் கிடைக்காமல் இருக்கின்றன?

சன்பிளவர் ஒயில், வெஜிடபிள் ஒயில் என்று ஆயிரம் எண்ணை வகைகள் மார்க்கட்டில் தாராளமாக கிடைக்கும் போது நமது பசு நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவை ஏன் அரிதான பண்டங்களாக மாறிவிட்டன?

தயிர் மறைந்து ஏன்‌ யோக்கட் பிரபலமாகி இருக்கிறது. கரையல் சோறு வழக்கொழிந்து பராட்டா அந்த இடத்தை ஆக்கிரமித்திருக்கிறது.?

தண்ணீர் போத்தல்களின் விலையை விட சோடா, மற்றும் ஜூல்ஸ் போத்தல்களின் விலை ஏன்‌ குறைவாக இருக்கின்றன?

எல்லா கேள்விகளுக்கும் விடை நமது உணவுத் தட்டில் இருக்கிறது. நமது வீட்டு கிச்சன் கடையாக மாறியதில் இருக்கிறது.

உங்கள் தட்டில் என்ன உணவு உள்ளது என்று நீங்கள் கவலைப்படாமல் விட்டால் உங்களை அறியாமல் நீங்களே உங்கள் உடலை நவீன உலக சந்தைப் பொருளாதாரத்தின் கையில் கொடுத்து விட்டீர்கள் என்று அர்த்தம். அதன் பிறகு குய்யோ முறையோ என்று அழுது எந்த பயனும் இல்லை.

ஒரு காலத்தில் பஞ்சம் வந்தது. உணவு இல்லை. உலகம் முழுக்க மெலிந்த எலும்புக் கூடுகளோடு மக்கள் வாழ்ந்தார்கள். சீக்கிரம் செத்து மடிந்தார்கள். இப்போது செல்வம் கொழிக்கிறது. அபரிமிதமான கார்ப்பரேட் உணவுகள் தாராளமாக கிடைக்கின்றன. உலகம் முழுவதும் கொழுத்த மக்கள் உருவாகிறார்கள்.மெல்ல மெல்ல நோய்வாய்ப்பட்டு துன்பப்பட்டு செத்து மடிகிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.

இறுதியாக ஒரே ஒரு வித்தியாசம் Malnutrition என்றால் இதுவரை காலமும் Wasting, Stunting , underweight பற்றி படித்த டாக்டர்கள் எல்லோரும் இப்போது overweight, obesity பற்றி படித்து கொண்டிருக்கிறார்கள்.

பிற் குறிப்பு- வீடுகளுக்கு கொண்டு செல்லும் செப்புகள் சீனி பிஸ்கட் பால்மா மஸ்கட் தொதல் என்று இல்லாமல் இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? விவசாயமும் கொழிக்கும். உடலும் ஆரோக்கியம் பெறும்

11/07/2024

There are two poisons we consume daily. One is sugar and the other is salt. In Sri Lanka, people are consuming too much of sugar and salt. This causes heart attacks, diabetes, high blood pressure and cancer.
Many people think the brown sugar is better than white sugar. They are equally bad. Reducing consumption of sugar and salt is most important thing to do, not looking for brown sugar. Do not waste your money paying more for brown sugar.

நாம் தினமும் உட்கொள்ளும் இரண்டு விஷங்கள் உள்ளன. ஒன்று சீனி மற்றொன்று உப்பு. இலங்கையில், மக்கள் சீணி மற்றும் உப்பை அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால் மாரடைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் ஏற்படுகிறது.
வெள்ளை சீணியை விட Brown கலரான சீணி சிறந்தது என்று பலர் நினைக்கிறார்கள். இவை இரண்டும் சமமாக மோசமானவை தான். சீணி, உப்பு பாவனையை குறைப்பது மிக முக்கியமான விஷயம். பிரவுன் சீணிக்கு அதிக விலை கொடுத்து உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள்.

08/07/2024

Which plate has more food?
எந்த தட்டில் அதிக உணவு உள்ளது?

Both plates have same quantity of food. When you use a small sized plate, the quantity of food looks bigger and would less.
You are really eating for your mind, not for the stomach.
இரண்டு தட்டுகளிலும் ஒரே அளவு உணவே உள்ளது. நீங்கள் ஒரு சிறிய அளவிலான தட்டைப் பயன்படுத்தினால், உணவின் அளவு பெரிதாகத்தெரியும். எனவே குறைவாக சாப்பிடுவீர்கள்.

நீங்கள் உண்மையில் உங்கள் மனது நிறையத்தான் சாப்பிடுகிறீர்கள், வயிற்றுக்காக அல்ல.

What causes cancer 06/07/2024

குறைந்த மாப்பொருற்களை உட்கொள்வது மற்றும் காய்கறிகள், புரதங்கள் (மாட்டிறைச்சி, மீன், முட்டை ) மற்றும் நியாயமான அளவு கொழுப்பைச் சேர்ப்பது உங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மிக முக்கியமானதாகும். நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களுக்கும் இதுவே வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்க்கவும் (உ+ம்: பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, நீண்ட நாட்கள் வைத்திருக்க தயாரிக்கப்படும் உணவுகள் ( Long life bread உட்பட).
Processed food எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சர்க்கரை நோய், உடல் பருமன், புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து வகையான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்றன.

புற்றுநோயைத் தடுப்பது எப்படி என்பது குறித்த எனது வீடியோவை இந்த இணைப்பில் பார்க்கலாம்

https://youtu.be/8CenotlDdqs

Eating less carbohydrates and adding vegetables, proteins (Meat, including beef, fish and Egg) and reasonable amounts of fat is the most important thing to control your diabetes. This should be way of life for non-diabetics as well.
Please avoid processed food (eg: packaged food, canned food, long life food item including long life bread). They cause all sorts of problems including diabetes, obesity and cancer.

You can watch my video on how to prevent cancer on this link https://youtu.be/8CenotlDdqs

What causes cancer Dr Kamal NaserWe have discussed common causes of cancer and prevention of cancerWe have also discussed about myths circulated in social media

05/07/2024

We did a research with diabetes patients using string hoppers made with brown rice flour and white rice flour. Increase in blood glucose was not different between brown and white rice, but when we added vegetables or proteins, bloods sugars were good. When strings hoppers is consumed with Kiri Hodi (කිරි හොදි/பால் சொதி), blood sugar were very high irrespective of brown or white rice.

நாங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு சிவப்பு அரிசி மாவு மற்றும் வெள்ளை அரிசி மாவினால் செய்யப்பட்ட இடியப்பத்தை பயன்படுத்தி ஒரு ஆராய்ச்சி செய்தோம். இரத்த குளுக்கோஸின் அதிகரிப்பு சிிவப்பு மற்றும் வெள்ளை அரிசிக்கு இடையில் வேறுபாட்டை காட்டவில்லை, ஆனால் நாம் காய்கறிகள் அல்லது புரதங்களைச் சேர்த்தபோது, ​​இரத்த சர்க்கரை நன்றாக இருந்தது. பால் சொதியுடன் இடியப்பத்தை உட்கொள்ளும்போது, ​​ இரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்தது.

03/07/2024

Most Sri Lankan patients with diabetes think Kurahan (Finger Millet) would control blood sugar. But it is exactly the opposite. The graph below shows sudden increase in blood sugar to 320mg after consuming Kurahan porridge. After eating rice and curry, rise in blood sugar was not very high (about 180mg). Important message here is that when you are eating carbohydrates, please mix vegetables, proteins and fat together with carbohydrates. That will reduce the absorption of the carbohydrates and will not increase blood sugar rapidly.
(This data is from 24 hour monitoring system called Freestyle libre)

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான இலங்கை நோயாளிகள் குரக்கன் இரத்த சீணியை கட்டுப்படுத்தும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது நேர்மாறான விளைவையே தரும். குரக்கன் கஞ்சியை உட்கொண்ட பிறகு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென 320mg ஆக அதிகரிப்பதை கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது. அரிசி மற்றும் கறி சாப்பிட்ட பிறகு, இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பு மிக அதிகமாக இல்லை (சுமார் 180mg). இங்கே முக்கியமான செய்தி என்னவென்றால், நீங்கள் கார்போஹைட்ரேட் சாப்பிடும் போது, ​​தயவுசெய்து கார்போஹைட்ரேட்டுகளுடன் காய்கறிகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளை கலக்கவும். இது கார்போஹைட்ரேட்டுகளின் உறிஞ்சப்படும் வேகத்தை குறைக்கும். இதனால் இரத்த சர்க்கரை விரைவாக அதிகரிக்காது.
(இந்த தரவு Freestyle libre எனப்படும் 24 மணிநேர glucometer லிருந்து பெறப்பட்டது)

29/06/2024

This vitamin is being promoted in Sri Lanka for liver disease. Unfortunately doctors are prescribing it. There is no benefit in taking this. You will just waste your money and make your urine an expensive stuff. All what you taking will be just passing through urine. Please don't waste your money on this and various other supplements. There are also supplements promoted through Pyramid schemes which are useless and expensive.

ஈரல் நோய்க்காக இந்த வைட்டமின் இலங்கையில் ஊக்குவிக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, மருத்துவர்கள் அதை பரிந்துரைக்கின்றனர். இதை எடுத்துக்கொள்வதால் எந்த பலனும் இல்லை. நீங்கள் உங்கள் பணத்தை வீணடிப்பீர்கள் மற்றும் உங்கள் சிறுநீரை விலையுயர்ந்த பொருளாக மாற்றுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்தும் சிறுநீர் வழியாக தான் செல்லும். தயவு செய்து உங்கள் பணத்தை இந்த மற்றும் பல்வேறு சப்ளிமெண்ட்டுகளுக்காக வீணாக்காதீர்கள். இனறு பல்வேறுபட்ட சப்லிமெணட்டுகள் பிரமிட் திட்டங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுகிண்றன. இவை எந்த விதமான பலனும் அற்றவை. இவை மிகவும் விலை உயர்ந்தவை. தயவு செய்து உங்கள து பணத்தை வீணாக்க வேண்டாம்.

13/06/2024

Cardiopulmonary resuscitation
திடீரென இருதயம் செயழிலந்தால் என்ன செய்ய வேண்டும்?

21/05/2024

Severe airturbulance experienced on flightfromLondontoSingapore. One person dead, 6 seriously injured and 60 admitted. Please listen carefully. Important messages for people flying

Cardiopulmonary resuscitation CPR 31/03/2024

CPR - CARDIOPULMONARY RESUSCITATION
இருதயம் திடீரென நின்று விட்டால் என்ன செய்ய வேண்டும்?

Cardiopulmonary resuscitation CPR Cardiopulmonary resuscitation CPR

31/03/2024

நோன்பிற்கு தேவை உணவா? பயிற்சியா?

Dr PM Arshath Ahamed MBBS MD PAED

உங்களிடம் ஒரு கார் இருக்கிறது. அது பெற்றோலில் ஓடும். தேங்காய் நெய்யிலும் ஓடும். பெற்றோல் விலை குறைவு. கிடைப்பதும் இலகு. அப்படியென்றால் பெற்றோலில் தான் அந்த கார் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். பெற்றோல் இல்லாத போது , விலை அதிகரிக்கின்ற போது மாத்திரமே, எப்போதாவது ஒரு நாள் அந்தக் கார் தேங்காய் நெய்யில் ஓடும்.

சார் ஆட்சிக்கு வந்து, ஓரிரு வருடங்களுக்கே பெற்றோலுக்கு கடும் தட்டுப்பாடு. போலின். அப்போது தான் உங்கள் கார் தேங்காய் நெய்யில் ஓடுவது ஞாபகம் வருகிறது. சரி தேங்காய் நெய்யை ஊற்றி நமது காரை ஓடலாம், அப்பாடா நமக்கு கவலை இல்லை என்று தேங்காய் நெய்யை வாங்க கடைக்கு போனால் கடைகளில் தேங்காய் நெய் என்று ஒரு சாமானை இல்லை. உருக்கெண்ணெய் இருக்கிறது, நல்லெண்ணெய் இருக்கிறது , தேங்காய் எண்ணெய் இருக்கிறது, பசு நெய் இருக்கிறது ஆனா எங்க தேடியும் தேங்காய் நெய் இல்லை. இனி எப்படி ஜாமீன் வாங்குவது. என்ன இழவுடா இது என்று உங்கள் பாசுனைக்கு கோல் எடுத்த போதுதான் விஷயம் புரியவருகிறது.

பெற்றோலில் ஓடுகின்ற காலத்தில் அடிக்கடி காரை ரிசர்வ் ற்கு கொண்டு வர வேண்டும். ஒரு கிழமைக்கு ஓரிரு தரமாவது இப்படி செய்ய வேண்டும். ஒரு போதும் புள் டாங் அடித்திருக்க கூடாது. அப்படி செய்தால் தான் தேங்காய் நெய் காரிலே தானாக உருவாகும். அதை தான் பின்னர் பெற்றோல் இல்லாத காலங்களில் பாவிக்கலாம். அப்படி உருவாகும் தேங்காய் நெய்யை அடிக்கடி பாவித்தால் கார் இலகுவில் பழுதடையாது. நல்ல பிக் அப் கிடைக்கும். அடிக்கடி பார்ட்ஸ் மாற்ற வேண்டிய தேவையும் வராது. மெயின்டனன்ஸ் செலவும் குறைவு. தேங்காய் நெய்யில் காரை ஓட்ட பழக்கினால், அடிக்கடி பெற்றோல் அடிக்காமலே, நீண்ட தூரம் எந்த பிரச்சனையும் இல்லாமல் காரை ஓட்டி செல்லலாம் என்று ஏகப்பட்ட நன்மைகள் அப்போது தான் தெரிய வருகிறது. அடடா இது தெரியாமல் இவ்வளவு நாளும் புள் டாங் அடித்து காரை ஓட்டி இருக்கிறேனே என்று இப்போது கைசேதப்பட்டு பிரயோசனம் இல்லை. கார் வாங்கிய போது மெனுவலை வாசித்திருக்க வேண்டும்.

இது தான் நம் நிலை. கடைசியில் கைசேதம். இப்போது அந்த காரை - உங்கள் உடம்புக்கும் (Body), பெற்றோலை -குளுக்கோஸுக்கும்( Glucose) , தேங்காய் நெய்யை -கீட்டோனுக்கும் (Ketone) மாற்றி விட்டால் சரி. நாமும் இவ்வளவு காலமும் இது தெரியாமல் அடிக்கடி பெற்றோல் அடித்திருக்கிறோம் என்பது தெரிய வரும்.

குளுகோஸ் உற்பத்திக்கு கார்போஹைட்ரேட் தேவை. கீட்டோன் உற்பத்திக்கு கொழுப்பு தேவை. கார்போஹைட்ரேட் ‌தேவை என்றால் மாப்பொருள் உணவுகள் உண்ண வேண்டும் . ஆனால் கீட்டோன் தேவை என்றால் எதையும் உண்ண வேண்டியதில்லை. அவ்வளவு கொழுப்பும் ஏற்கனவே தின்று பெருத்த நமது உடம்பிலே இருக்கிறது. வேறு எங்கும் போக வேண்டியதில்லை. இது தான் அடிப்படை.

கைத்தொழில் புரட்சி ஏற்படுதற்கு முதல் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பருவமும் பஞ்சம் வரும். பட்டினி வரும். மனிதர்கள் உண்ண உணவின்றி கஷ்டப்படுவார்கள். அப்போது அவர்கள் தப்பி பிழைத்து உயிர் வாழ காரணமாக அமைந்தது தான் இந்த கீட்டோன்கள். அதே கீட்டோன்கள் நமது உடலிலும் உண்டு ஆனால் பாவிக்கப்படாமலே. அவைகளை பாவிக்க உகந்த காலம் தான் எதிர்வரும் ரமழான்.

எதிர் வருகின்ற புனித ரமழான் உங்கள் உடம்பை கீட்டோனில் இயக்கவைக்க வருகின்ற ஒரு பயிற்சி பட்டறை. இவ்வளவு காலமும் பெற்றோலில் ( குளுக்கோஸில்) ஓடிய உடம்பை இனி ஒரு மாத காலம் கீட்டோனில் ஓட வைக்க வருகின்ற ஒரு புனித காலம். கீட்டோனில் ஓடுகின்ற உடம்பு அடிக்கடி பழுதடையாது. தானாகவே புள் சேர்விஸ் பண்ணிக்கொள்ளும். மெயின்டனன்ஸ் பிரீ. இவ்வளவு நன்மைகளும் வந்து சேர நீங்கள் உங்கள் வாயையும், வயிற்றையும் கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த கீட்டோன் வேண்டும் என்றால் பசித்திருக்க வேண்டும். புள் டேங் கூடவே கூடாது. எப்போதும் அரை வயிறு மட்டும் சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக சுப்பர் பெட்ரோல் கூடவே கூடாது. சீனி , இனிப்பு பண்டங்கள் , பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இப்படி குறைவாக உணவுப் பதார்த்தங்களை உட் கொண்டால் மாத்திரமே, உடம்பில் ஸ்டோரில் உள்ள கீட்டோனின் பலனை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம். இதை தான் இன்டர்மிட்டன்ட் பாஸ்டிங்( intermittent fasting) என்று சொல்வார்கள்.

இந்த நோன்பு மனித வரலாறு தொடங்கிய காலம் முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் இருந்து வருகிறது. வடிவங்கள் மாறினாலும் அதன் பயனும் நோக்கமும் ஒன்றாகவே இருந்து வருகிறது. உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்படுகிறது என்று அல்குர்ஆனும் இதையே குறிப்பிடுகிறது.

நோன்பின் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் பற்பல. ஆனால் அவைகளை அடைத்து கொள்ள நாம் பசித்திருக்க வேண்டும். தாகித்திருக்க வேண்டும். அதுபோல அதன் ஆண்மீக பயன்களும் பற்பல. அதை அடைந்து கொள்வதற்கு நாம் முத்தகீன்களாக மாற வேண்டும். மொத்தமாக இந்த பொருள் தேடல் உலகிலிருந்து ( Consumerism) கொஞ்சம் விடுதலை பெற வேண்டும்.

நோன்பின் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் என்று பெரும் பட்டியலே இருக்கிறது. ஆனால் அதை பெற்றுக் கொள்ள அதற்கு உரிய முறையில் நாம் நோன்பு நோற்க வேண்டும். அப்போது தான் கீட்டோன் கிடைக்கும். இல்லையென்றால் வழமை போல் குளுக்கோஸ் தான். பெற்றோல் போட வேண்டும்.

ஒரு உதாரணத்திற்கு பின்வரும் அட்டவணை போல உங்கள் நோன்பு நாட்கள் அமைந்தால் உங்கள் உடல் கீட்டோனில் இயங்க தொடங்கும். க்ளுகோஸ் தேவை குறைவடையும். தேவையில்லாத கொழுப்பு எரிக்கப்படும்.

சஹர்- கொஞ்சம் சோறு( மூன்று அகப்பை) ஒரு துண்டு இறைச்சி/ மீன்/ ஒரு முட்டையுடன் ) கொஞ்சம் மரக்கறி. கூடவே ஒரு சில ஈச்சம் பழங்கள் அல்லது ஒரு வாழைப்பழம். ஒரு கிளாஸ் பால்/ தயிர் அன்ட் அரை லிட்டர் தண்ணீர். அல்லது ஒரு துண்டு சீஸ்+ மூன்று பிஸ்கட்+ ஒரு கிளாஸ் பால்+ மூன்று ஈச்சம் பழங்கள் + அரை லிட்டர் தண்ணீர் ( எனது ஃபேவரிட் மெனு)

இப்தார்- ஒரு சில ஈச்சம் பழங்கள் தண்ணீர் அரை லீட்டர். ஒரு கோப்பை கஞ்சி. கூடவே கடித்துக் கொள்ள ஒரே ஒரு சமுசா/ ஒரு கட்லட். (அதையும் தவிர்த்தால் நன்று)

மஃரிப் தொழுகைக்கு பின்னர் ஒரு கப் கோப்பி / ஒரு கப் தேனீர் கொஞ்சம் நறுக்கிய பழங்கள். இடையிடையே கொஞ்சம் தண்ணீர்.

தறாவீஹ் தொழுகைக்கு பின்னர் மூன்று இடியாப்பம்/ ஒரு துண்டு பிட்டு/ இரண்டு ரொட்டி+ மரக்ககறி + மீன் / முட்டை கூடவே ஒரு கிளாஸ் பிரஸ் ஜுஸ். ஒருகிளாஸ் தண்ணீர்.

அவ்வளவு தான் ஒரு நாளைய சாப்பாடு. பள்ளிவாசலுக்கு இயலுமானவரை நடந்து போவது. நடந்து வருவது. கியாமுல் லைலில் நீண்ட நேரம் நின்று வணங்குவது. இது போதுமான எக்ஷஸைர்ஸ்.

இப்படி சாப்பிட்டு நோன்பு நோற்று பாருங்கள். நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள். உங்கள் உடம்பும் ஒரு மாத காலம் கீட்டோனுக்கு மாறி விடும்.

Want your business to be the top-listed Health & Beauty Business in Sheffield?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Cardiopulmonary resuscitation திடீரென இருதயம் செயழிலந்தால் என்ன செய்ய வேண்டும்?
Severe airturbulance experienced on flightfromLondontoSingapore. One person dead, 6 seriously injured and 60 admitted. P...
நோன்பு நோற்கும் காலத்தில் எமது உணவு எவ்வாறு அமைய வேண்டும் ?Healthy diet in Ramadhan
ரமழான் மாதத்தில் நோன்பு பிடிக்க முடியாதவர்கள் யார்?
நோன்பு காலத்தில் உடற்பயிற்சி Exercise during Ramadhan
நோன்பு காலத்தில் ஏற்படும் கெஸ்ட்ரைட்டிஸ் (Gastritis)
நோன்பு காலத்தில் ஏற்படும் மிக்ரேன் தலைவலி
நோன்பு காலத்தில் நீரிழிவு நோயாளிகளின் சாப்பாட்டு முறைகள்
How to adjust insulin during Ramadhan

Website

Address

Sheffield
S72ET

Other Health & Wellness Websites in Sheffield (show all)
Sue Atkinson Aesthetics Clinic Sue Atkinson Aesthetics Clinic
46 West Street
Sheffield, S201EP

Sue Atkinson sheffield Clinic ❤️ Helping our Clients to look and feel their most confident

Nutrition Mind Fitness Nutrition Mind Fitness
227 MeadowHead
Sheffield

I help you get the body and mind, health and fitness results you want without getting overwhelmed by

My Zen Escape My Zen Escape
Spinkhill Road
Sheffield, S138FF

My Zen Escape is a safe space, where you can find some positivity, inspiration, and serenity, and wh

Nurtured Mind Nurtured Mind
6 Kingsley Park Grove
Sheffield, S119HL

Welcome-I provide Clinical Hypnotherapy to get you to a place of happiness.

Yoga My Life Yoga My Life
Sheffield

Natural, Vegan & Cruelty Free Skincare. Holistic Lifestyle. 5.Min.Yoga. Live, Look and Feel the Very Best Version of Yourself

Fiona’s Healthy Lifestyle Fiona’s Healthy Lifestyle
Sheffield

Since so many people have asked for tips about how I lost my weight and changed to a healthy lifestyle, I thought I’d start sharing my top tips and recipes for those interested.

De Hood Recovery Support Group De Hood Recovery Support Group
Queen Mary Road
Sheffield, S21EE

Brilliant support group - none judgemental, friendly and easy to access - Meetings held every Thursday at 4.30pm

Adapt & Flow - Yoga & Qigong Adapt & Flow - Yoga & Qigong
Sheffield

Seated Qigong Flow classes using the YOQI method & 6 phases of Qi Flow. All welcome! 🌊🌿🔥🌎⚔️

Pilates and Wellness by Rebecca Anne Pilates and Wellness by Rebecca Anne
Sheffield, S35

Pilates and mindfulness teacher. Wellness mentor. Helping you move more and feel happier.

My Cancer Journal My Cancer Journal
Sheffield

I do not want sympathy I just want to raise awareness to men of Prostate Cancer

Kind Yoga Kind Yoga
74th Oak Street Scout Hut, Canterbury Road, Meersbrook
Sheffield, S89QS

A therapeutic style of yoga where we learn to listen to our bodies and respond

Eden Source Eden Source
Dunston Road
Sheffield, S419QD

High quality products to promote your wellness journey and experiences.