Akkaraipattu Base Hospital
Base Hospital Akkaraipattu is situated in the midpoint of South Eastern Costal region between Pottuvil and Kalmunai
2021.11.01 (திங்கள்) முதல் அனைத்து கிளினிக்களும்
வழமை போன்று நடைபெறும்!
Be Positive.
இலங்கை முழுவதும் வைத்தியசாலைகளில் பெரும் குருதித் தட்டுப்பாடு நிலவுகிறது. கொவிட் லொக்டவுன், ஒழுங்கமைக்கப்பட்ட இரத்த தான முகாம்கள் நடைபெறாமை போன்றன இதற்கான முக்கிய காரணங்கள்.
உங்கள் உதிரம் மூலம் இன்னும் ஒரு உயிர் பயன் ஒன்றை பெற்றுக்கொள்வதை நீங்கள் ஆசித்தால் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.
உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள வைத்தியசாலையின் இரத்த வங்கி ஒன்றுக்கு காலை 8மணி முதல் மாலை 4 மணி வரையான காலப்பகுதியில் விஜயம் ஒன்றை செய்யுங்கள். மிகுதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அன்டிஜன் , PCR எதுவும் தேவை இல்லை.
உதிரம் கொடுப்போம் மனிதம் காப்போம்.
நோன்பு காலங்களில் நோயாளர்களைப் பார்வையிடவருகின்ற பொதுமக்கள் மாலைவேளையில் தங்களுடைய இப்தார் மற்றும் ஏனைய கலாச்சார நடவடிக்கைகளை நடைமுறைப்படுதுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கவனத்திற்கொண்டு மாலை வேளையில் நோயாளர்களை பார்வையிடுவதற்காக வருகின்ற நோயாளர்களின் உறவினர்களை வைத்தியசாலையினுள் அனுமதிக்கின்ற நேர அட்டவணை பின்வருமாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிற்பகல் 04:30 இலிருந்து 05:30 வரை
ஆகையால் தங்களது விடுதிகளில் தங்கியிருக்கும் நோயாளர்கள் மற்று அவர்களுடன் இருப்பவர்களிடம் இத்தகவலைத்தெரியப்படுத்துவதன் மூலம் இச்செயன்முறையினை ஒழுங்குற நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நன்றி
Dr. S.F. Mafrooha
தர முகாமைத்துவப் பிரிவு
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை
'Doctors Room' was opened ceremonially on 5th of April 2021 by MS. Dr. IM Javahir & GMOA BU President Dr. Fareed (VP) with all other Doctors' participation.
மக்களின் ஆரோக்கிய வாழ்வை இலக்காக கொண்டு இயங்கும் அக்கரைப் பற்று ஆதார வைத்தியசாலை உலக சுகாதார தினைத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள ஆரோக்கிய வாழ்விற்கான ஆகாரத் திருவிழா.....
நீங்கள் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை எதை உண்ண வேண்டும்
எவ்வாறு உண்ண வேண்டும்
என்பதை விளக்கும் கண்காட்சி...
Managing SVT in ABH
Great job 👌
Another success story of Paediatric team of ABH
CSR PROJECT started successfully
மூன்று தடுப்பூசிகளின் கதை.
தடுப்பூசிகளைப் பற்றி பரவலாக பேசப்படும் இக்காலத்தில் எங்கள் வாசகர்களுடன் தடுப்பூசிகளைப் பற்றிய விரிவாக கலந்துரையாடல் செய்வது உசிதம் எனக் கருதுகிறோம். இலகு நடையில் கூறுவதாயின், தடுப்பூசியானது செயற் படுவது குறித்த நோயை எதிர்த்துப் போராட எம் உடலிலுள்ள இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கித் தருவதேயாகும்.
எதிர்காலத்தில் வெளியிட எதிர்பார்க்கும் தொடர் கடிதங்களின் தொடக்கமாக, உலக வரலாற்றை தலைகீழாக மாற்றிய மூன்று தடுப்பூசிகளைப் பற்றி இன்று நாம் பேசுகிறோம்.
1. பெரியம்மை Smallpox
பெரியம்மை என்பது நாம் அனைவரும் கேள்விப்பட்ட ஆனால் அதிர்ஷ்டவசமாக நம் பலரும் கண்ணால் காணாத
ஒரு நோயாகும்.
எகிப்திய யுகத்திலிருந்தே இருந்ததாகக் கருதப்படும் இந்த நோய் மிகவும் கொடியது, இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவர் இறப்பைத் தழுவுவார். 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் இந்த நோய் 300 மில்லியன் உயிர்களைக் காவு கொண்டது. உயிர் தப்பியவர்களில் பலர் குருட்டுத்தன்மை போன்ற கடுமையான விளைவுகளை சந்தித்தனர்.
1960 களில், இந்த நோயால் ஆண்டுக்கு சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இறப்பர் என்று மதிப்பிடப்பட்டது. இந்த நேரத்தில்தான் உலக சுகாதார நிறுவனம் (WHO) உலகளாவிய ரீதியில் பெரியம்மை நோய்க்கெதிரான தடுப்பூசி வழங்கல் விசேட திட்டத்தை தொடங்கியது. மிக வெற்றிகரமான இத்திட்டத்தின் விளைவாக1980 களில் இந்த நோயை உலகத்திலிருந்து முற்றாக அகற்ற மக்களால் இயலுமானது.
இவ் வெற்றியைப் பற்றிக் கூறுவதாயின், இன்று இந்த நோய் உலகில் இருந்து முற்றிலுமாக அகற்றப்பட்ட ஒரு கட்டத்தை எட்டியுள்ளதுடன், மேலும் தடுப்பூசிகள் வழங்கத் தேவையில்லை எனும் நிலையை எட்டியுள்ளமை உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்த பெரு வெற்றியாகும்.
இக் காரணத்தினாலேயே, இன்று பலர் தங்கள் கண்களால் இந்த நோயைப் பார்க்காத அதிர்ஷ்டசாலிகளாயுள்ளனர்.
2. போலியோ Polio
போலியோ இதைவிட சற்று வித்தியாசமான கதை. இவ் வைரஸால் பாதிக்கப்பட்ட எழுபது சதவீத மக்கள் எந்த அறிகுறிகளையும் காட்டமாட்டார்கள். காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி போன்ற பொதுவான சாதாரண அறிகுறிகளை சுமார் 25% பேர் காட்டுகிறார்கள். இருப்பினும், 200 பேரில் ஒருவருக்கு பக்கவாதம் (Paralisis) என்ற நிலை உருவாகிறது. இந்த நிலையில் பாதிக்கப்படுபவர்களில் கணிசமானோர் இறந்து விடுகிறார்கள், சிலர் முழுமையாக குணமடைகிறார்கள். மற்றொரு தொகுதியினர் உடற்பகுதி பாதிக்கப்பட்டு அங்கவீனராகின்றனர். இந்நோயால் பாதிப்பிற்குள்ளாகும் குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த குறைபாடுகளுடன் வாழ வேண்டியிருப்பதை பரவலாக காணுவதென்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவமாகும்.
இது முழு உலகிலும் மட்டுமன்றி இலங்கையிலும் சில காலத்திற்கு முன் காணப்பட்ட அரிதற்ற ஒரு நோயாகும். ஆனால் உலகம் முழுவதும் போலியோ தடுப்பூசி வழங்கப்படுவதால், பல நாடுகளில் போலியோ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றுவரை வெற்றிகரமாக தடுப்பூசி வழங்கப்படுவதால் 1993 ஆம் ஆண்டில் இலங்கையில் போலியோவின் கடைசி அறிக்கை பதிவாகியுள்ளது. இன்று நம் குழந்தைகள் போலியோ இல்லாத சூழலில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். பேரழிவுப் போரின் விளைவின் பிரதிபலிப்பைப் போல போலியோ நோயால் பாதிக்கப்பட்டு தற்போதும் முதியோராகி நடமாடும் மக்களையும் இப்பேரழிவு தரும் நோயை ஒழிக்க உழைத்த அனைவரையும் அவ்வப்போது சமூகத்தில் சந்திக்கிறோம்.
போலியோ ஒழிப்புக் கதையின் வித்தியாசம் இதோ. போலியோ நோய் இன்னும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டுமே பதிவாகியுள்ளது. இது உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பூசி போடுவது குறித்த பரவலான தவறான எண்ணங்கள் மற்றும் போர் காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாடுகளில் இந்த வைரஸ் இன்னும் பரவலாக இருந்தாலும், நோய் மீண்டும் உலகெங்கிலும் பரவும் ஆபத்து இன்னும் உள்ளது. எனவே, இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள நாடுகள் இந்த நோய்த்தடுப்பு திட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
3. சின்னமுத்து Measles
இதை மிகவும் எளிமையான நோய் என்று ஒருவர் நினைக்கக் கூடும். இன்று உலகில் மருத்துவ முன்னேற்றங்கள் காரணமாக சில வளர்ந்த நாடுகளில் அம்மை நோய்ல இறப்பு விகிதம் 0.3 சதவீத்த்திலும் குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.
தடுப்பூசி மூலம் நோய் பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதன் மூலம், இந்த நாடுகளில் சிலர் நீண்ட காலமாக நோயின் தீவிரத்தை படிப்படியாக மறந்துவிட்டனர். சமூக ஊடக இணையத் தளங்களின் விரைவான பெருக்கத்தோடு, இந்த வளர்ந்த நாடுகளில் தடுப்பூசிகளைப் பற்றிய தவறான எண்ணங்களும், தடுப்பூசிகளுக்குப் பதிலாக வழங்கக்கூடிய பல்வேறு தவறான கருத்துக்களும் தடுப்பூசிகளுக்கெதிரான மாற்றீடுகளும் இக்காலத்தில்தான் வேகமாகப் பரவின.
2012 முதல், இந்த நாடுகளில் சிலரின் தவறான எண்ணங்கள் மற்றும் நோயின் தீவிரத்தன்மையை மறுதலிப்புக் காரணமாக தடுப்பூசியை நிராகரிக்கும் போக்கு இருந்தது.
துரதிர்ஷ்டவசமான விடயம் என்னவெனில், தொடர்ச்சியான தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தப்பட்ட இந்நோய் 2018 முதல் இந்த நாடுகளில் விரைவாக அதிகரித்து வருகின்றது. 2018 ஆம் ஆண்டில் மட்டும், இந் நோயால் இழந்த உயிர்களின் எண்ணிக்கை 140,000 ஆகும்.
,,,,,,,
இலங்கையர் நாம் இந்த விடயத்தில் மற்ற நாடுகளிலிருந்தும் மிகவும் வேறுபட்டவர்கள். வளரும் நாடாக இருந்த போதிலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச தடுப்பூசிகள் வழங்கல் காரணமாக உலகின் முன்னணி நோய்த்தடுப்பு திட்டங்களில் ஒன்று எங்கள் வசம் உள்ளது.
எமது வெற்றிகரமான நோய்த்தடுப்புத் திட்டத்தின் காரணமாக, இன்று உலகின் பல பகுதிகளில் போலியோ, சின்னமுத்து மற்றும் ரூபெல்லா போன்ற சில நோய்கள் காணப்பட்டாலும் இலங்கையில் நாம் இவற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளோம். இலங்கையின் புத்திஜீவிகளான மக்களே நாட்டில் இந்நோய்களின் வெற்றிகரமான கட்டுப்பாட்டிற்கும் அதன் தொடர்ச்சியான நிலைக்கும் ஒரு முக்கிய காரணியாவர்.
வளர்ந்த நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகள் கூட
தவறான மற்றும் வதந்திகள் காரணமாக பல்வேறு வைரஸ்கள் மீண்டும் மீண்டும் தோன்றி அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், இப்பாராட்டுகளானது இன்று இலவச சுகாதார சேவையின் கீழ் இலவச நோய்த்தடுப்பு திட்டத்தை முன்னெடுக்க உறுதிபூண்டுள்ள அரசாங்கம், எப்போதும் போலவே, அந்த நோய்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்தும் பணியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் சுகாதார ஊழியர்கள் மட்டுமல்ல, அந்த திட்டங்களை உற்சாகமாக ஆதரவளித்து ஒத்துழைப்பு நல்கும் நம் நாட்டின் புத்திசாலி மக்களும் அதற்கு தகுதியானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
நீரிழிவு (சீனி) ,இருதய நோய், உயர் குருதி அமுக்கம் (பிரசர்) , சிறுநீரக நோய் போன்ற தொற்றா நாட்பட்ட நோய் உள்ளவர்கள் எவ்வாறு நடந்து கொண்டால் கொரோனா தொற்றிலிருந்து தம்மை காத்துக் கொள்ளலாம்
How to prevent and control Covid 19 among NCD patients
and the important of prevention of covid 19 in this group of people
மலரும் புத்தாண்டு மனமகிழ்வையும் ஆரோக்கியத்தையும் சாந்தி சமாதானத்தையும் சுபீட்சத்தையும் தரும் ஆண்டாக அனைவருக்கும் அமையட்டும்
Corona Vs NCDs ( non Communicable diseases)
கொரோனவும் தொற்றா நோய்களும்.
இலங்கையில் Covid 19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 31000 தை தாண்டியுள்ளது. இந்த covid 19 தொற்று ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 146. (Update 11 Dec 2020 8 15 pm ). இன்றைய நிலையில் இலங்கையில் இந்த corona தாக்கத்தினால் ஏற்பட்ட மரண வீதம் 0.46%. அதாவது 99.54% கொரோனா தொற்றாளர்கள் முற்றாக குணமடைகிறார்கள். உலகளாவிய ரீதியில் , இலங்கையில் கூட கொரோனா நோயை குணப்படுத்த கூடிய எந்த ஒரு மருந்தும் இன்று வரை கண்டுபிடிக்கப்பட வில்லை.
அப்படி என்றால் இலங்கையில் 99.54% % மானவர்கள் எவ்வாறு குணமடைகின்றார்கள்? கொரோனா தொற்றுக்கு உள்ளன நபர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு , கைகளை அடிக்கடி கழுவுதல், போதிய அளவு நீர் ஆகாரம் எடுத்தல், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க செய்யும் உணவுகளை உட்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த வேளையில் உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்புசக்தியும் கோவிட் 19 வைரசுக்கு எதிரான antibodies ( நோய் எதிர்பபுசக்தி) யை உருவாக்கி கொள்ளுவதால் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் குணமடைகிறார்.
அப்படியானால் ஏன் மற்றவர்கள் மரணமடைகின்றார்கள்?
இந்த மரணமடைந்த 146 நபர்களின் கொரோனா தொற்றுக்கு முன்னரான நோய் நிலைமைகளை ( pre morbid conditions) பார்போமையானால், அதிகமானோர் ( 96 %) நாட்பட்ட தொற்றா நோய் உடையவர்களாக இருந்துள்ளார்கள் ( Chronic Non Communicable Diseases).
உதாரணமாக , சீனி நோய் , பிரஸர், இருதய நோய்கள், சிறுநீரக நோய்கள் , ஈரல் நோய்கள், புற்றுநோய்கள் உள்ளவர்களாக இருந்துள்ளார்கள். இந்த நோய்கள் இருப்பவர்களுக்கு கொரோனா வந்தால் அவர்கள் மரணிப்பர்கள் என்பதல்ல , மாறாக இவ்வாறான நோய்கள் உள்ளவர்கள் தங்களது தொற்றா நோய்கள் பற்றி கவனம் எடுக்காது, உரிய மருந்துகளை பாவித்து நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காவிட்டால், இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் போது அது தனது வீரியத்தின் மூலம் நீமோனியா , ஏனைய அவயவங்களின் செயற்பாடுகளையும் பாதித்து மரணத்தை ஏற்படுத்தலாம்.
சிக்கல் இல்லாத இருதய நோயாளர்கள் ( stable heart disease) உள்ள சில நபர்கள் , தனிமை படுத்தலில் அல்லது சிகிச்சை நிலையங்களில் உள்ளபோது சடுதியாக மரணித்த சில செய்திகளை அண்மைக்காலங்களில் அவதானிக்க கூடியதாக இருந்தது. இது கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டதே என்ற பயத்தினால் ஏற்பட்ட மனஅழுத்தம், அதிக குருதி அமுக்கம், ஹார்மோன் மாற்றம் ( catacholamine surge) என்பவற்றில் ஏற்பட்ட சடுதியான மாரடைப்பு ஆகும்.
இவற்றை தவிர பூரண சுகதேகியான வர்களுக்கும் கூட கொரோனா தொற்றினால் மரணம் ஏட்படலாம். இது எவ்வாறு என்று சொன்னால், covid virus க்கு எதிராக நமது உடம்பில் உருவாகும் நோய் எதிர்ப்புசக்தியிள் உள்ள இரசாயன பதார்தங்களின் சிக்கல்கள் காரணமாக உடம்பிலுள்ள இரத்த குழாய்களில் ஆசாதாரான குருதி உறைதல் ஏற்படும். இந்த குருதி உறைதல் பொதுவாக நுரைஈரலில் யுள்ள இரத்தக்குழாய்களில் ஏற்படுகின்றது... இந்த நிலைமை சில மருந்துகள் மூலமும், செயற்கை சுவாசம் வழங்குவதன் மூலமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில வேளை இந்த இரத்த ஊரைதல் அதிகமாக இருந்தால் சிகிச்சை பலனளிக்காது.
ஆகவே இங்கு அதிகமான covid மரணங்கள் தொற்றா நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத போதே நிகழ்ந்துள்ளது...
ஆகவே இந்த covid தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் எனில் சுகாதார பழக்க வழக்கங்களை பேணி நடப்பதோடு, தொற்றா நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
Dr. எஸ்.அஹமட் பரீட்
MBBS, MD
உடற்கூற்று வைத்திய நிபுணர்
அக்கரைப்பற்று ஆதார வைத்திசாலை.
PCR
Rapid Antigen பரிசோதனைகள் பற்றிய உண்மையான நிலைப்பாடு என்ன
விளக்குகிறார் வைத்திய நிபுணர்
Dr Arshath Ahamed அவர்கள்.
கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் மனிதனுக்கு என்ன நடக்கும்? COVID 19 Virus எப்படி நமது உடற்கலங்களை; நமது சுவாசத்தொகுதியை, சுற்றோட்டத்தை, மூளையை பாதிக்கிறது என்பதை எளிமையாக விளக்கும் ஒரு காணொளி.
Corona Vs NCDs ( non Communicable diseases)
கொரோனவும் தொற்றா நோய்களும்.
இலங்கையில் Covid 19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 31000 தை தாண்டியுள்ளது. இந்த covid 19 தொற்று ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 146. (Update 11 Dec 2020 8 15 pm ). இன்றைய நிலையில் இலங்கையில் இந்த corona தாக்கத்தினால் ஏற்பட்ட மரண வீதம் 0.46%. அதாவது 99.54% கொரோனா தொற்றாளர்கள் முற்றாக குணமடைகிறார்கள். உலகளாவிய ரீதியில் , இலங்கையில் கூட கொரோனா நோயை குணப்படுத்த கூடிய எந்த ஒரு மருந்தும் இன்று வரை கண்டுபிடிக்கப்பட வில்லை.
அப்படி என்றால் இலங்கையில் 99.54% % மானவர்கள் எவ்வாறு குணமடைகின்றார்கள்? கொரோனா தொற்றுக்கு உள்ளன நபர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு , கைகளை அடிக்கடி கழுவுதல், போதிய அளவு நீர் ஆகாரம் எடுத்தல், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க செய்யும் உணவுகளை உட்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த வேளையில் உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்புசக்தியும் கோவிட் 19 வைரசுக்கு எதிரான antibodies ( நோய் எதிர்பபுசக்தி) யை உருவாக்கி கொள்ளுவதால் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் குணமடைகிறார்.
அப்படியானால் ஏன் மற்றவர்கள் மரணமடைகின்றார்கள்?
இந்த மரணமடைந்த 146 நபர்களின் கொரோனா தொற்றுக்கு முன்னரான நோய் நிலைமைகளை ( pre morbid conditions) பார்போமையானால், அதிகமானோர் ( 96 %) நாட்பட்ட தொற்றா நோய் உடையவர்களாக இருந்துள்ளார்கள் ( Chronic Non Communicable Diseases).
உதாரணமாக , சீனி நோய் , பிரஸர், இருதய நோய்கள், சிறுநீரக நோய்கள் , ஈரல் நோய்கள், புற்றுநோய்கள் உள்ளவர்களாக இருந்துள்ளார்கள். இந்த நோய்கள் இருப்பவர்களுக்கு கொரோனா வந்தால் அவர்கள் மரணிப்பர்கள் என்பதல்ல , மாறாக இவ்வாறான நோய்கள் உள்ளவர்கள் தங்களது தொற்றா நோய்கள் பற்றி கவனம் எடுக்காது, உரிய மருந்துகளை பாவித்து நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காவிட்டால், இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் போது அது தனது வீரியத்தின் மூலம் நீமோனியா , ஏனைய அவயவங்களின் செயற்பாடுகளையும் பாதித்து மரணத்தை ஏற்படுத்தலாம்.
சிக்கல் இல்லாத இருதய நோயாளர்கள் ( stable heart disease) உள்ள சில நபர்கள் , தனிமை படுத்தலில் அல்லது சிகிச்சை நிலையங்களில் உள்ளபோது சடுதியாக மரணித்த சில செய்திகளை அண்மைக்காலங்களில் அவதானிக்க கூடியதாக இருந்தது. இது கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டதே என்ற பயத்தினால் ஏற்பட்ட மனஅழுத்தம், அதிக குருதி அமுக்கம், ஹார்மோன் மாற்றம் ( catacholamine surge) என்பவற்றில் ஏற்பட்ட சடுதியான மாரடைப்பு ஆகும்.
இவற்றை தவிர பூரண சுகதேகியான வர்களுக்கும் கூட கொரோனா தொற்றினால் மரணம் ஏட்படலாம். இது எவ்வாறு என்று சொன்னால், covid virus க்கு எதிராக நமது உடம்பில் உருவாகும் நோய் எதிர்ப்புசக்தியிள் உள்ள இரசாயன பதார்தங்களின் சிக்கல்கள் காரணமாக உடம்பிலுள்ள இரத்த குழாய்களில் ஆசாதாரான குருதி உறைதல் ஏற்படும். இந்த குருதி உறைதல் பொதுவாக நுரைஈரலில் யுள்ள இரத்தக்குழாய்களில் ஏற்படுகின்றது... இந்த நிலைமை சில மருந்துகள் மூலமும், செயற்கை சுவாசம் வழங்குவதன் மூலமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில வேளை இந்த இரத்த ஊரைதல் அதிகமாக இருந்தால் சிகிச்சை பலனளிக்காது.
ஆகவே இங்கு அதிகமான covid மரணங்கள் தொற்றா நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத போதே நிகழ்ந்துள்ளது...
ஆகவே இந்த covid தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் எனில் சுகாதார பழக்க வழக்கங்களை பேணி நடப்பதோடு, தொற்றா நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
Dr. எஸ்.அஹமட் பரீட்
MBBS, MD
உடற்கூற்று வைத்திய நிபுணர்
அக்கரைப்பற்று ஆதார வைத்திசாலை.
කොරෝනා සහ බෝවන රෝග.
ශ්රී ලංකාවේ කෝවිඩ් 19 ආසාදනයෙන් පෙළෙන සංඛ්යාව 31000 ඉක්මවා ඇත. මෙම ආසාදිත 19 ආසාදනයෙන් මියගිය සංඛ්යාව 146 කි. (යාවත්කාලීන කිරීම 11 දෙසැම්බර් 2020 8 ප.ව 15). මේ වන විට ශ්රී ලංකාවේ මෙම කොරෝනා බලපෑම හේතුවෙන් සිදුවන මරණ අනුපාතය 0.46% කි. ඒ කියන්නේ කොරෝනා ආසාදනවලින් 99.54% ක් මුළුමනින්ම සුව වී ඇත. ගෝලීය වශයෙන්, ශ්රී ලංකාවේ පවා මේ දක්වා කොරෝනා වයිරසය සුව කිරීමට කිසිදු
ඉතින් ශ්රී ලංකාවේ මිනිසුන්ගෙන් 99.54% ක් සුවය ලබන්නේ කෙසේද? කොරෝනා ආසාදනය ඇති පුද්ගලයින් කොරෝනා ප්රතිකාර මධ්යස්ථාන වෙත ගෙන යන අතර බොහෝ විට අත් සේදීම, ප්රමාණවත් තරම් ජලය පානය කිරීම, ප්රතිශක්තිකරණ පද්ධතිය වැඩි කරන ආහාර අනුභව කිරීම සහ ව්යායාම කිරීම වැනි ක්රියාකාරකම්වල නිරත වේ. මෙම කාලය තුළ ශරීරයේ ප්රතිශක්තිකරණ පද්ධතිය කොවිට් 19 වෛරසයට එරෙහිව ප්රතිදේහ නිපදවන අතර එය කොරෝනා ආසාදනයකින් පෙළෙන පුද්ගලයෙකු සුව කරයි.
එහෙනම් ඇයි අනිත් අය මැරෙන්නේ?
මියගිය මෙම පුද්ගලයින් 146 දෙනාගේ පූර්ව රෝගී තත්වයන් දෙස බැලුවහොත්, අතිමහත් බහුතරයකට (96%) නිදන්ගත බෝ නොවන රෝග තිබේ.
නිදසුනක් වශයෙන්, දියවැඩියාව, අධි රුධිර පීඩනය, හෘද රෝග, වකුගඩු රෝග, අක්මා රෝග සහ පිළිකා ඇති පුද්ගලයින්. මින් අදහස් කරන්නේ මෙම රෝග ඇති පුද්ගලයින්ට කොරෝනා වැළඳුනහොත් ඔවුන් මිය යනු ඇති බවයි, නමුත් එවැනි රෝග ඇති පුද්ගලයින් ඔවුන්ගේ ආසාදන කෙරෙහි අවධානය යොමු නොකරන අතර නිසි ation ෂධ සමඟ රෝගය පාලනය නොකරන්නේ නම්, එය නියුමෝනියාව හා මරණයට හේතු විය හැක, එය අනෙකුත් අවයවවල ක්රියාකාරිත්වයට බලපායි.
මෑත වසරවලදී, හුදකලා හෝ ප්රතිකාර වලදී ස්ථාවර හෘද රෝග ඇති පුද්ගලයින් හදිසියේ මිය යන බවට වාර්තා වී තිබේ. එය කොරෝනා ආසාදනයක්, මානසික අවපීඩනය, අධි රුධිර පීඩනය සහ කැටචොලමයින් වැඩිවීමක් ඇති වේ යන බිය නිසා ඇතිවන දරුණු හෘදයාබාධයකි.
මීට අමතරව, කිරීටක හෘද රෝග සම්පූර්ණයෙන්ම සෞඛ්ය සම්පන්න පුද්ගලයින් තුළ මාරාන්තික විය හැකිය. එනම්, ශරීරයේ රුධිර නාලවල අසාමාන්ය ලෙස රුධිර කැටි ගැසීම සිදුවන්නේ කෝවිඩ් වෛරසයට එරෙහිව අපගේ ශරීරයේ ප්රතිශක්තිකරණ පද්ධතියේ ඇති රසායනික ද්රව්යවල ඇති ගැටළු හේතුවෙනි. මෙම රුධිර කැටිය සාමාන්යයෙන් පෙනහළු වල ඇති රුධිර නාල වල හට ගනී ... මෙම තත්වයට ඇතැම් ations ෂධ සහ කෘතිම ශ්වසනය සමඟ ප්රතිකාර කළ හැකිය. මෙම ලේ ගැලීම අධික නම් සමහර විට ප්රතිකාර අකාර්යක්ෂම වේ.
බෝවන රෝග පාලනයෙන් තොර වූ විට මෙහි බොහෝ කුරිරු මරණ සිදුවෙයි ...
එමනිසා, මෙම කෝවිඩ් ආසාදනයෙන් මියගිය සංඛ්යාව වළක්වා ගැනීමට නම්, සනීපාරක්ෂක පිළිවෙත් පවත්වා ගත යුතු අතර බෝවන රෝග පාලනය කළ යුතුය.
එස්. අහමඩ් පරීඩ්
MBBS MD
අක්කරයිපට්ටු සරෝහල.
Few tips for you to cope up with Corona Pendamic
கொறோனா நோய்த் தொற்று பரவும் அபாயமுள்ள வலயமாக எமது பிரதேசம் கருதப்படும் இவ் இக்கட்டான காலகட்டத்தில் நாள் பட்ட நோய்களான உயர் குருதி அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் , சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்களும் அவர்களின் உறவினர்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,.......
Covid19 தொற்றை எம் அன்பான வர்களுக்கு வழங்குவதை தடுக்க தனிமைப்படுத்தல் செயன்முறையை சங்கடமின்றி செயற்படுத்துவோம்....
|
தனிமைப் படுத்தல் செயல்முறையினால் மனம் தளர வேண்டம்.
Let us unite to prevent and control the spread of Covid 19
25 வாரங்களில் பிறந்துவிட்ட நான் பிழைப்பேனா....?
***********************************
2020 செப்டம்பர் 13 மதியம் சுமார் ஒன்றரை மணி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரசவ விடுதியிலிருந்து ஓர் அழைப்பு....
25 வாரங்கள் மட்டும் பூர்த்தியான நிலையில் தாயொருவர் பிரசவ வலியோடு அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதே அந்த அழைப்பு.
இரண்டாம் Trimester நடந்து கொண்டிருக்கும் இது குறைப்பிரசவமா அல்லது கலையும் கருவா என்ற எண்ணம் வைத்தியத்துறையைச் சார்ந்த அனைவருக்கும் இருந்திருக்கும், எங்களுக்கும் இருந்தது.
வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவ மாது சேர்ந்து அந்த தாயின் பிரசவத்தை உலகின் நடைமுறையில் இருக்கும் நியமங்களோடு குறை மாதப் பிரசவத்தை மேற்கொள்கின்றனர். அதுவும் நீர்ப்பை உடையாத நிலையில் சிசுவுடன் சேர்த்து.
பிள்ளை பிறந்தவுடன் 25 வாரங்கள்தானே பிழைக்குமா அல்லது இறந்துவிடுமா என்று யாரும் எண்ணாமல், இந்தப்பிள்ளை பிழைக்கும் என்ற நம்பிக்கையோடு முதலுதவிகள் வழங்கப்பட்டு சிசுக்களைப் பராமரிக்கும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவுக்குள் (NICU) அனுமதிக்கப்படுகிறது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் NICU ஆனது உபகரணங்களிலும் மருந்து வகைகளிலும் தான் வழங்கும் சேவையிலும் ஓர் உயரிய இடத்தில் உள்ள ஓர் அலகாகும்.
குறை மாதத்தில் பிறந்து மூச்சு விட கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தச் சிசுவின் நிறை வெறும் 720கிராம்கள்தான்.
இன்னும் 15 வாரங்கள் அன்னையின் கருப்பையில் வாழ்ந்து அனுபவிக்க வேண்டியதை விட்டுவிட்டு, முன்னரே பிறந்து மருத்துவ உலகிற்கு சவால் கொடுக்கும் இந்தக் குழந்தை ஓர் ஆச்சரியம்தான்.
கருப்பையில் தாய் வழங்கக்கூடிய அனைத்து விடயங்களையும் வெளிச்சூழலில் வழங்க முடியாத போதும் இயன்றவரை அதி உச்ச பொருத்தமான சூழலையும் அதற்குத் தேவையான போசாக்கையும் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் வழங்கும் ஆற்றல் மருத்துவ உலகிற்கு உண்டு, அது எமக்கும் இருக்கின்றது, அல்ஹம்துலில்லாஹ்.
அந்த வகையில் 74 நாட்கள் தொடர் போராட்டத்தின் பின்னனியை சுருக்கமாக கூறின், சிசு வளர்வதற்குரிய அளவான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதும், சுவாசப் பிரச்சினைகளை செயற்கைச் சுவாசக் கருவிகள் கொண்டும் மருந்துகள் கொண்டும் சீர் செய்வதும், இரத்தச் சோகையை இரத்தம் பாய்ச்சி சரி செய்வதும், கிருமித்தொற்றுகளை நீக்குவதும் பாய்மங்கள் வழங்குவதும் மீண்டும் கிருமித்தொற்று ஏற்படா வண்ணம் கவனத்தோடு செயற்படுவதும், தேவையான போசாக்கினை அவ்வப்போது வழங்குவதும், உடற்றொழிலியல் கூறுகளை சீராக ஆய்வு செய்வதும் என பல்வேறு கட்டங்களைத்தாண்டி சிசுவின் நிறை 1200 கிராம்களை இந்த 74 நாட்களில் அடைந்தது.
சிசுவைப்பிரசவித்த தாயின் உளவியலை ஆராய்ந்து அதனை இந்தப்பிள்ளையை பராமரிக்கக் கூடிய நிலைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து வகையான ஆலோசனைகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டு, வீடு சென்றால் ‘இந்தத் தாய் பராமரிப்பாள்’ என்ற நம்பிக்கை எங்களுக்கு வரும் வரையில் காத்திருந்து சுகதேகியாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளோடு 74 நாட்கள் நிறைவில் வீடு அனுப்பப்படுகிறது அந்த சிசு.
இறைவனுக்கே எல்லாப் புகழும் எனக்கூறி வைத்தியசாலையின் NICU விற்கு தேவையான உபகரண வசதிகளை பெற்றுத் தந்த வைத்திய அத்தியட்சகர் Dr IM ஜவாஹிர், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் Dr PM அர்ஷாத் அஹமட், சிரேஷ்ட வைத்தியர்களான Dr அப்துல் ரஷாக், Dr ரயீசா, Dr சமோதி, Dr பஷீர், Dr தினுக, Dr முரளி, Dr மயூரன் Dr பினுஜ் ஆகியோருக்கும் முதிரா பிள்ளைகளின் நலனில் மிகவும் அக்கரோயோடு தொடர்ந்தும் 24 மணி நேரமும் தவணை முறையில் கவனித்து பாலூட்டி சீராட்டி இரண்டாவது தாயாக இருந்து வளர்த்த NICU தாதிய உத்தியோகத்தர்களுக்கும், சுகதார உதவியாளர்களுக்கும், தொற்று நீக்கல் பிரிவு பணியாளர்கள், வைத்திய ஆய்வுகூடப்பிரிவு பணியாளர்கள், இரத்த வங்கியின் பணியாளர்கள் மற்றும் விஷேடமாக பிரசவ கூட பணியாளர்கள்நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.
ரஷ்ய அன்னையின் பார்வையில் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையின் சிறுவர் நல விடுதி (4ஆம் விடுதி)
******************************************
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் அண்மையில் உள்ளக சிகிச்சையைப் பெற்றுச் சென்ற ரஷ்யா நாட்டைச் சேர்ந்த சிறுவனையும் அவனது தாயையுமே இந்த வீடியோவில் காண்கின்றீர்கள்.
ஆரம்பத்தில் நிணநீர்க்கணுவில் ஏற்பட்ட ஒரு தொற்று என உள்ளக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் Ludwig angina எனும் அதி தீவிர சிகிச்சைக்கு உள்ளாக வேண்டிய நோயாக இருக்குமோ எனும் அளவிற்கு இச்சிறுவனது தாடையும் கழுத்துப்பகுதியும் வீங்கி இருந்தது.
கிட்டத்தட்ட 2 கிழமைகளுக்கு மேலாக 4 ஆம் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று பூரண சுகத்தோடு வெளியாகிச் சென்ற அந்தத் தாயின் அன்பு நிறைந்த வார்த்தைகளை வாழ்த்து மழையாக கொட்டிச் சென்றாள் ரஷ்யா நாட்டு அன்னை.
மருத்துவம் என்று வந்து விட்டால் நோயாளியின் நோயை மாத்திரமே கவனத்தில் எடுத்து பேதங்களின்றி சிகிச்சையளிப்பதே மருத்துவ தர்மம். அந்த வகையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையும் சிறுவர் நல விடுதி ஊழியர்களும் தங்களது கடமைகளை சரிவரச் செய்துள்ளார்கள் என்பது மகிழ்வே.
அந்த வகையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr IM ஜவாஹிர், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் Dr PM அர்ஷாத் அஹமட் மற்றும் வைத்திய உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள் எல்லோரும் இந்த ரஷ்ய அன்னையின் பாராட்டுக்குரியவர்கள்.
ரஷ்ய அன்னை என்ன சொல்கிறார் என்பதை நீங்களும் கேட்டுப்பாருங்கள்! ( video)
ரஷ்ய அன்னையின் பார்வையில் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையின் சிறுவர் நல விடுதி (4ஆம் விடுதி)
******************************************
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் அண்மையில் உள்ளக சிகிச்சையைப் பெற்றுச் சென்ற ரஷ்யா நாட்டைச் சேர்ந்த சிறுவனையும் அவனது தாயையுமே இந்த வீடியோவில் காண்கின்றீர்கள்.
ஆரம்பத்தில் நிணநீர்க்கணுவில் ஏற்பட்ட ஒரு தொற்று என உள்ளக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் Ludwig angina எனும் அதி தீவிர சிகிச்சைக்கு உள்ளாக வேண்டிய நோயாக இருக்குமோ எனும் அளவிற்கு இச்சிறுவனது தாடையும் கழுத்துப்பகுதியும் வீங்கி இருந்தது.
கிட்டத்தட்ட 2 கிழமைகளுக்கு மேலாக 4 ஆம் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று பூரண சுகத்தோடு வெளியாகிச் சென்ற அந்தத் தாயின் அன்பு நிறைந்த வார்த்தைகளை வாழ்த்து மழையாக கொட்டிச் சென்றாள் ரஷ்யா நாட்டு அன்னை.
மருத்துவம் என்று வந்து விட்டால் நோயாளியின் நோயை மாத்திரமே கவனத்தில் எடுத்து பேதங்களின்றி சிகிச்சையளிப்பதே மருத்துவ தர்மம். அந்த வகையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையும் சிறுவர் நல விடுதி ஊழியர்களும் தங்களது கடமைகளை சரிவரச் செய்துள்ளார்கள் என்பது மகிழ்வே.
அந்த வகையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr IM ஜவாஹிர், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் Dr PM அர்ஷாத் அஹமட் மற்றும் வைத்திய உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள் எல்லோரும் இந்த ரஷ்ய அன்னையின் பாராட்டுக்குரியவர்கள்.
ரஷ்ய அன்னை என்ன சொல்கிறார் என்பதை நீங்களும் கேட்டுப்பாருங்கள்! ( video)
கோவிட் 19 வக்சீன் ரெடியாகி விட்டதா? இனி கொண்டாடலாமா?
Dr PM Arshath Ahamed MBBS MD PAED
நவம்பர் 9 ஆம் தேதி, நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஃபைசர் மற்றும் ஜெர்மன் நிறுவனமான பயோன்டெக் ஆகியவை தங்களது கொரோனா வைரஸ் தடுப்பூசி 90% மேலாக பயனுள்ளதாக இருப்பதைக் குறிக்கும் பூர்வாங்க தரவுகளை வழங்கியிருக்கின்றன. இதன் மூலம் கொரோனா வக்சீன் கண்டுபிடிப்பில் புதிய திருப்பு முனை, நம்பிக்கை ஒளிக்கீற்று உருவாகி இருக்கிறது. 3 ஆம் கட்ட சோதனைகளில் உள்ள மற்றய பிற தடுப்பூசிகளும் விரைவில் பயனுள்ளதாக இருக்கும் என்ற தகவல்கள் வெளிவரக் கூடும் என்பதற்கு இந்த அறிவிப்பு கட்டியமாக அமைந்திருக்கின்றது.
வக்சீன் கண்டுபிடிப்பின் டைம் லைன்.
👍மே மாதத்தில் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஒரு mRNA தடுப்பூசியின் இரண்டு (version )பதிப்புகளில் கட்டம் 1/2 சோதனையைத் தொடங்கின.
👍இரண்டு பதிப்புகளும் தன்னார்வலர்களி (volunteers)ல் SARS-CoV-2 க்கு எதிராக ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வதையும், வைரஸுக்கு பதிலளிக்கும் T செல்கள் எனப்படும் நோயெதிர்ப்பு செல்களை உருவாக்குவதையும் அவர்கள் கண்டறிந்தனர். அதிலும் குறிப்பாக BNT162b2 எனப்படும் ஒரு பதிப்பு, காய்ச்சல் மற்றும் சோர்வு போன்ற குறைவான பக்க விளைவுகளையே உருவாக்கியது என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர், எனவே அவர்கள் அதை கட்டம் 2/3 சோதனைகளுக்கு நகர்த்த தேர்வு செய்தனர்.
👍ஜூலை 27 அன்று, அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பிற நாடுகளில் 30,000 தன்னார்வலர்களுடன் கட்டம் 2/3 சோதனை தொடங்கப்படுவதாக இந்த நிறுவனங்கள் அறிவித்தன.
👍இந்த வக்சீன்களின் சைட் எபக்ட் பற்றிய ஒரு இடைக்கால ஆய்வில், நிறுவனங்கள் முதல் தகவல்களை பெற்று ஆராய்ந்த பிறகு, தன்னார்வலர்களில் பெரும்பாலும் லேசான மற்றும் மிதமான பக்க விளைவுகளே ஏற்படுவது அறியப்பட்டது.
👍செப்டம்பர் 12 அன்று, ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தங்கள் (US Trial) ஆய்வை 43,000 அமரிக்க பங்கேற்பாளர்களுக்கு விரிவுபடுத்த முற்படுவதாக அறிவித்தன.
அதைத் தொடர்ந்து அடுத்த மாதம், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசியை பரிசோதிக்க ஆரம்பிக்க அவர்கள் அனுமதியையும் பெற்றனர் - அவ்வாறு செய்த முதல் அமெரிக்க சோதனையாக இது காணப்படுகிறது.
👍செப்டம்பர் மாதத்தில், ஃபைசரின் தலைமை நிர்வாகி Dr Albert Bourla , கட்டம் 3(Phase 3) சோதனை முடிவில் ஒக்டோபர் மாதத்திற்குள் தடுப்பூசி வேலை செய்ததா? இல்லையா? என்பதைக் காட்ட போதுமான முடிவுகளை வழங்க முடியும் என்று கூறினார். ஆனாலும் ஒக்டோபர் 27 ல், டாக்டர் Bourla , ஆய்வில் உள்ள தன்னார்வலர்கள் போதுமான அளவு கோவிட் -19 தொற்றுக்களை அனுபவிக்கவில்லை என்று அறிவித்தார். இதன் காரணமாக இந்த ஆய்வை முடிப்பதில் சிக்கல்கள் காணப்பட்டன.
👍அதிஷ்டவசமாக இறுதியாக, நவம்பர் 8 ஆம் தேதி, ஆய்வுகளில் கோவிட் -19 இன் முதல் 94 தொற்றாளர்களில் செய்யப்பட்ட பகுப்பாய்வுகள்(Analysis) நல்ல ஆரம்ப முடிவுகளை அளித்திருக்கின்றன என்ற நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. இதன்படி ஃபைசர் இப்போது நவம்பர் இறுதிக்குள் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னதான் இருந்தாலும் தொழிற்சாலையிலிருந்து மக்களின் கைகளுக்கு தடுப்பூசி பெறுவதற்கு இன்னும் சில பெரிய சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. மாடர்னாவின் தடுப்பூசியைப் போலவே, ஃபைசர் மற்றும் பயோஎன்டெக்கின் தயாரிப்பும் mRNA வை அடிப்படையாகக் கொண்டது. இது அதிக குளிர் நிலையில் (deep freeze) வைக்கப்படாவிட்டால் செயலிழந்து விடும். ஆகவே, தடுப்பூசி உட்செலுத்த தயாராக இருக்கும் வரை மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் (மைனஸ் 112 டிகிரி பாரன்ஹைட்) வரை குளிர்விக்க வேண்டும். இதற்காக ஃபைசர் விஷேட கொள்கலன் பெட்டிகளை வடிவமைத்து வருகிறது. இதை சாத்திய படுத்தினால் மாத்திரமே இந்த வக்சீன்களை உலகநாடுகளுக்கு அனுப்பி வைக்க முடியும்.
நமது பிரார்த்தனைகள் வெற்றி பெற, எல்லா தடைகளையும் தாண்டி நான்காவது கட்டத்தையும் தாண்டி (phase 4) இந்த வெக்சீன் வெற்றி பெற இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும்.
Dr PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவர்
ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்று.
வகசீன் தாயாரிப்பின் படி நிலைகளை அறிந்து கொள்ள இந்த பதிவை படிக்கவும்.
https://m.facebook.com/story.php?story_fbid=672027643524415&id=394132221313960
எமது வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் கடமையில் ஈடுபடும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தாங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் அல்லது அவ்வாறு தொற்றுக்குள்ளான ஒரு வரோடு தொடர்புபட்டிருக்கலாம் என தங்களைத் தாங்களே சந்தேகிக்குமிடத்தோ அல்லது இக்கொரோனா நோயினுடைய ஏதேனும் ஆரம்ப நோய் அறிகுறிகளை தாங்களாகவே உணருமிடத்தோ அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான தெளிவினை ஏற்படுத்துவதற்காக எமது வைத்தியசாலையின் விஷேட பொது வைத்திய நிபுணர் Dr. S.A. பரீட் அவர்களுடன் சுகாதார பராமரிப்பு தரம் மற்றும் பாதுகாப்பு பிரிவும் சேர்ந்து உருவாக்கிய இத் தெளிவூட்டல் கானொளியினுாடாக அனைத்து தரப்பினர்களும் பயன்பெறுக
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி நூற்களை அன்பளிப்புச் செய்து, நூலகமொன்றினை தாபித்து பராமரிப்புச் செய்வதற்கான பெறுமதிமிக்க ஆலோசனைகளையும் வழங்கிய கவிஞர் ரூகா அவர்களுக்கு வைத்தியசாலை நிர்வாகம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறது
We show our gratitude and appreciation to the great poet and social wellwisher Mr. Rooka for your donation of valuable book collection and sharing your great thoughts and guidance in the process of establishing and enlarging our hospital library
அக்கரைப்பற்று ஆதார வைத்திசாலைக்கு மாதாந்த கிளினிக் வருவோரின் கவனத்துக்கு....!
உங்களுக்கு நாட்பட்ட நோய் சம்பந்தமாக வேறு ஏதும் போதிய நோய் அறிகுறிகள் இல்லாதவிடத்து தயவு செய்து மாதாந்த கிளினிக் க்கு வரவேண்டாம்🚷🚷🚷..
.. நீங்கள்
☎️ 0672052068
📞 0771981879. ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு உங்கள் கிளின்க் இலக்கத்தை கூறுங்கள்...
(8am to 4pm, திங்கள் முதல் வெள்ளி வரை)
உங்களுக்கான மருந்துகள் பொதிசெய்யபட்டு hospital பாதுகாப்பு உத்தியோகத்தர் அறை ( கதவு C) யில் வைக்கப்படும்... உங்களுக்கான டோக்கன் நம்பர் , நீங்கள் வருகை தர வேண்டிய திகதி, நேரம் என்பன தொலைபேசி வாயிலாக உங்களுக்கு அறிவிக்கப்படும்,
உரிய நேரத்தில் உங்களுக்கான மருந்துகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் மாதாந்த கிளினிக் வருபவராக இருந்து , உங்கள் நோய் நிலமை அதிகரித்து இருந்தால், ஒரு வைத்தியரை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று இருந்தால் மாத்திரம், செவ்வாய் , வியாழன் போன்ற கிழமைகளில் உங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் நேரத்துக்கு சுகாதார நடைமுறைகளை பேணி கிளினிக் க்கு வரலாம்.
අක්කරයිපත්තු මූලික රෝහලේ මාසික සායන සදහා පැමිනෙන්නන්ගේ අවධානය සඳහා ....!
ඔබේ නිදන්ගත රෝගය හැර වෙනත් රෝග ලක්ෂණ ඇත්නම් පමක් කරුණාකර මාසික සායනයට පැමිනෙන්න.
ඔබ
☎️ 06720520687
📞0771981879 අමතා, ඔබගේ සායන අංකය අපට කියන්න ...
(උදේ 8 සිට සවස 4 දක්වා, සඳුදා සිකුරාදා දක්වා)
ඔබගේ ඖෂධ ඇසුරුම් කර රෝහල් ආරක්ෂක මුර කාමරයේ (දොරටුව C හි) තබනු ඇත ... ඔබගේ ටෝකන් අංකය, ඔබ පැමිණිය යුතු දිනය සහ වේලාව දුරකථනයෙන් ඔබට දන්වනු ලැබේ,
ඔබේ ඖෂධ නියමිත වේලාවට ලබා ගන්න.
ඔබේ නිදන්ගත රෝග තත්වය නරක අතට හැරුනහොත්, එසේ නොමැති නම් වෙනත් රෝගී තත්වයක් ඇති වුවහොත්, වෛද්යවරයකු හමුවීමට අවශ්ය නම් පමණක්, ඔබ මාසික සායනට අදාල වේලාව වෙන් කරගෙන අඟහරුවාදා සහ බ්රහස්පතින්දා දිනවල සායනයට පැමිණිය හැක . සායනයට පැමිණීමට පෙර සනීපාරක්ෂක උපදෙස් නිසි ලෙස පිළිපැදීම අත්යාවශ්ය බව කරුණාවෙන් සලකන්න.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Address
237 Colombo/Batticaloa Highway
Akkaraipattu
Divisional Hospital, Panankadu
Akkaraipattu
Leading health care provider in the Alayadivembu Divisional Secretariate area and an emerging health institute in Kalmunai Regional Director of Health Services Area.
Main Street
Akkaraipattu, 32400
Wound Care is a hospital in Akkaraipattu. The hospital is specialized for Diabetics Wound Management
Akkaraipattu, 32400
We do Consultant Services, OPD, Dental Clinic and Laboratory Services Hijama cupping therapy