Greater Atlanta Tamil Sangam
Nearby non profit organizations
Peachtree Pkwy
30092
Greater Atlanta Tamil Sangam (GATS) is a non-profit organization devoted to preserve and promote our
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம், நமது உறுப்பினர்களுக்காக மாண்புமிகு திரு . தி. வேல்முருகன் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அனைவரும் வருக.
#2024
குடும்பத்துடன் ஒரு நடைபயணம்!
கடந்த ஏப்ரல் மாதம் 'விக்கெரி கிரீக் டிரெய்லில்' நடைபெற்ற நடைபயணத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒரு குடும்ப நடைபயணத்தை ஏற்பாடு செய்கிறோம். நமது சங்க உறுப்பினர்களின் நலனுக்காக மேலும் நடைபயணங்கள் ஏற்பாடு செய்யப்படவிருக்கின்றன. இந்நிகழ்வில் கலந்து கொள்ள கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.
https://tinyurl.com/GatsHike2024July
GATS Family Hike!
Following the great success of the hiking event we conducted in Vickery Creek Trail earlier in April, we will be having a family hike later this month. We will continue to organize more hikes keeping in mind the wellness of the members of our Sangam. Please sign up using the link below.
https://tinyurl.com/GatsHike2024July
#2024
சுதந்திர தின வாழ்த்துகள்
அனைவருக்கும் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் இனிய அமெரிக்க சுதந்திர தின வாழ்த்துகள்.
Happy Independence Day
GATS wishes everyone a Happy American Independence Day.
மூத்தோர் சந்திப்பு - நன்றி நவிலல்
கடந்த ஜூன் 22ஆம் தேதி சனிக்கிழமை, கம்மிங் நகரின் பௌலர் பூங்காவின் 3வது கூடாரத்தில் "மூத்தோர் சந்திப்பு" நிகழ்ச்சி நமது அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் சார்பாக நடந்தது. அதில் இந்தியாவில் இருந்து வந்திருந்த நமது பெற்றோரும், அட்லாண்டாவில் வசிக்கும் மூத்தோர்களும் மற்றும் நமது சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சங்கத்தின் இயக்குநர் குழுத்தலைவர் திருமிகு அண்ணாதுரை அவர்கள் நிகழ்ச்சியை வரவேற்புரையுடன் தொடங்கி வைத்தார்.
கலந்து கொண்ட பெரியோர்கள் அனைவரும் தங்களது அமெரிக்கச் சுற்றுலாவில் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது பலரும் பல நெகிழ்ச்சியான தருணங்களையும், தமது பேரக்குழந்தைகளின் வளர்ப்பு, படிப்பு, தத்தம் மகன்/மகள் குடும்பத்தின் நண்பர்கள் உடனான உறவுமுறைகள், மற்றும் இங்குள்ள பழக்கவழக்கங்களையும் பற்றித் தமது புதிய நண்பர்களுடனும் நம்முடனும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் திருமிகு சூர்யகுமார் அவர்களும் திருமதி நித்யா அவர்களும் சேர்ந்து கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் அனைவரும் தம் கருத்துகளை பகிர்ந்து கொண்டது செவிக்கும் மனதுக்கும் விருந்தாக அமைந்தது. நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் மற்றும் பலகாரங்கள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்குப் பிடித்தமான பழச்சாறு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் சம்பத் ஐயா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இயக்குநர் குழு உறுப்பினர் திருமிகு சுதாகர் அவர்கள் சிறப்பான வரவேற்புரையின் மூலம் மருத்துவர் அவர்களை வரவேற்றார். தொடர்ந்து மருத்துவர் சம்பத் ஐயா அவர்கள் 'அமெரிக்காவில் குழந்தைகள் வளர்க்கும் முறை' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இது நிகழ்விற்கு வருகை வந்திருந்த பெரியவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நமது சங்கத்தின் 'இளைஞர்கள் இசைக்குழு' குழந்தைகள், திருமிகு சூர்யா மற்றும் திருமிகு ஜெகதீசன் அவர்களின் ஏற்பாட்டில் அருமையான இசை நிகழ்ச்சியை வழங்கினர். இசைக்குழுவில் உள்ள சிறுவர்கள், பெரியவர்கள் ரசிக்கும் வகையில் பழைய இனிமையான பாடல்களை சிறப்பாக பாடியது நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் பூரிப்பில் ஆழ்த்தியது. நிகழ்ச்சியின் இறுதியில் திருமிகு சிவகுமார் அவர்களின் 'இசை மழை' என்ற இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து பங்கேற்பாளர்களும் அவருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் சங்கத்தின் சார்பாக இயக்குனர் குழு உறுப்பினர் திருமிகு கிருத்திகா பாரதி மற்றும் திருமிகு சூரியகுமார் சிறப்பு விருந்தினருக்குப் பொன்னாடையும் பூங்கொத்தும் அளித்து சிறப்புப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்துப் பெரியோருக்கும் சங்கத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்ச்சங்கத் தலைவர் திருமிகு வத்சலா சௌந்தரபாண்டியன், இயக்குநர் குழு உறுப்பினர்கள் திருமிகு சுதாகர், திருமிகு அன்பு செங்கோடன், திருமிகு இராஜி பெருமாள் மற்றும் சங்க நிர்வாகிகள் திருமிகு சித்தநாதன், திருமிகு ராஜராஜன், திருமிகு அருள், திருமிகு சங்கர், திருமிகு ஜெய கிருஷ்ணன், திருமிகு அமிர்தவர்ஷினி மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் சங்கத்தின் செயலாளர் திருமிகு சித்தநாதன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதாக நிறைவேறியது. அதில் அவர் நிகழ்ச்சி ஏற்பாட்டில் உதவிய தன்னார்வத் தொண்டாளர்களுக்கும், புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்த திருமதி அபர்ணா சூர்யா அவர்களுக்கும், உரை ஆற்றிய பெரியவர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
எதிர்வரும் சங்க நிகழ்வு - முத்தமிழ் விழா
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் 2024ஆம் ஆண்டுக்கான முத்தமிழ் விழா விரைவில் நடக்கவிருக்கிறது. மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும்.
Upcoming GATS Event - Muthamizh Vizha
GATS 2024 Muthamizh Vizha is coming soon. More details will be shared shortly.
எதிர்வரும் சங்க நிகழ்வுகள் - விளையாட்டு போட்டிகள்
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் 2024ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடக்கவிருக்கின்றன. மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும்.
Upcoming GATS Events - Sports Competitions
GATS 2024 Sports Competitions are coming soon. More details will be shared shortly.
2024 கோடை பயிற்சி முகாமுக்கான முன்பதிவு
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் 2024ஆம் ஆண்டுக்கான கோடை பயிற்சி முகாமில் பல வகுப்புகள் நடக்கவிருக்கின்றன. இதில் பங்கேற்கக் கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.
பதிவு செய்ய இறுதி நாள்: சூலை 5, 2024 (வெள்ளிக்கிழமை)
https://tinyurl.com/2024-GATS-Summer-camp-signup
GATS 2024 Summer Boot Camp Sign-up
Coaching will be provided in various topics during the GATS Summer Boot camp. Please sign-up using the below link.
Deadline to register: July 5, 2024 (Friday)
https://tinyurl.com/2024-GATS-Summer-camp-signup
குடும்பத்துடன் யோகாசனம் - புகைப்படப் போட்டி
Yoga with Family Photo Contest
The “Yoga with Family” Video Contest, is being organized by Ministry of AYUSH and ICCR to raise awareness about Yoga and to inspire people to prepare for and become active participants in the observation of International Day of Yoga 2024. The contest supports participation through MyGov InnovateIndia platform of the Government of India and is open to participants from all over the world. Participate now.
More details: https://innovateindia.mygov.in/yoga-with-family/
உலக யோகாசன நாள்
International Day of Yoga
Yoga is an ancient physical, mental, and spiritual practice that originated in India. Recognizing its universal appeal, on 11 December 2014, the United Nations proclaimed 21 June as the International Day of Yoga by resolution 69/131.Yoga was inscribed on the Representative List of the Intangible Cultural Heritage of Humanity in 2016.
The International Day of Yoga aims to raise awareness worldwide of the many benefits of practicing yoga. This year marks the 10th anniversary of International Day of Yoga.
To mark the occasion, the Consulate will organize an event at 8 am at Newtown Park 3150, Old Alabama Road, Johns Creek, Georgia-30022 on Sunday, June 23, 2023.
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் மூத்தோர் சந்திப்பு
உற்சாகமான கேளிக்கை நிகழ்ச்சிகள் நிரம்பிய இந்நிகழ்ச்சியில் உங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளுங்கள்.
நாள்: ஜூன் 22, 2024 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 5 மணி முதல் 8 மணி வரை
இடம்: பௌலெர் பூங்கா - கூடாரம் #3
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும்.
https://tinyurl.com/GATS2024-Senior
GATS Senior Event - Meet and Greet
Please join with your family for the event filled with exciting and fun filled activities.
Date: June 22,2024 (Saturday)
Time: 5:00pm - 8:00pm
Location: Fowler Park - Pavilion #3
Please register for the event using the link below.
https://tinyurl.com/GATS2024-Senior
** உரைவீச்சு **
தாய்மொழியின் கைகோத்தபடி
தம்மை உயர்த்திக் கொண்டவர்கள்!
தொன்மைத் தமிழ் மொழியின்
வேர்களைத் தேடும் மனிதர்கள்!
நாளைய வரலாற்றை உருவாக்க
இன்று பாடுபடும் மேன்மக்கள்!
தலைமுறை தாண்டியும் எம் தமிழ் வெல்லும் வாழும் என்று உரக்கச் சொல்லி
செயற்கரியச் செய்யும்
செயல் வீரர்கள்!
உங்கள் செயல் படகு செல்ல
எங்கள் திசையில் காற்றாக
இருப்பதில் பெருமை கொள்கிறது
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்!
நமது தாய்த் தமிழ் உறவுகளை வரவேற்று அவர்களின் உரை கேட்க நமது அட்லாண்டா உறவுகளை அன்போடு அழைக்கின்றோம்!
வாருங்கள் செயற்கரிய செய்வோம்!
உரைவீச்சு
வழங்குபவர்கள்
திருமிகு ஆர். பாலகிருஷ்ணன்
மதிப்புறு ஆலோசகர், சிந்துவெளி ஆய்வு மையம்
தலைப்பு: சிந்துவெளிப் புதிரும் சங்க இலக்கியத் திறவுகோலும்
திருமிகு சுந்தர் கணேசன்
இயக்குநர் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
தலைப்பு: தமிழ் அறிவு வளாகம்
நாள்: ஜூலை 2, 2024 (செவ்வாய்க்கிழமை)
நேரம்: மாலை 5 மணி முதல் 7.30 வரை
இடம்: ஆல்ஃபரெட்டா பொது நூலகம் / Alpharetta Public Library
10 Park Plz, Alpharetta, GA 30009
#2024
தந்தையர் நாள் வாழ்த்துகள்
அனைவருக்கும் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் தந்தையர் நாள் வாழ்த்துகள்!
Father's Day Wishes
GATS wishes everyone a Happy Father's Day!
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் மூத்தோர் சந்திப்பு
உற்சாகமான கேளிக்கை நிகழ்ச்சிகள் நிரம்பிய இந்நிகழ்ச்சியில் உங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளுங்கள்.
நாள்: ஜூன் 22, 2024 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 5 மணி முதல் 8 மணி வரை
இடம்: பௌலெர் பூங்கா - கூடாரம் #3
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.
https://tinyurl.com/GATS2024-Senior
GATS Senior Event - Meet and Greet
Please join with your family for the event filled with exciting and fun filled activities.
Date: June 22, 2024 (Saturday)
Time: 5:00pm - 8:00pm
Location: Fowler Park - Pavilion #3
Please register for the event using the link below.
https://tinyurl.com/GATS2024-Senior
வாழ்த்துகள் திருமிகு எழிலன் ராமராஜன்
வட அமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவையின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நம் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், இயக்குனர் குழுவின் முன்னாள் தலைவருமான திருமிகு எழிலன் ராமராஜன் அவர்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கம்.
Congratulations Mr. Ezhilan Ramarajan
GATS takes pride in congratulating our long time member and past president of the GATS Board, Mr. Ezhilan Ramarajan for getting elected as the Vice President to the Board of FeTNA.
2024 கோடை பயிற்சி முகாமுக்கான முன்பதிவு
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் 2024ஆம் ஆண்டுக்கான கோடை பயிற்சி முகாமில் பல வகுப்புகள் நடக்கவிருக்கின்றன. இதில் பங்கேற்கக் கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.
பதிவு செய்ய இறுதி நாள்: ஜூன் 3, 2024 (திங்கள்)
https://tinyurl.com/2024-GATS-Summer-camp-signup
GATS 2024 Summer Boot Camp Sign-up
Coaching will be provided in various topics during the GATS Summer Boot camp. Please sign-up using the below link.
Deadline to register: June 3, 2024 (Monday)
https://tinyurl.com/2024-GATS-Summer-camp-signup
தமிழீழ இனப்படுகொலைக்கான 15ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் நினைவேந்தல்
போரில் தம்முயிர் நீத்த தமிழ் உறவுகளுக்கு, தமிழின அழிப்பு நினைவு நாளில், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் அகவணக்கம்!
இணைய வழியில் இணையுங்கள்
மே 18 (சனிக்கிழமை) மாலை 7.00மணி
https://tinyurl.com/GATS2024-May18
நம் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் 2024 இளைஞர் இசைக்குழுவின் அன்னையர் நாள் சிறப்பு படைப்புகள்.
GATS 2024 Youth Band’s Mother’s Day special creations.
https://tinyurl.com/GATS2024MothersDaySpecial
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the organization
Telephone
Website
Address
6050 Peachtree Pkwy, STE 240/253
Norcross, GA
30092
100 Castor Drive
Norcross, 30071
SingleParent411 is an online resource devoted to addressing the unique and complex needs faced by today’s single parent. A source of inspiration, encouragement and support. A speci...
6050 Peachtree Pkwy, Suite 240/199
Norcross, 30092
SAIS is a membership organization that serves and accredits independent schools. www.sais.org
1000 Center Place
Norcross, 30093
The Salvation Army Metro Atlanta Area Command serves those in need throughout Butts, Cherokee, Clayton, Cobb, Coweta, Dekalb, Douglas, Fayette, Fulton, Gwinnett, Henry, Rockdale, a...
Norcross, 30071
Interested in Playing. Visit www.mashahockey.com or E-Mail [email protected] for more information.
Norcross, 30093
Georgia's 4th congressional district in parts of Rockdale, Gwinnett, Dekalb. and Newton. Share about
Norcross, 30071
Welcome to TechLatino: The National Association of Latinos in Information Sciences and Technology (L
6825 Jimmy Carter Boulevard Ste. 1760 Norcross
Norcross, 30071
The Haywood Initiative seeks to create a sustainable world for current and future generations.
Norcross, 30093
Founded in July 2019, the Angele Rose Foundation is a 501(c)(3) nonprofit organization based on the belief that every child deserves a good education. Our mission is simple. We edu...
4944 Heavner Avenue
Norcross, 30071
Team, Creative, World, Very, Tube, Great, Trends, Smile
Norcross
Serving as a Community Resource which helps to support and build individuals and families with personal development and offer holistic care through counseling, health and wellness ...